நாடு முன்னேற இனவாதப் போக்கு இல்லாதொழிய வேண்டும்!

அதி­கா­ரப் பகிர்­வின் ஊடா­கத் தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னைக்கு ஒரு­போ­துமே தீர்வு கிடைக்­காது. ஆனால் தனி நாடொன்றை உரு­வாக்­கு­வ­தற்கே இது வழி­வ­குக்­கும். முன்­னாள் பாது­காப்பு செய­ல­ரான கோத்­த­பாய ராஜ­பக்ச மேற்­கண்­ட­வாறு கருத்து வௌி யிட்­டுள்­ளார். தமி­ழர்­கள் தொடர்­பாக எப்­போ­துமே கடு­மை­யான நிலைப்­பாட் டைக் கொண்­டுள்ள இவர் தமது வழ­மை­யான நிலைப்­பாட்­டி­லி ­ருந்து இன்­ன­மும் மாற­வில்லை.

அதி­கா­ரப் பகிர்வு என்­றாலே தென் ப­குதி அர­சி­யல்­வா­தி­க­ளில் பல­ருக்­கும் ஒவ்­வாமை ஏற்­பட்டு விடு ­கின்­றது. இதைக் குணப்­ப­டுத்­து­வது எளி­ தான காரி­ய­மா­க­வும் தெரி­ய­வில்லை. இந்த நிலை நீடிக்­கு­மா­னால், இந்த நாட்­டின் இனப்­பி­ரச்­சி­னைக்­குத் தீர்வு காண்­பது பகல் கன­வா­கவே ஆகி­வி­டும்.

தமிழ் மக்­க­ளின் சகல போராட்­டங்­க­ளும் தோல்­வியையே தழு­வின

தமி­ழர்­கள் தமக்­கான உரி­மை­க­ளைப் பெறு­வ­தற்­காக ஆயு­தப் போராட்­டம் உள்­ளிட்ட பல வகைப் போராட்­டங்­களை நடத்­தி­யுள்­ள­னர். ஆனால் எது­வுமே தமிழ் மக்­க­ளுக்கு பயன்­த­ர­வில்லை. அழி­வு­க­ளுக்­குத்­தான் அவை வழி­வ­குத்­தன. தற்­போது தமது சாதா­ரணச் சின்­னஞ் சிறு தேவை­க­ளைக்கூட ஆட்­சி­யா­ளர்­க­ளி­டம் கெஞ்­சிக் கேட்­டுப் பெற வேண்­டிய நிலைக்கு அவர்­கள் தள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

அர­சி­யல் ரீதி­யா­க­ வும் அவர்­கள் பல­வீ­ன­ம­டைந்து காணப்­ப­டு­கின்­ற­னர்.இந்­தியா எம்­மைக் கைவிட்டு விடாது; பிற­நா­டு­கள் இங்கு இடம்­பெ­று­கின்­ற­வற்றை உன்­னிப்­பாக அவ­தா­னித்­துக் கொண்­டி­ருக்­கின்­றன என்­றெல்­லாம் நம்­பிக் கொண்­டி­ருந்த தமி­ழர்­கள் அவை எல்­லாமே பொய்­யென்­பதை உணர்ந்­துள்­ள­னர்.

இந்­தி­யா­வைப் போன்று தமி­ழர்­களை நம்ப வைத்­துக் கழுத்­த­றுத்த நாடு வேறு எது­வுமே கிடை­யாது. தமி­ழர்­க­ளின் போராட்­டங்­கள் பிசு­பி­சுத்­துப் போன­தற்கு இந்­தி­யா­வின் சதி வேலை­களே கார­ண­மென்­ப­தைச் சொல்­லித் தெரிய வேண்­டி­ய­தில்லை. இறு­திப் போர் இடம்­பெற்­ற­போது அதில் இந்­தியா தன்னை முழு­மை­யாக ஈடு­ப­டுத்­திக் கொண்­டது. இலங்கை அர­சுக்­குத் தேவை­யான சகல உத­வி­க­ளை­யும் வழங்­கி­யது. போரில் பொது­மக்­களே புலி­க­ளை­விட அதி­க­ள­வில் கொல்­லப்­பட்­ட­னர்.

சுமார் 40 ஆயி­ரம் பேர் கொல்­லப்­பட்­ட­தா­கத் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன. ஆனால் இந்­தியா இது தொடர்­பாக அக்­கறை எடுத்­துக் கொண்­ட­தா­கத் தெரி­ய­வில்லை. போரின் பின்­ன­ரும் தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்ந்து வரு­கின்ற நிலை­யில் இந்­தியா – இலங்கை அர­சு­டன் பேசி நல்ல தீர்­வு­க­ளைக் கண்­டி­ருக்க முடி­யும்.

ஆனால் இந்­தி­யா­வின் செயற்­பா­டு­கள் ஏமாற்­றத்­தையே அளிக்­கின்­றன. போர்க் குற்­றங்­கள் மற்­றும் மனித உரிமை மீறல்­கள் தொடர்­பாக ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வில் இலங்­கைக்கு எதி­ரான தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்ட போதி­லும், இலங்கை அவற்றை ஒரு துரும்­பா­கக் கூட மதிக்­க­வில்லை. மனித உரி­மை­கள் தொடர்­பா­கப் பீற்­றிக் கொள்­கின்ற நாடு­க­ளும் அடக்கி வாசிப்­ப­தையே காண முடி­கின்­றது. சில காலம் கழிந்த பின்­னர் யாவுமே மறக்­கப்­பட்­டு­வி­டும்.’

மாகாண சபை நிர்­வா­கத்தில் கூட தமிழ் மக்­க­ள் எவ்­வித பய­னும் அடை­ய­வில்லை

இதே­வேளை மாகாண சபை அதி­கா­ரம் தமது கைக­ளுக்கு விட்­டால் எல்­லாமே சரி­யாகி விடு­மெ­னத் தமி­ழர்­கள் நம்­பிக் கொண்­டி­ருந்­த­னர். அது­வும் இழு­ப­றி­யான நிலை­யில் தாம­த­மா­கவே கிடைத்­தது. அத்­து­டன் தேர்­தல் இடம்­பெற்­ற­போது வாக்­கா­ளர்­களைக் குழப்­பும் வகை­யில் இடை­யூ­று­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன.

ஆனால் இவற்­றை­யெல்­லாம் தாண்டி மக்­கள் சரி­யான தரப்­புக்கே வாக்­க­ளித்­த­னர். கூட்­ட­மைப்பு அமோக வெற்­றி­யைப் பெற்று ஆட்­சி­யை­யும் அமைத்­தது. மக்­க­ளும் ஆவ­லு­டன் மாகாண சபை­யின் செயற்­பா­டு­களை அவ­தா­னித்­துக் கொண்­டி­ருந்­த­னர். அங்­கும் ஏமாற்­றமே அவர்­க­ளுக்­குக் கிடைத்­தது.

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­க­மும் பல்­வேறு சவால்­க­ளை சந்­தித்து வரு­கின்­றது

புதிய அர­ச­மைப்­பின் உரு­வாக்­க­மும் வித்­தை­காட்டி வரு­கின்­றது. அதன் இறுதி முடிவை அறிந்து கொள்­வ­தற்கு அடுத்த ஏப்­ரல் மாதம் வரை காத்­தி­ருக்க வேண்­டி­யுள்­ளது. கோத்­த­பாய போன்­ற­வர்­கள் கடும் கோட்­பாட்­டா­ளர்­க­ளா­கத் தம்­மைக் காட்­டிக் கொள்­வ­தால், பெரும்­பான்­மை­யின மக்­க­ளின் ஆத­ரவு தமக்­குக் கிடைக்­கு­மென நம்­பு­கின்­ற­னர். அவர்­கள் எதிர்­பார்த்­த­தைப் போன்று மக்­க­ளின் ஆத­ர­வும் அவர்­க­ளுக்­குக் கிடைத்து வரு­கின்­றது.

இத­னால் கடும் இன­வா­தக் கருத்­துக்­களை அவர்­கள் எப்­போ­தும் உதிர்த்து வரு­கின்­ற­னர். இறு­திப் போரை வழி நடத்­திச் சென்­ற­தில் கோத்­த­பா­ய­வி­னது பங்கு மிக­வும் முக்­கி­ய­மா­ னது. படை­யி­னர் களத்­தில் நின்­றா­லும் அவர்­களை வழி நடத்­தி­ய­வர்­க­ளில் முக்­கி­ய­மான ஒரு­வ­ராக இவ­ரும் செயற்­பட்­டி­ருந்­தார் என்­பதை அனை­வ­ரும் அறி­வார்­கள்.

தனி­நாடு கேட்­டுப் போரா­டிய தமி­ழர்­கள் தற்­போது தாமும் ஏனை­ய­வர்­கள் போன்று வாழ வேண்­டும் என்­ப­தற்­காக அதி­கா­ரப் பகிர்வை மட்­டுமே கேட்டு நிற்­கின்­ற­னர். இதைக் கூட வழங்­காது. இன­வா­தம் பேசு­வ­தால் நாட்­டின் நல்­லு­ற­வுக்­குப் பங்­கம் ஏற்­ப­டவே செய்­யும்.

கனடா, ஆஸ்­தி­ரே­லியா போன்ற வளர்ந்த நாடு­க­ளில் சகல இன மக்­க­ளை­யும் அர­வ­ணைத்­துச் செல்­கின்ற வகை­யில் அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டது. இத­னால் சகல இன மக்­க­ளும் வேறு­பா­டு­க­ளின்றி நாட்­டின் வளர்ச்­சிக்­காக உழைக்­கின்­ற­னர். இத­னால் அந்த நாடு­கள் சகல துறை­க­ளி­லும் முன்­னேற்­றம் கண்­டுள்­ளன. ஆனால் எமது நாடு சகல இயற்கை வளங்­க­ளைக் கொண்­டி­ருந்­தும் பிற நாடு­க­ளி­டம் கையேந்தி நிற்க வேண்­டி­யுள்­ளது.

ஒரு வகை­யில் இந்­த­நாட்­டின் ஆட்­சி­யா­ளர்­க­ளது கடும் இன­வாத நிலைப்­பாடே இதற்கு முக்­கிய கார­ணம் என்­பது சொல்­லித் சொல்­லித் தெரி­ய­வேண்­டிய ஒன்­றல்ல.

You might also like