காவ்யா மாதவனுக்கு கிடைத்த பெருமை!!

தென்னிந்திய நடிகைகளில் உச்சத்தில் இருக்கும் நயன்தாராவுக்கும் அனுஷ்காவுக்கும்  கிடைக்காத ஒரு இடம், பெருமை, மலையாள நடிகை காவ்யா மாதவனுக்கு கிடைத்துள்ளது.

யாஹூ வெளியிட்ட 2017 ஆம் ஆண்டுக்கான இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட இந்திய நடிகைகளின் பத்து பேர் கொண்ட பட்டியலில் காவ்யா மாதவனுக்கு 9 ஆவது இடம் கிடைத்துள்ளது.

அந்தப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தென்னிந்திய நடிகையும் அவர் மட்டும் தான். கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நடிகை கடத்தல் வழக்கில், தனது கணவர் திலீப்புடன் சேர்ந்து அதிகமாக செய்திகளில் அடிபட்டவர் என்கிற வகையில் அதிகம் பேரால் காவ்யா மாதவன் இணையதளத்தில் தேடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் மூன்று இடங்களிலும் சன்னி லியோன், பிரியங்கா சோப்ரா மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர்  இடம்பிடித்துள்ளனர்.

You might also like