உலகின் மிகச்சிறிய வாழ்த்து அட்டை

உலகின் மிகச்சிறிய கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டையை வடிவமைத்துள்ளனர் பிரிட்டன் விஞ்ஞானிகள்.

பிரிட்டனில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வுகூடத்தில் இந்த அட்டை தயாரிக்கப்பட்டது. 15 மில்லி மீற்றர் நீளமும் 20 மில்லி மீற்றர் அகலமும் கொண்டதாக இந்த வாழ்த்து அட்டை அமைந்துள்ளது.

ஒரு தபால் முத்திரையை விடவும் இது சிறியது. இதற்கு முன் செய்யப்பட்ட சிறிய வாழ்த்து அட்டையை விட 100 மடங்கு சிறியதாகும்.

You might also like