கொழும்பு அரசு தவறு செய்கிறது

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் வழங்­கும் பெயர்ப் பட்­டி­ய­லுக்­கும் இனி அரச வேலை வாய்ப்பு வழங்­கப்­ப­டும் என்று கொழும்பு அரசு அறி­வித்­துள்­ளது.

சபை முதல்­வ­ரும் அமைச்­ச­ரு­மான லக் ஷ்மன் கிரி­யெல்ல நாடா­ளு­மன்­றத்­தில் இத­னைத் தெரி­வித்­துள்­ளார். இது தவறு.

தன்னை நல்­லாட்சி அரசு என்று கூறிக்­கொள்­ளும் ஒரு அரசு அர­சி­யல் நிய­ம­னங்­களை வழங்­கு­வது எந்­த­வ­கை­யில் சரி­யா­னது? இது அர­ச­மைப்­பின் கீழ் இலங்­கை­யின் குடி­மக்­கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் வழங்­கப்­பட்­டுள்ள சம உரி­மை­யைக் கேள்­விக்­குள்­ளாக்­கும் மிக மோச­மான செயல். அது உட­ன­டி­யாக நிறுத்­தப்­ப­ட­வேண்­டும்.

அரச வேலை­க­ளுக்கு ஆள்­சேர்ப்­புச் செய்­யும்­போது அனை­வ­ருக்­கும் சம வாய்ப்பு வழங்­கப்­ப­ட­வேண்­டும். அது ஒவ்­வொ­ரு­வ­ர­தும் அடிப்­படை உரிமை.

இந்த அடிப்­ப­டை­யி­லேயே பட்­ட­தா­ரி­கள் நிய­ம­னம் உள்­ளிட்ட பல அரச வேலை­க­ளுக்­குப் போட்­டிப் பரீட்­சை­கள் நடத்­தப்­பட்டு நேர்­மு­கத் தேர்­வும் நடத்­தப்­பட்டு வெற்­றி­பெற்­ற­வர்­க­ளுக்கு மட்­டுமே வேலை வாய்ப்பு வழங்­கப்­ப­டு­கின்­றது.

அப்­ப­டி­யி­ருக்­கும்­போது அர­சின் ஒரு­ தொ­குதி வேலை­க­ளுக்கு மட்­டும் போட்­டிப் பரீட்­சையோ நேர்­மு­கப் பரீட்­சையோ இன்றி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் பட்­டி­ய­லின்­படி வேலை வழங்­கு­வது என்­பது கேவ­ல­மான ஆட்­சி­யின் வெளிப்­பாடு.

இத்­த­கைய செயற்­பா­டு­கள் ஊழல், மோசடி என்­ப­வற்­றுக்கே வழி­வ­குக்­கும். பணத்­தைப் பெற்­றுக்­கொண்டு வேலை வழங்­கும் நில­மையை இது தோற்­று­விக்­கும்.

பணம் கொடுத்து வேலை­யைப் பெற்­றுக்­கொண்ட ஒரு தகு­தி­யற்ற நபர் தனது பணி­யைத் திறம்­ப­டச் செய்­ய­மு­டி­யா­மல் தனக்கு மட்­டு­மன்றி அந்­தத் துறைக்கே சாபக்­கே­டாக மாறு­வ­தும் நடக்­கும்.

இது­போன்ற அர­சி­யல் நிய­ம­னங்­க­ளால் அரச நிர்­வாக இயந் தி­ரத்­தின் பல பகு­தி­கள் இப்­படி முடங்கி, நைந்­து­போய்க் கிடக்­கின்­றன.

இவர்­க­ளைப் போன்­ற­வர்­க­ளா­லேயே அரச நிர்­வா­கம் வினைத்­தி­றன் அற்­ற­தா­க­வும் உள்­ளது.

அமைச்­சர் கிரி­யெல்ல இந்த விட­யத்தை நாடா­ளு­மன்­றத்­தில் அறி­வித்த சூழ்­நி­லை­யைக் கருத்­தில் எடுப்­ப­தும் மிக முக்­கி­ய­ மா­னது. வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் உள்ள அரச திணைக்­க­ளங்­க­ளில் பணி­க­ளுக்கு அதி­லும் சிற்­றூ­ழி­யர் தரங்­க­ளுக்கு சிங்­க­ள­வர்­களே நிய­மிக்­கப்­ப­டு­கி­றார்­கள் என்று வடக்கு, கிழக்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் குற்­றச்­சாட்­டுக்­களை எழுப்­பி­ யி­ருந்­த­னர்.

அதற்­குப் பதி­ல­ளிக்­கும்­போதே தமிழ்­பே­சும் நாடா­ளு­ மன்ற உறப்­பி­னர்­க­ளைச் சமா­ளிக்­கும் விதத்­தில் அமைச்­சர் இந்­தப் பதிலை வழங்­கி­யுள்­ளார்.

அதன் மூலம் அவர், ஏற்­க­னவே வடக்கு கிழக்­கில் சிங்­க­ள­வர் க­ளுக்கு வழங்­கப்­பட்ட நிய­ம­னங்­க­ளில் எந்­த­வித இன விகி­தா­சா­ர­மும் பின்­பற்­றப்­ப­ட­வில்லை என்­பதை ஏற்­றுக்­கொண்­டுள்­ளார்.

அத்­தோடு அப்­படி வழங்­கப்­பட்ட நிய­ம­னங்­கள் எல்­லாம் அர­சி­யல் நிய­ம­னங்­கள்­தான் என்­ப­தை­யும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளார்.

இது நல்­லாட்சி என்று கூறிக்­கொண்டு தமக்கு வாக்­க­ளித்த மக்­கள் அனை­வ­ரை­யும் ஏமாற்­றும் செயல்.

நேர்­மை­யாக நடப்­போம் ஊழல், மோச­டி­கள் அற்ற ஆட்­சியை வழங்­கு­வோம் என்று கூறி­விட்டு அதற்கு நேர் எதிர்­மா­றாக, தலை­கீ­ழாக நடக்­கும் இந்த அரசு உண்­மை­யில் ஆட்­சி­யைத் தொட­ரும் அரு­க­தை­யற்­றது.

இந்த விட­யத்­தில் வடக்கு மாகாண சபை வெகு­வா­கப் பாராட்­டப்­ப­ட­வேண்­டி­யது. முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னும் மிக மிகப் பாராட்­டப்­ப­ட­வேண்­டி­ய­வர்.

வடக்கு மாகாண சபை பத­வி­யேற்­றது முதல் இது­போன்ற அர­சி­யல் நிய­ம­னங்­கள் அனைத்­தை­யும் நிறுத்­தி­விட்­டது.

சிற்­றூ­ழி­யர்­க­ளாக இருந்­தால் என்ன எந்­தப் பணி நிய­ம­ன­மாக இருந்­தால் என்ன போட்­டிப் பரீட்­சை­யின் ஊடாக அனை­வ­ருக்­கும் சம வாய்ப்பு வழங்­கியே பணி நிய­ம­னங்­களை வழங்­கி­வ­ரு­கின்­றது.

இந்த முறையை மாற்றி அர­சி­யல் நிய­ம­னங்­களை வழங்­கு­வ­தற்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் உறுப்­பி­னர்­க­ளாக உள்­ள­வர்­கள் சிலர் தலை­கீ­ழாக நின்­ற­போ­தும் வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரின் உறு­தி­யான நிலைப்­பாட்­டால் அது நடை­ பெ­ற­ம­லேயே போய்­விட்­டது.

இப்­போ­தும் வடக்கு மாகாண சபை­யின் கீழான நிய­ம­னங்­கள் ஒப்­பீட்­ட­ள­வில் மிக நேர்­மை­யா­கவே நடக்­கின்­றன. கட்­சி­சார் அர­சி­யல் நிய­ம­னங்­கள் எவை­யும் வழங்­கப்­ப­ட­வில்லை.

கொழும்பு அரசு இந்த முன்­னு­தா­ர­ணத்­தைக் காண­வேண்­டும், பின்­பற்றி நடக்­க­வேண்­டும். வடக்கு மாகாண சபை­யின் மீது பல்­வேறு விமர்­ச­னங்­கள் இருந்­தா­லும் இந்த விட­யத்­தில் அதன் நேர்­மையை கொழும்பு பின்­பற்றி நடக்­க­வேண்­டும்.

அர­சி­யல் ரீதி­யான அரச பணி நிய­ம­னங்­கள் அனைத்­தை­யும் நிறுத்­தி­விட்டு நேர்­மை­யான, அனை­வ­ருக்­கும் சம வாய்ப்பு வழங்­கக்­கூ­டிய நிய­ம­னங்­களை வழங்­க­வேண்­டும்.

You might also like