அரபு இராச்சியத்திலிருந்து விண்வெளிக்கு மனிதர்கள்!

ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­தி­லி­ருந்து அடுத்த 5 ஆண்­டுக்­குள் ஆராய்ச்­சி­யா­ளர்­களை விண்­வெ­ளிக்கு அனுப்­பு­வ­தற்­காக திட்­டம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது என்று அந்த நாட்டுத் தலைமை அமைச்­சர் ஷேக் முக­மது பின் ரசித் அல்-­மக்­தும் தெரி­வித்­தார்.

‘‘விண்­வெ­ளி ஆராச்­சிக்கு மனி­தர்­களை அனுப்­பும் இந்த முயற்சி எங்­கள் நாட்­டின் விண்­வெளி ஆராய்ச்சி வர­லாற்­றில் ஒரு புதிய அத்­தி­யா­யத்தை உரு­வாக்­கும்.
அடுத்த 50 ஆண்­டு­க­ளில் விண்­வெளி ஆராய்ச்­சி­யில் உல­கில் முத­லி­டம் பிடிக்­கும் வகை­யில் எங்­க­ளின் முயற்சி அமை­யும். இந்தத் திட்­டத்­தில் பணி­யாற்ற விரும்­பும் ஆராய்ச்­சி­யா­ளர்­கள் விண்­ணம் செய்­துள்­ள­னர். அவர்­க­ளி­லி­ருந்து குறிப்­பிட்ட சிலர் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு பயிற்சி அளிக்­கப்­ப­டும்’’ என அவர் மேலும் தெரி­வித்­தார்.

You might also like