கோக்லி- அனுஷ்காவுக்கு விரைவில் டும்..டும்..

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோக்லி தனது காதலியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நீண்ட கால காதலர்களான இருவரும், இத்தாலியில் திருமணம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

அனுஷ்கா ஷர்மாவுடன், கோஹ்லி விரைவாக இத்தாலி செல்ல உள்ளதாகவும், அங்கு பிரமாண்டமாகத் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கோஹ்லியின் நட்புக்கள் ஊடாக ஊடகங்களுக்கு சில செய்திகள்
கசிந்துள்ளன.

இத்தாலி திருமண நிகழ்வில் பங்கேற்க கோஹ்லியின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தாலி நாட்டிலுள்ள மிலன் நகரில் திருமண நடைபெறவுள்ளது.

You might also like