யாழ்ப்­பா­ணத்­தில் 2ஆவது சுயேச்சை களத்தில்!

யாழ்ப்­பா­ணத்­தில் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்கு இரண்­டா­வது சுயேச்­சைக் குழு நேற்­றுக் கட்­டுப் பணம் செலுத்­தி­யுள்­ளது.

உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்­காக அர­சி­யல் கட்­சி­கள் மற்­றும் சுயேச்­சைக் குழுக்­கள் கட்­டுப் பணம் செலுத்தி வரு­கின்­றன.

யாழ்ப்­பா­ணத்­தில், சங்­கானை பிர­தேச சபை­யில் போட்­டி­யி­டு­வ­தற்கு சுயேச்­சைக்­குழு கட்­டுப் பணம் செலுத்­தி­யி­ருந்­தது.

இந்த நிலை­யில் வல்­வெட்­டித்­துறை நகர சபை­யில் போட்­டி­யி­டு­வ­தற்கு சுயேச்­சைக் குழு நேற்­றுக் கட்­டுப் பணம் செலுத்­தி­யுள்­ளது. மேலும், சாவ­கச்­சேரி நகர சபைத் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்கு ஐக்­கிய சோச­லி­சக் கட்­சி­யும் நேற்­றுக் கட்­டுப் பணம் செலுத்­தி­யது.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் அனைத்து உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளி­லும் போட்­டி­யி­டு­வ­தற்கு அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ர­ஸும், மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யும் நேற்­றுக் கட்­டுப் பணம் செலுத்­தின.

மன்­னார் மாவட்­டத்­தில் பொது­மக்­கள் முன்­னணி அனைத்­துச் சபை­க­ளி­லும் போட்­டி­யி­டு­வ­தற்கு நேற்­றுக் கட்­டுப் பணம் செலுத்­தி­யுள்­ளது. மக்­கள் விடு­தலை முன்­னணி நானாட்­டான் பிர­தேச சபை­யில் போட்­டி­யி­டு­வ­தற்கு கட்­டுப் பணம் செலுத்­தி­யுள்­ளது.

You might also like