ஆசனப் பங்கீட்டுப் பேச்சை இறுதிப்படுத்தியது இ.தொ.கா.

நுவரெலியா மாவட்டத்தில் தனித்துக் களமிறங்கத் தீர்மானித்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, பதுளை ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ்க் கூட்டணியாகப் போட்டியிடவுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கடந்த மூன்று நாள்களாகத் தொடர்ச்சியாக நடைபெற்ற சந்திப்புக்களையடுத்தே இ.தொ.கா. இறுதி முடிவை நேற்று எடுத்துள் ளது.

நுவரெலியா மாவட்டத்தில் ஹங்கு ராங்கத்த, வலப்பன ஆகிய தொகுதிகளைத் தவிர ஏனைய இடங்களில் சேவல் சின்னத்தில் போட்டியிடவுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கண்டி மாவட்டத் தில் பன்வில தொகுதியில் தனித்துக் கள மிறங்கவுள்ளது.

வவுனியா மாவட்டத்திலும் அந்தக் கட்சி தேர்தலைச் சந்திக்கவுள்ளது.கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலிலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சேவல் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

தவற விடாதீர்கள்:  தபால்மூல வாக்களிப்பு: விண்ணப்பிப்புக்கான காலம் நீடிப்பு!

You might also like