நீரிலும் நிலத்திலும் தரையிறங்கும் உலகின் மிகப்பெரிய வானூர்தி
நீரிலும், நிலத்திலும் தரையிறங்கும் திறன்கொண்ட உல கின் மிகப் பெரிய வானூர்தியை வெற்றிகரமாகச் சோதித்துள்ளது சீனா.
சீன அரசுக்குச் சொந்தமான வானூர்தித் தயாரிப்பு நிறுவனமான ‘வானூர்தி தொழில் துறைக் கழகம்’ நீரிலும், நிலத்திலும் தரையிறங்கக் கூடிய இந்த வானூர்தியை வடிவமைத்துள்ளது. இந்த வானூர்தியைத் தயாரிக்க எட்டு ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
‘குன்லாங்’ என்று பெயரிடப்பட்ட இந்த வானூர்தியின் சோதனை ஓட்டம் நேற்றுமுன்தினம் நடத்தப்பட்டது. சோதனை முழுவதுமாக வெற்றி அளித்துள்ளது என்று சீனா அறிவித்துள்ளது. இந்த வானூர்தியை வாங்குவதற்கு 12 நாடுகள் முன்பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.