மன்­னா­ரில் சூடு பிடித்­துள்ள பண்­டி­கைக்­கால வியா­பா­ரம்!!

மன்­னா­ரில் கடந்த வரு­டத்தை விட இம்­முறை  பண்­டி­கைக்­கால வியா­பார நட­வ­டிக்­கை­கள் சூடு­பி­டித்­துள்­ள­து என்­று வியா­பா­ரி­கள் தெரி­வித்­த­னா்.

மன்­னார் நகர சபை­யால் வருடா வரு­டம் பண்­டி­கைக்­கால வியா­பா­ரங்­களை மேற்­கொள்ள குத்­த­கைக்கு இடம் வழங்­கப்­பட்டு வரு­கின்­றது.

அந்த வகை­யில் இம்­மு­றை­யும் நத்­தார்,புது­வ­ருட பண்­டி­கை­களை முன்­னிட்டு கடந்த 20 ஆம் திகதி தொடக்­கம் 31 ஆம் திகதி வரை வியா­பா­ரங்­களை மேற்­கொள்ள அனுமதி வழங்­கப்­பட்­டது.

கடந்த வரு­டம் குத்­த­கை­யால் சுமார் 75 இலட்­சம் ரூபா­வினை மன்­னார் நகர சபை வரு­மா­ன­மாக பெற்­றி­ருந்­தது.

எனி­னும் இம்­முறை குத்­த­கை­யால் ஒரு கோடியே 2 இலட்­சத்து 41 ஆயி­ரம் ரூபா வரு­மா­ன­மாக கிடைத்­துள்­ள­ தாக நக­ர­ச­பை­யின் செய­லர் எக்ஸ்.எல்.றெனோல்ட் தெரி­வித்­தார். வியா­பார நட­வ­டிக்கை இடம் பெறு­கின்ற பகு­தி­க­ளில் பொலி­ஸார் பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னா்.

You might also like