வெலிக்கடை படுகொலை ரிட் மனு: விசாரணை அறிக்கைகள் 13 இல்!

2012ஆம் ஆண்டு வெலிக்­கடை சிறைச்­சா­லை­யில் வைத்து, கைதி­கள் 27 பேர் படு­கொலை செய்­யப்­பட்ட விவ­கா­ரம் தொடர்­பில் தாக்­கல் செய்­யப்­பட்ட ரிட் மனு தொடர்­பான விசா­ரணை அறிக்­கை­கள் சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தி­னால் எதிர்­வ­ரும் 13ஆம் திகதி சமர்ப்­பிக்­கப்­ப­டும் என்று மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தில் நேற்று அறி­விக்­கப்­பட்­டது.

மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத் தலை­வர் நீதி­ய­ர­சர் எல்.ரி.பி.தெஹி­தெ­னிய மற்­றும் நீதி­ய­ர­சர் சிரான் குண­ரத்ன ஆகி­யோ­ர­டங்­கிய நீதி­ய­ர­சர் கள் குழாம் முன்­னி­லை­யில், மனு நேற்று எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

அதன்­போது, விசா­ரணை வெளிப்­ப­டை­யாக இருக்­க­வேண்­டும் என­வும், அது தொடர்­பான அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட வேண்­டும் என­வும் கடந்த அமர்­வில் தான் கோரி­ய­மையை மனு­தா­ரர் சார்­பில் முன்­னி­லை­ யான சட்­டத்­த­ரணி ரத்­ன­வேல் சுட்­டிக்­காட்­டி­னார்.

அது­தொ­டர்­பான அறிக்­கை­கள், அடுத்த அமர்­வில் வழங் கப்­ப­டும் என்­றும் சட்­டமா அதி­பர் திணைக்­க­ளம் தெரி வித்திருந்த நிலையில், அந்த அறிக்கை இன்­னும் தயார் இல்லை என்­றும் சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தின் சார்­பில் முன்­னி­லை­யான மூத்த அரச சட்­டத்­த­ரணி மாதவ தென்­ன­கோன், மன்­றில் அறி­வித்­தை­ய­டுத்து, மனு எதிர்­வ­ரும் 13ஆம் திக­திக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­டும் என்று அறி­விக்­கப்­பட்­டது.

தவற விடாதீர்கள்:  ராணு­வம் நடத்­தும் உண­வுத் திரு­விழா

கடந்த ஒக்­ரோ­பர் 17ஆம் திகதி இடம்­பெற்ற அமர்­வின் போது, இரா­ணு­வத்­தி­னர், சிறைச்­சாலை அதி­கா­ரி­கள், பொலி­ஸார் ஆகி­யோ­ரி­டம் புதி­தாக விசா­ர­ணை­கள் இடம்­பெற்று வரு­கின்­றன என்று, சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தின் சார்­பில் முன்­னி­லை­யான மூத்த அரச சட்­டத்­த­ரணி மாதவ தென்­ன­கோன், மன்­றில் அறி­வித்­தி­ருந்­தார்.

75 சத­வீ­த­மான விசா­ர­ணை­கள் முடி­டைந்­துள்­ளன என்­றும் மேல­திக விசா­ர­ணை ­க­ளுக்கு 4 தொடக்­கம் 6 வாரங்­கள் தேவை என்­றும் குறிப்­பிட்­ட­து­டன், முன்­னேற்ற அறிக்கை தாக்­கல் செய்­யப்­ப­டும் என்­றும் கூறி­யி­ருந்­ததார். அத­னை­ய­டுத்தே, மனு நேற்­றை­ய­தி­னம் எடுத்­துக்­கொள்­ளப்­ப­டும் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

பயங்­க­ர­வா­தத் தடைச்­சட்­டத்­தின் கீழ் 2007ஆம் ஆண்டு கைது செய்­யப்­பட்டு, 2009ஆம் ஆண்டு வெலிக்­கடை சிறைச்­சா­லை­யில் தடுத்­து­வைக்­கப்­பட்டு, 2013 ஆம் ஆண்டு சட்­டமா அதி­ப­ரால் விடு­விக்­கப்­பட்ட, டபிள்யூ.எஸ். நந்­தி­மால் சில்வா என்­ப­வ­ரா­லேயே இந்த ரிட் மனு தாக்­கல் செய்­யப்­பட்­டது.

சிறைச்­சா­லை­கள் திணைக்­க­ளத்­தின் பணிப்­பா­ளர் நாய­கம், குற்­றப் புல­னாய்­வுத் திணைக்­க­ளத்­தின் பணிப்­பா­ளர், பொலிஸ்மா அதிபர், சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வளிப்பு அமைச்சர், சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப் பட்டிருந்தார்கள்.

You might also like