இளைஞரைக் கொலை செய்தவருக்கு தூக்கு!!

கிளிநொச்சியில் இளைஞர் ஒருவரைக் கொலை செய்த குடும்பத் தலைவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று தூக்குத் தண்டனை விதித்தது.

2010 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி கிளிநொச்சி உதயநகரில் வேலுப்பிள்ளை சசிரூபன் (வயது 29) என்பவர் போத்தால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலையைச் செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் மாங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவருக்கும் எதிராக கிளிநொச்சி நீதிவான் மன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்றன. அதன் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

வேலுப்பிள்ளை சிவரூபனை கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் எதிகள் இருவருக்கு எதிராகவும் தண்டனைச் சட்டக் கோவை 296ஆம் பிரிவின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் 2011ஆம் ஆண்டு பெப்ரெவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இரண்டாம் எதிரி மீதான குற்றச்சாட்டை வழக்குத் தொடுனரால் நீருபிக்கமுடியவில்லை. அதனால் இரண்டாம் எதிரியை மேல் நீதிமன்றம் விடுவித்தது.

தவற விடாதீர்கள்:  வடக்கு – கிழக்கு எம்.பிக்­க­ளின் பட்­டி­ய­லுக்­கும் இனி நிய­ம­னம்!

முதலாம் எதிரி மீதான குற்றம் கண்கண்ட சாட்சிகளின் அடிப்படையில் நிரூபிக்கப்படாவிடினும் சந்தர்ப்ப சூழல் சாட்சியங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதனால் கொலை செய்யும் பொது நோக்கோடு வேலுப்பிள்ளை சசிரூபனை கொலை செய்தார் என இனங்கண்டு முதலாம் எதிரியைக் குற்றவாளியாக நீதிமன்று அறிவித்தது.

 

You might also like