நேஸ்வி பிர­பு­வின் அறிக்கை – பிரிட்­ட­னின் நிலை­ப்பா­டல்ல!

இலங்­கை­யின் பொறுப்­புக்­கூ­றல் விவ­கா­ரங்­கள் தொடர்­பாக பிரிட்­டன் பிர­புக்­கள் சபை­யில், நேஸ்வி பிரபு வெளி­யிட்ட அறிக்கை, பிரிட்­ட­னின் நிலைப்­பாட்­டைப் பிர­தி­ப­லிக்­க­ வில்லை என்று கொழும்­பில் உள்ள பிரிட்­டன் தூத­ர­கம் தெரி­வித்­துள்­ளது.

கடந்த செப்­ரெம்­பர் மாதம் பிரிட்­டன் பிர­புக்­கள் சபை­யில் உரை­யாற்­றிய நேஸ்வி பிரபு, போர்க்­குற்ற அழுத்­தங்­க­ளில் இருந்து இலங்கை விடு­விக்­கப்படவேண்­டும் என்று கோரி­யி­ருந்­தார்.

ஐ.நா. நிபு­ணர்­கள் குழு­வின் அறிக்­கை­யில் கூறப்­பட்­டி­ருந்­தது போல, இறு­திக்­கட்­டப் போரில் 40 ஆயி­ரத்­துக்­கும் அதி­க­மான பொது­மக்­கள் படு­கொலை செய்­யப்­ப­ட­வில்லை என்­றும், 7 ஆயி­ரம் தொடக்­கம் 8 ஆயி­ரம் வரை­யா­னோரே கொல்­லப்­பட்­ட­னர் என்­றும் அவர்­க­ளி­லும் கால்­வா­சிப் பேர் விடு­த­லைப் புலி­களே என்­றும் நேஸ்வி பிரபு கூறி­யி­ருந்­தார்.

இது தொடர்­பாக கொழும்­பில் உள்ள பிரிட்­டன் தூத­ர­கம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், பிர­புக்­கள் சபை­யில் நேஸ்வி பிரபு, பிரிட்­டன் அர­சின் சார்­பில் உரை­யாற்­ற­வில்லை. ஒரு நாடா­ளு ­மன்ற உறுப்­பி­னர் என்ற வகை­யில் அவ­ருக்கு தனது சொந்­தக் கருத்தை வெளி­யி­டும் உரிமை உள்­ளது.

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில், நிறை­வேற்­றப்­பட்ட 30–1  தீர்­மா­னம் மற்­றும் அதனை மீள் உறு­திப்­ப­டுத்தி நிறை­ வேற்­றப்­பட்ட 34–1 தீர்­மா­னம் ஆகி­ய­வற்­றின் போது, உண்மை கண்­ட­றி­யும் குழுவை நிய­மிப்­பது உள்­ளிட்ட இலங்கை அரசு வழங்­கி­யுள்ள வாக்­கு­று­தி­களை  நிறை­வேற்­று­ மாறு நாங்­கள் தொடர்ந்து ஊக்­க­ம­ளிப்­போம், என்­றும் பிரிட்­டன் தூத­ர­கம் தெரி­வித்­துள்­ளது.

தவற விடாதீர்கள்:  அலைபேசி திருடிய குற்றச்சாட்டில் இரு மாணவர்களுக்கு சரீர பிணை!

You might also like