யானையில் ரோசி- வெற்றிலையில் சாலி!

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் அர­சி­யல் கோட்­டை­யா­கக் கரு­தப்­ப­டு­கின்ற கொழும்பு மாந­கர சபை­யைக் கைப்­பற்­று­வ­தற்­கான வியூ­கங்­களை வகுப்­ப­தில் பிர­தான அர­சி­யல் கட்­சி­கள் ஆர்­வம்­காட்டி வரு­கின்­றன.

கொழும்பு மாந­கர சபை­யா­னது முக்­கி­யத்­து­வ­மிக்க சபை­யா­கக் கரு­தப்­ப­டு­வ­து­டன், அந்தச் சபை­யில் மேய­ராக பதவி வகிப்­ப­வர், கொழும்பு அர­சின் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ரொ­ரு­வ­ருக்கு நிக­ரான சிறப்­பு­ரி­மை­க­ளைப் பெற்­றி­ருப்­பார்.

மகிந்த ஆட்­சிக்­கா­லத்­தில் ஐக்­கிய தேசி­யக் கட்சி தேர்­தல்­க­ளில் தொடர் தோல்­வி­களைச் சந்­தித்­தி­ருந்­தா­லும் கொழும்பு மாந­கர சபையே அதற்­குக் கைகொ­டுத்­தது.

இவ்­வாறு பல வழி­க­ளி­லும் கொழும்பு மாந­கர சபை­யா­னது முக்­கி­யத்­து­வ­மிக்க சபை­யா­கக் கரு­தப்­ப­டு­கின்­றது. இத­னால்­தான் இம்­முறை அந்­தச் சபை­யைக் கைப்­பற்­றி­விட வேண்­டும் என்­ப­தில் அர­சி­யல் கட்­சி­கள் கங்­க­ணம் கட்­டி­யுள்­ளன.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் சார்­பில் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ரோசி சேனா­நா­யக்­க­வும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் சார்­பில் அசாத் சாலி­யும், சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி சார்­பில் ஒமர் காமி­லும் முதன்மை வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கப்­ப­ட­வுள்­ள­னர் என்று அறி­ய­மு­டி­கின்­றது.

இலங்­கைத் தொழி­லா­ளர் காங்­கி­ர­ஸின் சார்­பில் திரு­கே­தீஸ் செல்­ல­சாமி மேயர் வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­ப­டவுள்ளார்.

தவற விடாதீர்கள்:  பிக்கு படை­யணி பலம்­பொ­ருந்­திய இரா­ணு­வம்!

You might also like