மனித உரிமைகள் சரிவரப் பேணப்படும் நாடொன்று சகல துறைகளிலும் வளர்ச்சி காணும்

மதிப்பான சமூக வாழ்க்­கையை அனு­ப­விப்­ப­தற்கு ஒரு மனி­த­னுக்கு மனித உரி­மை­கள் கட்­டா­ய­மாக இருக்க வேண்­டிய உரித்­துக்­க­ளா­கும். மனி­த­னா­கப் பிறந்­த­த­னால் இயற்­கை­யாக அவ­னுக்­குள்ள உரி­மை­கள் கிடைக்­கப்­பெற வேண்­டி­யது நிய­தி­யா­கும்.

மனி­தன் மதிப்புடன் வாழ்­வ­தற்­கும், பாது­காப்­பாக இருப்­ப­தற்­கும், மனித உரி­மை­கள் உறு­தி­ய­ளிக்­கின்­றன. மனித உரி­மை களை முழு­மை­யா­கப் பெற்­றுக்­கொள்ள முடி­யாத சமு­தா­யத்­தில் மனி­தன் சிறப்­புற வாழ்­வ­தும், பூரண அபி­வி­ருத்­தியை ஏற்­ப­டுத்­திக் கொள்­வ­தும் மிகக் கடி­ன­மா­கும். தற்­போது உல­க­ளா­விய ரீதி­யில் பேசப்­ப­டும் மிக முக்­கிய அம்­ச­மாக மனித உரி­மை­கள் மாறி­யுள்­ளன.

மனித உரி­மை­க­ளைப் பாது­காக்­கின்ற சமூ­கத்­தில் சன­நா­ய­கம், பாது­காப்பு, பிர­சை­க­ளின் சமூக வாழ்வு என்­பவை மேம்­பட்­டி­ருக்­கும். நாட்­டில் நீதி­யும் நேர்­மை­யும் மேலோங்­கு­வ­தா­னது, உரி­மை­களை அடைந்து கொள்­வ­தற்­கான சாத­க­மான சூழ்­நி­லை­யா­கும்.

மனித உரி­மை­கள், அனை­வ­ருக்­கும் எவ்­வித பேத­மு­மின்­றிப் பிறப்­பி­லி­ருந்தே கிடைக்க வேண்­டும். வர­லாற்று ரீதி­யா­கப் பின்­னோக்­கிப் பார்க்­கை­யில் , அந்­தக் காலத்­தில் மனி­தர்­கள் தமது உரி­மை­க­ளைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான சந்­தர்ப்­பம் கிடைக்­க­வில்லை.

எடுத்­துக்­காட்­டாக அடிமை யுகம், மானிய முறை என்­பவை மேலோங்­கி­யி­ருந்­தன. மனித உரி­மை­கள் பற்­றிய முழு­ மை­யான அறிவு மனி­தர்­க­ளுக்குக் கிடைக்­கப்­பெ­றும் நிலை­யில்­தான் ஒரு அடி­மைத்­த­ன­மற்ற தேசத்தை உரு­வாக்க முடி­யும் என கூறு­வது தவறான ஒன்றல்ல.

சுதந்­தி­ர­மான சகோ­த­ரத்­துவ சக­வாழ்வு மனி­த­ருக்கு அவ­சி­யம்

மனி­தர்­கள் அனை­வ­ருமே சுதந்­தி­ ரத்­து­ட­னும், சம உரி­மை­க­ளு­ட­னும், மேன்­மை­யு­ட­னுமே பிறக்­கின்­ற­னர். இவர்­கள் இயல்­பா­கவே நம்­பிக்­கை­யு­ட­னும் மனச்­சாட்­சிக்கு கட்­டுப்­பட்­ட­வர்­க­ளா­க­வும் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் சகோ­த­ரத்­துவ உணர்­வு­ட­னும் வாழ வேண்­டி­ய­வர்­க­ளா­வர். சமூக, கலா­சார, அர­சி­யல், பொரு­ளா­தார, குடி­யி­யல் உரி­மை­கள் இன்­றி­ய­மை­யா­த­வை­யா­கும்.

பன்­னா­டு­க­ளால் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்பட்­டுள்ள உறுப்­பு­ரை­யில் அடங்­கி­யுள்ள 30 உரி­மை­க­ளும் புவி­யில் பிறந்த ஒவ்­வொரு மனி ­த­னுக்­கும் கிடைக்­கப்­பெற வேண்­டிய உரி­மை­க­ளா­கும். மனித உரி­மை­கள் தொடர்­பான பூரண விளக்­க­ மின்­மை­யா­லேயே பல­ரும் அநீ­தி­க­ளுக்கு உள்­ளாக்­கப்­ப­டு­கின்­றார்­கள்.

நாட்­டி­ட­மி­ருந்து நாம் பெறும்  நன்­மை­யை­விட நாட்­டுக்கு அதிக நன்மை ஆற்­றல் வேண்­டும்

ஒரு நாட்­டின் பிர­சை­யொ­ரு­வன் நாட்­டின் மூலம் தனக்கு கிடைக்­கும் சேவை­களை விட அதி­க­மான சேவை­களை நாட்­டுக்கு வழங்­கு­வ­தற்கு உறுதி பூணு­தல் வேண்­டும். மனி­தன் தனது சுதந்­தி­ரத்­து­டன் தனது பாதை­யில் பய­ணஞ் செய்ய முடி­யும். ஆனால் அந்­தச் சுதந்­தி­ரம் அடுத்­த­வ­ரின் மூக்கு நுனி­வரை மட்­டுமே என்­பது பேரா­சி­ரி­யர் ஹரல்ட் ஐ.லாஸ்கி என்­ப­ரின் கூற்று.

உல­கின் அபி­வி­ருத்­தி­யில் மனி­தனே பிர­தா­ன­மா­ன­வ­னாக இருக்­கின்­றான். இயற்­கை­யு­டன் இணைந்து, ஒத்­து­ழைப்­பு­டன் செயற்­பட்டு, சுகா­தா­ர­மான வாழ்க்­கையை வாழ்­வ­தற்­கான முழு உரி­மை­யும் அந்த மனி­த­னுக்கு உண்டு.

இறை­வ­னால் தனக்கு வழங்­கப்­பட்ட இந்த வாழ்க்­கையை முழு உரி­மை­யு­ட­னும் வாழ்­வ­தற்கு உரித்­து­டை­ய­வன். அநீ­தி­கள் அதி­க­மாக ஏற்­ப­டும் சந்­தர்ப்­பத்­திலே மனித சமு­தா­யத்­தி­டம் புரட்சி உரு­வா­கின்­றது. இந்­தப் புரட்­சி­கள் உரு­வா­கு­வ­த­னால் நாட்­டில் அமை­தி­யும் சமா­தா­ன­மும் சீர்­கு­லைந்து போகின்­றன.

இத­னால் ஆரோக்­கி­ய­மான அறி­வு­டன் கூடிய அமை­தி­யான தேசம் உரு­வாக மனித உரி­மை­கள் பற்றி நாட்­டின் ஒவ்­வொரு பிர­சை­யும் தெளி­வாக அறிந்­தி­ருக்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­கும். மனித உரி­மை­கள் மீறப்­ப­டும் என உண­ரும் சந்­தர்ப்­பத்­தில் சட்­டத்­தின் மூல­மாக தீர்வு காண்­ப­தில் எவ்­விதத் தவ­றும் கிடை­யாது.

மனித உரி­மை­கள் குறித்த தெளிவு அனை­வ­ருக்­கும் அவ­சி­ய­மா­ன­தொன்று

மனித உரி­மை­கள் பற்­றிய தெளி­வின்­மை­யால் எமது தேசத்­தில் மட்­டு­மன்றி, உல­க­மெங்­கும் அநீ­திக்­குள்­ளா­கு­ப­வர்­கள் அதி­க­மாக பெண்­க­ளும் சிறு­வர்­க­ளுமே ஆவர்.
சிறு­வர் துர்நடத்தை, பாலி­யல் அத்துமீறல் போன்ற பல இன்­னல்­கள் தினம்­தோ­றும் நிகழ்ந்து கொண்­டி­ருப்­பதை எமது கண்­கூ­டாக எம்­மால் அவ­தா­னிக்க முடி­கின்­றது. உலக சமா­தா­னத்தைக் கட்­டி­யெ­ழுப்­ப­வும், இனங்­க­ளி­டையே ஒற்­று­மையை வளர்க்­க­வும், இந்த மனித உரி­மை­கள் முக்­கிய பல­மாக அமை­கின்­றன.

இதற்­கா­கவே மனித உரி­மை­களைப் பலப்­ப­டுத்­த­வும் ,பாது­காக்­க­வும் 1948 டிசம்­பர் 10 ஆம் திகதி ஐக்­கிய நாடு­கள் சபை­யின் பொதுச்­ச­பை­யால் மனித உரி­மை­கள் தினம் பிர­க­ட­னம் அறி விக்கப்பட்டது.

ஒரு தேசத்­தின் அபி­வி­ருத்­தி­யில் மனி­தன் முக்­கிய பங்­காற்­று­கின்­றான். அதா­வது மனித உரி­மை­களை ஒவ்­வொ­ரு­வ­ரும் அனு­ப­விப்­பது மட்­டு­மன்றி, தமது பொறுப்­புக்­களை முழு­மை­யாக நிறை­வேற்­று­வ­தும் அவ­ர்க ளது கட­மை­யா­கும்.

ஒவ்­வொ­ரு­வ­ரும் தத்தமது கட­மை­க­ளைச் சரி­வ­ரச் செய்­யும்­போது, அந்த நாடு சிறப்­பாக அபி­வி­ருத்­திப் பாதை­யில் பய­ணிக்­கும். மனித உரி­மை­க­ளுக்கு மதிப்­ப­ளிப்­ப­து­டன் அவற்­று­டன் இணைந்த கட­மை­க­ளை­யும், பொறுப்­புக்­க­ளை­யும் நிறை­வேற்­றும் எதிர்­காலச் சந்­த­தி­யி­னரை உரு­வாக்­கு­வது எமது ஒவ்­வொ ­ரு­வ­ரின் தலை­யாய கட­மை­யா­கும். மனித உரி­மை­கள் பற்­றிய பூரண விளக்­கம் அபி­வி­ருத்­தி­ய­டைந்து வரும் நாடு­க­ளுக்கு அவ­சி­ய­மா­ன­தொன்­றா­கும்.

அந்த நாடு­க­ளில்­தான் அதி­க­மான அநீ­தி­கள் இடம்­பெ­று­வ­தற்கு சாத்­தி­யக்­கூ­று­கள் அதி­க­மா­கும். பெண்­கள், சிறு­வர்­கள் மட்­டு­மன்றி நாட்­டில் நடக்­கும் வன் செயல்­க­ளுக்கு எதி­ராக குரல் கொடுப்­ப­தற்கு முற்­ப­டு ­வ­து­போல் நாட்­டில் வாழும் ஒவ்­வொரு பிர­சைக்­கும் மனித உரி­மை­கள் பற்­றிய அறிவை வழங்­கி­னாலே போதும். தேசம் அமை­தி­ய­டை­யும். அது ­மட்­டு­மன்றி அநீ­தி­க­ளும் மறைந்து போகும்.

தனி­ம­னி­தன் ஒரு­வ­னின் சிந்­த­னை­யில் ஏற்­ப­டும் நல்­மாற்­ற­மா­னது சமூ­கத்­தில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தும். அது­ மட்­டு­மன்றி தேசத்­தை­யும் செழிப்­ப­டை­யச் செய்­யும். மனி­த­னின் உரி­மை­ கள் எப்­போ­தும், எவ­ரொ­ரு­வ­ருக்­கும் மறுக்­கப்­பட முடி­யா­த­தொன்­றா­கும்.

ஒரு நாட்­டில் பிறந்த ஒவ்­வொ­ரு­வ­ரும் நாடு எமக்கு என்ன செய்­த­தென்று கேள்வி கேட்­டுக் கொண்­டி­ருப்­பதை விடுத்து, நாட்­டுக்கு நாம் என்ன செய்­தோம் எனச் சிந்­திப்­ப­தன் மூல­மாக ஆரோக்­கி­ய­மான, அமை­தி­யு­டன்
கூடிய சமா­தா­னத்­து­ட­னான தேசத்தை உரு­வாக்­க­லாம்.

 

You might also like