நீதிமன்றம் அமைக்க எதிர்ப்பு மாத்தளையில் ஆர்ப்பாட்டம்!

பாடசாலைக்கு அருகில் நீதிமன்றம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாத்தளையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மாத்தளையில் அமைந்துள்ள விஜய வித்தியாலயத்துக்கு அருகில் நீதிமன்றக் கட்டத்தை அமைப்பதற்கான அடிக்கல் கடந்த வாரம் நடப்பட்டது.

”பாடசாலைக்கு அருகில் நீதிமன்றம் அமைக்கப்படுமானால் அது பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளை பாதிக்கும்” என்று குற்றஞ்சாட்டி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பாடசாலையின் பழைய மாணவர்கள், ஆசியர்கள் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தவற விடாதீர்கள்:  ஆச­னப்­பங்­கீட்­டில் கஞ்­சத்­த­னம் - முற்­போக்­குக் கூட்­டணி தனி­வழி!!

You might also like