3 லட்­சம் ரூபா பணத்தை பேருந்­தில் தவ­ற­விட்ட நபர்!

மன்­னா­ரில் இருந்து கொழும்பு நோக்­கிச் சென்ற பேருந்­தில் பய­ணித்த ஒரு­வர் தனது 3 லட்­சம் ரூபா பணத்தை தவ­ற­விட்­டார். நானாட்­டன் பகு­தி­யைச் சேர்ந்த 39 வய­து­டைய நபர் ஒரு­வரே இவ்­வாறு பணத்தை தவ­ற­விட்­டார்.

இவர் தனது வீட்டு கட்­டு­மா­னப் பணிக்­காக மன்­னார் வங்­கி­யில் இருந்து மூன்று இலட்­சத்தை எடுத்­தார். பணத்தை எடுத்­துக் கொண்டு மன்­னா­ரில் இருந்து கொழும்பு நோக்கி செல்­லும் பேருந்­தில் ஏறி வந்­து­கொண்­டி­ருந்­தார்.

அவர் பேருந்­தில் தூங்­கி­விட்­டார். தனது இட­மான நானாட்­டன் வந்­த­த­தும் பணத்தை மறந்து திடீ­ரென எழுந்து இறங்­கி­விட்­டார். சிறிது நேரத்­தின் பின்­னரே அவ­ருக்கு பணத்­தைக் கைவிட்­டது நினை­வுக்கு வந்­தது. செய்­வ­த­றி­யாது பரி­த­வித்­துக் கொண்­டி­ருந்­தி­ருக்­கி­றார்.

இதே­நே­ரம் பேருந்­தில் பணத்­து­டன் பை இருந்­த­தைக் கவ­னித்த சாரதி சிறிது தூரம் வந்­த­பின்­னர் பேருந்தை நிறுத்­தி­விட்டு அவ­ரி­டம் சென்று பணத்­தைக் கொடுத்­துள்­ளார். பணத்­தைப் பெற்ற அந்த நபர் கண்­ணீர் சிந்­தி­னார். கை கூப்பி நன்றி தெரி­வித்­த­தார். இக்­காட்­சியை பார்த்­துக்­கொண்­டி­ருந்த பய­ணி­க­ளும் நெகிழ்ச்­சி­ய­டைந்­த­த­னர் – என சக­ப­யணி ஒரு­வர் தெரி­வித்­தார்.

You might also like