கடற்படை வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை மோதித்தள்ளியது கடற்படை வாகனம். அதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்தார்.

இந்த விபத்து வாத்துவ நகரில் நடந்தது. கல்பாத பகுதியைச் சேர்ந்த 42 வயதான நபர் ஒருவர் விபத்தில் உயிரிழந்தார்.

வெலிசர கடற்படை முகாமுக்குச் சொந்தமான வாகனம் களுத்துறையில் இருந்து பாணந்துறை நோக்கிப் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

கடற்படை வாகனத்தைச் செலுத்திய சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தவற விடாதீர்கள்:  உடன் பணிக்குத் திரும்பாவிடில் ரயில் ஊழியர்களுக்குப் பாதிப்பு!

You might also like