கூட்­ட­மைப்­பினது இன்­றைய நகர்­வு­களே அதன் இருப்பை உறுதி செய்யவல்­லவை!

கூட்­ட­மைப்­பி­னால் தமது பிரச்­சி­னை­க­ளுக்கு உரிய தீர்­வைக் காண முடி­ய­வில்லை என்ற ஆதங்­கம் தமிழ் மக்­க­ளி­டம் நிறை­யவே உண்டு. போர் முடி­வுக்கு வந்து எட்டு ஆண்­டு­கள் கடந்து விட்ட நிலை­யி­லும் தமிழ் மக்­கள் ஏகப்­பட்ட பிரச்­சி­னை­க­ளுக்கு மத்­தி­யில்­தான் வாழ்ந்து வரு­கின்­ற­னர்.

இவற்­றுக்­கெல்­லாம் தீர்வு கிடைக்க வேண்­டு­மென இவர்­கள் விரும்­பிய போதி­லும், அந்த விருப்­பம் நிறை­வே­று­வ­தா­கத் தெரி­ய­வில்லை. இதற்கு கூட்­ட­மைப்பையே இவர்­கள் குற்­றம் சாட்­டு­கின்­ற­னர்.

இதன் மூல­மா­கத் தமது ஏகப் பிர­தி­நி­தி­கள் கூட்­ட­மைப்­பி­னர்­தான் என்­பதை இவர்­கள் ஏற்­றுக் கொண்­டுள்­ளமை தௌிவா­கத் தெரி­கின்­றது. இதைக் கூட்­ட­மைப்­பி­னர் புரிந்­து­ கொள்ள வேண்­டும். வடக்­குக் கிழக்­கில் வாழ்­கின்ற தமி­ழர்­கள், இந்த நாடு சுதந்­தி­ரம் அடைந்த நாளில் இருந்து பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்து வரு­கின்­ற­னர்.

இதில் பிர­தா­ன­மா­னது இனப் பிரச்­சினை என்­ப­தைச் சொல்­லித் தெரிய வேண்­டி­ய­தில்லை. இனப் பிரச்­சினை கார­ண­மா­கவே கொடிய போர் ஒன்று நீண்ட காலம் இடம்­பெற்­றது. இனி­யும் தம்­மால் பொறுத்­துக் கொள்ள முடி­யாது என்­ப­தால்­தான் தமிழ் இளை­ஞர்­கள் ஆயு­தங்­க­ளைத் தூக்­கி­னார்­கள். இத­னால் பேர­ழி­வு­க­ளும் ஏற்­பட்­டன.

நாட்­டின் பொரு­ளா­தா­ரம் முற்­றா­கச் சீர்­கு­லைந்­தது. இரண்டு பக்­கங்­க­ளி­லும் பெறு­மதி மிக்க ஏரா­ள­மான உயிர்­கள் அநி­யா­ய­மாக இழக்­கப்­பட்­டன. விலை மதிக்க முடி­யாத அள­வுக்­குச் சொத்­துக்­க­ளுக்­குச் சேதம் ஏற்­பட்­டது. இவற்­றுக்கு மத்­தி­யில் பல நாடு­க­ளின் உத­வி­க­ளைப் பெற்று அரசு, புலி­களை வெற்றி கொண்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது. பலம் பொருந்­திய விடு­த­லைப் புலி­க­ளை வெற்றி கொண்ட வெற்றி வீர­னாக மகிந்த ராஜபக்ச மதிக்­கப்­பட்­டார். தமி­ழர்­கள் தோற்­றுப் போன­ தொரு இன­மா­கத் தலைகு­னிந்து நின்­ற­னர்.

தமி­ழர்­கள் விட­யத்­தில் அலட்­சி­யப் போக்­கில்
செயற்­ப­டும் அரசு

போரை முடி­வுக்­குக் கொண்டு வந்த இலங்கை அரசு தமி­ழர்­க­ளுக்கு ஏற்­பட்ட அவ­லங்­க­ளைச் சிறி­தும் கருத்­தில் கொள்­ள­வில்லை. போர் இடம்­பெ­றும்போது மனித உயிர்­கள் இழக்­கப்­ப­டு­வது ஒன்­றும் தவ­றான விட­ய­மல்ல என்­பது போன்று அரசு அலட்­சி­ய­மாக நடந்து கொண்­டது. போர்க் குற்­றங்­களை விசா­ரிப்­பது தொடர்­பான ஐ.நா.மனித உரி­மை­கள் சபை­யின் தீர்­மா­னத்­தை­யும் புற­மொ­துக்கி வைத்­தது.

இவை அரசு தமி­ழர்­க­ளின் விட­யங்­க­ளில் நீதி­யாக நடந்து கொள்ள மாட்­டாது என்­ப­தைத் தௌி வாக எடுத்­துக் காட்­டு­கின்­றன. ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும், சிறிலங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் இணைந்­த­தொரு அரசு, கூட்டு அரசு என்ற பெய­ரில் செயற்­ப­டு­வது தமி­ழர்­க­ளுக்கு எந்த விதத்திலும் நன்மை யளிக்கவில்லை. அரச தலை­வர் ஆட் சிக்­கும், கட்­சிக்­கும் இடை­யில் நின்று அல்­லா­டிக் கொண்­டி­ருக்­கி­றார்.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யி­னர் இரண்­டா­கப் பிரிந்து மைத்­திரி அணி, மகிந்த அணி­யெ­னச் செயற்­ப­டு­வது அரச தலை­வ­ருக்­குப் பெரும் தலை­யி­டி­யைக் கொடுத்­துள்­ளது. இதி­லி­ருந்து இவர் இல­கு­வாக வௌியே வரு­வ­தற்­கான சாத்­தி­யங்­கள் மிகக் குறை­வா­கவே காணப்­ப­டு­கின்­றன.

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­ல் தொடர்பில்
தெற்­கில் குழப்­ப­நிலை

இந்த நிலை­யில் உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் தெற்­கில் பெரும் குழப்ப நிலை­யைத் தோற்­று­வித்­துள்­ளது. ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் தாம் கூட்டு அரசு ஒன்றை அமைத்துள்ளதை மறந்து தமக்­குள் மோதிக் கொள்­வ­தைக் காண முடி­கின்­றது. கட்­சித் தாவல்­க­ளும் மாறி மாறித் தாரா­ள­மாக இடம்­பெற்று வரு­கின்­றன. இத­னால் உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் வரை­யா­வது இந்த அரசு நீடிக்­குமா? என்ற சந்­தே­கம் எழுகின்றது.

கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்­றத்­தில் பெய­ர­ள­வுக்குமட்­டுமே எதிர்க்­கட்சி என்ற பெய­ரைத் தாங்­கிக் கொண்டு அர­சுக்­குப் பூர­ண­மான ஆத­ர­வைத் தெரி­வித்து வரு­கின்­றது. அரசு இதைக் கவ­னத்­தில் கொண்டு தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வைக் கண்­டி­ருக்க வேண்­டும். ஆனால் எது­வுமே நடக்­க­வில்லை. இத­னால் கூட்­ட­மைப்­பி­னர் மக்­க­ளின் முன்­னால் தலை­கு­னிந்து நிற்­க­வேண்­டிய நிலை­யில் உள்­ள­னர். எந்த வகை­யில் பார்த்­தா­லும் தமி­ழர்­க­ளின் ஏக பிர­தி­நி­தி­கள் என்ற வகை­யில் அவர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காண வேண்­டிய பொறுப்பு கூட்­ட­மைப்­பி­னர் வசமே உள்­ளது.

தற்­போ­தைய அரசு உள்ள இக்­கட்­டான நிலை­ யில் அது சாத்­தி­யப்­ப­டுமா? என்­பது சந்­தே­க­மா­கவே உள்­ளது.
உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் கூட்­ட­ மைப்­பி­னர் பின்தங்கி நிற்க நேரிட்­டால், மாகா­ண­ச­பைத் தேர்­த­லி­லும், நாடா­ளு­மன்­றத் தேர்­த­லி­லும் இதன் பிர­தி­ப­லிப்­பைக் காண முடி­யும். ஆகவே இனி­யும் தமக்­குள் முரண்­பா­டு­களை வளர்த்­துக்­கொள்­ளா­மல் விரைந்து துரி­த­மா­கச் செயற்­பட வேண்­டிய நிலை ­யில் அவர்­கள் உள்­ள­னர்.

நீண்ட கால­மாக எதிர்ப்பு அர­சி­யலை மேற்­கொண்டு வந்த தமி­ழர்­கள், இணக்க அர­சி­ய­லைத் தற்­போது கடைக்­கொண்டு வரு­கின்­ற­னர். ஆனால் இரண்­டி­ன­தும் விளைவு ஒன்­றா­கத்­தான் காணப்­ப­டு­கின்­றது. எதிர்ப்­பி­னா­லும் பய­னில்லை; இணக்­கத்­தி­னா­லும் பய­னில்லை.

அரசை முற்­று­மு­ழு­தாக நம்­பும் போக்கை கூட்­ட­மைப்பு கைக­ழுவ வேண்­டி­ய­வது அவ­சி­யம்

கூட்­ட­மைப்­பைப் பொறுத்­த­வ­ரை­யில் அரசை மட்­டுமே நம்­பிக்­கொண்­டி­ரா­மல், காத்­தி­ர­மான இரா­ஜ­தந்­திர நகர்­வு­க­ளை­யும் மேற்­கொள்ள வேண்­டும். தமி­ழர்­க­ளின் தற்­போ­தைய இழி­நிலை தொடர்­பாக உலக நாடு­கள் அறி­யும் வகை­யில் பரப்­பு­ரை­களை மேற்­கொள்ள வேண்­டும்.

இதை­ வி­டுத்து குண்­டுச்­சட்­டிக்­குள் குதிரை ஓட்­டு­வது போன்று இங்­கேயே சுற்­றிச் சுற்றி வரு­வ­தால் பய­னொன்­றும் கிடைக்­கப்­போ­வ­தில்லை. மக்­க­ளும் பொறுமை காக்­கப் போவ­தில்லை.

அகிம்­சை­வா­தி­யும் அர­சி­யல் ஞானி­யு­மான தந்தை செல்வா, ஒரு­முறை கூறிய வார்த்­தை­கள் தற்­போது நினை­வுக்கு வரு­கின்­றன. தமி­ழர்­களை இனி­மேல் கட­வுள் தான் காப்­பாற்ற வேண்­டும் என அவர் அன்றே கூறி வைத்­தார்.

ஆனால் அந்­தக் கட­வுள் கூடத் தமி­ழர்­க­ளுக்கு உத­வ­வில்லை.தமி­ழர்­கள் என்­ன­தான் பாவம் செய்­தார்­களோ தெரி­ய­வில்லை. இந்­தியா எம்மை முற்­றா­கவே கைவிட்டு விட்­டது என்­பதை நாம் முத­லில் புரிந்­து­கொள்ள வேண்­டும். எமக்கு ஏற்­பட்ட சோத­னை­க­ளுக்­கும் வேத­னை­க­ளுக்­கும் இந்­தி­யாவே பொறுப்­புக் கூற வேண்­டும்.

இந்­தி­யாவை இனி­யும் நம்­பிக்­கொண்­டி­ருப்­ப­தில் பய­னொன்­றும் கிடைக்­கப் போவ­தில்லை. ஆகவே இந்­தி­யா­வைத் தவிர்த்து விட்டு வேறு வழி­க­ளைத் தேடு­வதே புத்்­தி­சா­லித்­த­ன­மா­னது. கூட்­ட­மைப்பு கடைக்­கொள்­ளும் இரா­ஜ­தந்­திர அணு­கு­மு­றையே அதன் எதிர்­கால இருப்பை உறுதி செய்­யப் போகின்­றது.

You might also like