ரயில் ஊழியர் போராட்டத்தால் பயணிகள் கடும் திண்டாட்டம்!!

தொட­ருந்து தொழிற் சங்­கங்­க­ளின் போராட்­டம் இன்று ஏழா­வது நாளா­க­வும் தொட­ரும் என்று பணிப்­பு­றக்­க­ணிப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டு­வ­ரும் தொழிற்­சங்­கங்­க­ளின் பிர­தி­நி­தி­கள் நேற்று அறி­வித்­த­னர்.

போராட்­டம் தொடர்­பி­லான கூட்­டம் ஒன்று நேற்று நடை­பெற்­றது. இதன்­போதே போராட்­டத்­தைத் தொடர்­வ­தற்கு முடி­வெ­டுக்­கப்­பட்­டது என்று அவர்­கள் தெரி­வித்­த­னர்.

தொட­ருந்து சாரதி உத­வி­யா­ளர்­க­ளின் நிய­ம­னத்­தில் எழுந்­துள்ள சர்ச்சை, சம்­ப­ளப் பிரச்­சினை உட்­பட சில விட­யங்­களை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு தொட­ருந்து தொழிற்­சங்­கங்­கள் பணிப்­பு­றக்­க­ணிப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றன.

போராட்­டத்­தால் வெளி­நாட்டு சுற்­று­லாப்­ப­ய­ணி­கள், பருவ காலச்­சீட்டு மூல­மாக பய­ணம் மேற்­கொள்­ப­வர்­கள் என்று பல­த­ரப்­பி­ன­ரும் பெரும் அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­துள்­ள­னர்.

தொட­ருந்­தில் முன்­கூட்­டியே பதி­வு­செய்­த­வர்­க­ளும், பரு­வ­கா­லச்­சீட்டு உள்­ள­வர்­க­ளும் இலங்­கைப் போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் பேருந்­து­க­ளில் பய­ணம் மேற்­கொள்­ள­லாம் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

எனி­னும், அந்த நடை­முறை உரி­ய­வ­கை­யில் பின்­பற்­றப்­ப­ட­வில்லை என்று கூறப்­ப­டு­கி­றது.

தொட­ருந்து சேவையை அத்­தி­யா­வ­சிய சேவை­யாக அறி­வித்து அர­சி­தழ் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­போ­தி­லும் போராட்­டத்­தைத் தொட­ரும் என்று தொழிற்­சங்­கங்­கள் கூறி­யுள்­ளன.

எனி­னும், நேற்று கட­மைக்­குத் திரும்­பா­த­வர்­கள் பதவி வில­கி­ய­வர்­க­ளா­கவே கரு­தப்­ப­டு­வார்­கள் என்று போக்­கு­வ­ரத்து அமைச்சு அறி­வித்­துள்­ளது.

மாண­வர்­க­ளுக்கு
சிறப்­புத் திட்­டம்

ஜி.சி.ஈ சாதா­ரண தரப் பரீட்­சைக்­குத் தோற்­ற­வுள்ள மாண­வர்­க­ளைக் கருத்­திற்­கொண்டு சிறப்­புப் போக்­கு­வ­ரத்­துத் திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த போக்­கு­வ­ரத்து அமைச்சு தீர்­மா­னித்­துள்­ளது.

அதற்­க­மைய போக்­கு­வ­ரத்து சபைக்­குச் சொந்­த­மான பேருந்­து­கள் அதி­க­ள­வில் இன்று சேவை­யில் ஈடு­ப­டு­மென்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. தனி­யர் போக்­கு­வ­ரத்து சங்­கங்­க­ளும் மாண­வர்­க­ளுக்கு ஆத­ர­வுக்­க­ரம் நீட்ட முன்­வந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

கல்வி அமைச்­ச­ரின்
கோரிக்கை

தொடர்ச்­சி­யா­க­தொ­ட­ருந்து ஊழி­யர்­க­ளின் போராட்­டம் நீடிக்­கும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், சேவை புறக்­க­ணிப்பு கார­ண­மாக சாதா­ரண தரப் பரீட்­சைக்­குத் தோற்­றும் மாண­வர்­களை நேரத்­து­டன் அனுப்­பி­வைக்­கு­மாறு கல்வி அமைச்­சர் அகி­ல­வி­ராஜ் காரி­ய­வ­சம் பெற்­றோர்­க­ளி­டம் கோரிக்கை விடுத்­துள்­ளார். மாண­வர்­க­ளுக்கு வாழ்த்­து­க­ளை­யும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

வெறிச்­சோ­டிப்­போ­யுள்­ளன
தொட­ருந்து நிலை­யங்­கள்

தொட­ருந்து ஊழி­யர்­க­ளின் வேலை­நி­றுத்­தம் கார­ண­மாக பொதுப் பிர­யாண சேவை­கள் அனைத்­தும் தடைப்­பட்­டுள்ள நிலை­யில் முதன்­மை­யான தொட­ருந்து நிலை­யங்­க­ளும் வெறிச்­சோ­டிப்­போ­யுள்­ளன.

குறிப்­பாக, கொழும்பு, கோட்டை, மரு­தானை, தெமட்­ட­கொட, மாத்­தறை, கண்டி உள்­ளிட்ட தொட­ருந்து நிலை­யங்­கள் வெறிச்­சோ­டியே காணப்­பட்­டுள்­ளன.

இந்­த ­நி­லை­யில், கொழும்பு கோட்டை தொட­ருந்­து­நி­லை­யத்தை நோக்கி ஏனைய பகு­தி­க­ளி­லி­ருந்து 11 தொட­ருந்­து­கள் நேற்று வருகை தந்­த­தா­க­வும், கோட்டை தொட­ருந்து நிலை­யத்­தி­லி­ருந்து ஒரு தொட­ருந்து மாத்­தி­ரமே வட­திசை நோக்கி பய­ணித்­த­தா­க­வும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. எவ்­வா­றா­யி­னும் நேற்­றைய தின­மும் 250 தொட­ருந்­துப் போக்­கு­வ­ரத்­துச் சுற்­றுக்­கள் இரத்­துச்­செய்­யப்­பட்­டுள்­ளன.

ஓய்வு பெற்­ற­வர்­களை
உடன் வரு­மாறு அழைப்பு

ஓய்­வு­பெற்ற தொட­ருந்து இயந்­திர சார­தி­கள், நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­கள், கண்­கா­ணிப்­பா­ளர்­கள் ஆகி­யோரை தொட­ருந்து தலை­மை­ய­கத்­துக்கு வருகை தரு­மாறு அறிக்­கை­யொன்று வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

வேலை­நி­றுத்­தத்­தில் ஈடு­பட்­டுள்ள சேவை­யா­ளர்­க­ளுக்கு நேற்­று­வ­ரை­யில் அரசு விடுத்­தி­ருந்த காலக்­கெடு முற்­று­பெற்­றுள்ள நிலை­யி­லேயே ஓய்­வு­பெற்ற ஊழி­யர்­க­ளுக்கு இவ்­வாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­த­நி­லை­யில், தற்­போது தொட­ருந்து சேவை அத்­தி­யா­வ­சிய சேவை­க­ளில் ஒன்­றாக்­கப்­பட்­டுள்­ளது. நேற்­று­வ­ரை­யில் சேவைக்கு வரா­த­வர்­கள் வேலை­யி­லி­ருந்து

நீக்­கப்­பட்­டுள்­ளார்­கள் என்று அறி­வித்­துக் கடி­தங்­கள் மூல­மாக அறி­விக்­க­வுள்­ள­தாக பிரதி அமைச்­சர் அசோக அபே­சிங்க அறி­வித்­துள்­ளார் என்று மேலும் தெரி­விக்­கப்­பட்­டது.

You might also like