ஆச­னப்­பங்­கீட்­டில் கஞ்­சத்­த­னம் – முற்­போக்­குக் கூட்­டணி தனி­வழி!!

ஆச­னப்­பங்­கீடு உட்­பட தேர்­தல் சார்ந்த விட­யங்­க­ளில் ஐக்­கிய தேசி­யக் கட்சி தன்­னிச்­சை­யா­க­வும், விட்­டுக்­கொ­டுப் பும் இன்றி செயற்­ப­டு­வ­தால், தமிழ் முற்­போக்­குக் கூட்­டணி தனித்­துப் போட்­டி­யி­டு­வது சம்­பந்­த­மாக தீவி­ர­மாக பரி­சீ­லித்து வரு­கின்­றது என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஆச­னப்­பங்­கீட்­டில் நுவ­ரெ­லியா மாவட்­டம் மாத்­தி­ரமே திருப்­தி­ய­ளிக்­கும் வகை­யில் உள்­ளது. ஏனைய தொகு­தி­க­ளுக்­கான ஒதுக்­கீட்­டில் தமிழ் முற்­போக்­குக் கூட்­ட­ணிக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளது என்று கூட்­ட­ணி­யின் தரப்­பி­லி­ருந்து அறி­ய­மு­டி­கி­றது. இதன்­கா­ர­ண­மா­கவே தனித்­துப் போட்­டி­யி­டு­வது சம்­பந்­த­மா­கத் தமிழ் முற்­போக்­குக் கூட்­டணி தற்­போது ஆராய்ந்து வரு­கின்­றது என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

தமிழ் முற்­போக்­குக் கூட்­டணி தனித்­துப் போட்­டி­யிட வேண்­டி­ய­தன் அவ­சி­யத்­து­வத்­தைக் கூட்­ட­ணி­யின் இணைத்­த­லை­வர்­க­ளான அமைச்­சர் பழனி திகாம்­ப­ரம், இரா­ஜாங்க அமைச்­சர் வே.இரா­தா­கி­ருஷ்­ணன் உட்­பட கட்­சி­யின் உயர்­பீட உறுப்­பி­னர்­க­ளி­டம் தலை­வ­ரான அமைச்­சர் மனோ கணே­சன் எடுத்­து­ரைத்­துள்­ளார் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

“தமிழ் முற்­போக்­குக் கூட்­டணி பல­மாக இருக்­கின்­றது. எனவே, கட்­சி­க­ளி­டம் கெஞ்­ச­வேண்­டி­ய­தில்லை. எமது பலத்தை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய சந்­தர்ப்­ப­மா­க­வும் இது இருக்­கின்­றது. ஆகவே, உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் அனைத்­துத் தொகு­தி­க­ளி­லும் (தமிழ் முற்­போக்­குக் கூட்­டணி போட்­டி­யிட உத்­தே­சித்­துள்ள தொகு­தி­கள்) தனித்­துக் கள­மி­றங்க வேண்­டும்” என்­பதே மனோ­வின் நிலைப்­பா­டாக இருந்து வரு­கின்­றது.

எனி­னும், தொழி­லா­ளர் தேசிய முன்­னணி, மலை­யக மக்­கள் முன்­னணி ஆகி­யன கூட்­டா­கக் பய­ணிக்க வேண்­டும் எனக் கூறி­வ­ரு­வ­தால் இது­வி­ட­யத்­தில் உறு­தி­யா­ன­தொரு முடிவை எடுக்­க­மு­டி­யாத நிலை கட்­சித் தலை­மைக்கு ஏற்­பட்­டுள்­ளது.

அதே­வேளை, இறு­தி­நே­ரத்­தில் இணக்­கப்­பாடு ஏற்­பட்டு, ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் சின்­னத்­தின் கீழ் தமிழ் முற்­போக்­குக் கூட்­டணி போட்­டி­யிட்­டா­லும் கொழும்பு மாவட்­டத்­தில் தனித்தே போட்­டி­யி­டும் என்று மேலும் தெரி­ய­வ­ரு­கி­றது.

You might also like