இனித் தீவிர அர­சி­யல் என்­கி­றார் கனி­மொழி!!

‘‘2ஜி வழக்­கில் விடு­தலை ஆன­தால் புதிய பத­வியை எதிர்­பார்க்­க­ வில்லை. இனி­வ­ரும் காலத்­தில் தீவிர அர­சி­ய­லில் ஈடு­ப­டு­வேன்’’ என்­று கனி­மொழி தெரி­வித்­தார்.

இந்­திய ஊட­க­மொன்­றுக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

‘‘2ஜி வழக்­கில் விடு­தலை ஆனது எனக்கு மகிழ்ச்சி அளிக்­கி­றது. இதன் மூலம் நீதி வென்­றுள்­ளது. கடந்த 7 ஆண்­டு­க­ளாக நான் மிகுந்த மன உளைச்­ச­லில் இருந்­தேன். இறு­தி­யாக தி.மு.க. மீதும், மற்­ற­வர்­கள் மீதும் அடிப்­ப­டை­யற்ற, உண்­மைக்கு புறம்­பாகக் கூறப்­பட்ட குற்­றச்­சாட்­டு­கள் களை­யப்­பட்­டுள்­ளது. இது ஒரு பொய்­யான வழக்கு என்­பது இந்­தத் தீர்ப்­பின் மூலம் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது.

2ஜி வழக்­கில் இருந்து விடு­த­லை­யா­வேன் என்ற நம்­பிக்கை எனக்கு இருந்­தது. நான் ஏற்­க­னவே பல கஷ்­டங்­களை அனு­ப­வித்து விட்­டேன். இந்த நிலை­யில் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறை­யீடு செய்­யப்­போ­வ­தில் எனக்கு எந்­தப் பிரச்­சி­னை­யும் ஏற்­ப­டப் போவ­தில்லை.

டெல்லி புறப்­ப­டும் முன்பு எனது தந்தை கரு­ணா­நி­தியைச் சந்­தித்­தேன். அப்­போது அவர் என்­னி­டம் தைரி­ய­மாக இரு என்­றார். எனது அண்­ண­னும், கட்­சி­யின் செயல் தலை­வ­ரு­மான மு.க.ஸ்டாலின் தீர்ப்­புக்கு பிறகு என்­னு­டன் தொடர்பு கொண்டு வாழ்த்­தும், மகிழ்ச்­சி­யும் தெரி­வித்­தார்.

அகில இந்­திய காங்­கி­ரஸ் கட்­சித்­த­லை­வர் ராகுல்­காந்­தி­யும் எனக்கு வாழ்த்துக் கூறி­னார். எம் அனை­வ­ருக்­கும் இது மிகப்­பெ­ரிய நாள் என்­றார்.

கட்­சி­யில் (தி.மு.க.வில்) நான் எந்த பத­வி­யை­யும் எதிர்­பார்க்­க­வில்லை. தற்­போ­துள்ள நிலை­யில் மேலும் தீவிர அர­சி­ய­லில் ஈடு­பட விரும்­பு­கி­றேன்’’ என கனி­மொழி மேலும் தெரி­வித்­தார்.

You might also like