மீனவர்களை விடுவிக்கக்கோரி இராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்!

இலங்கைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், ஒகி புயலில் சிக்கி கரை திரும்பாத கன்னியாகுமரி பகுதி மீனவர்களை மீட்கக் கோரியும் இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில், இலங்கைக் கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைச் சிறைகளில் நீண்ட நாள்களாக வாடிவரும் மீனவர்களை விடுவிக்க, மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவர்களது வாழ்வாதாரமான படகுகளை மீட்டுத் தரக் கோரியும், சமீபத்தில் உருவான ஒகி புயலில் சிக்கி கரை திரும்பாத மீனவர்களை விரைவாக மீட்கக் கோரியும், மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தவற விடாதீர்கள்:  போர் நல்லதல்ல- ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி தெரிவிப்பு

You might also like