கூட்­ட­மைப்­பு மீட்சி பெறுதல் மக்கள் கரங்களில்!!

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லுக்­குப் பின்­னர் தற்­போது மத்­தி­யில் உள்ள கூட்­டாட்சி எவ்­வாறு மறைந்து போகக் கூடுமோ, அதைப் போன்­ற­தொரு நிலை­தான் கூட்­ட­மைப்­புக்­கும் ஏற்­ப­டு­மெ­னக் கருத முடி­கின்­றது. சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் இணைந்து மத்­தி­யில் கூட்­டாட்­சியை அமைத்­துச் செயற்­ப­டு­கின்­றன.

மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை அரச தலை­வ­ராக்­கி­ய­தில் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பங்கு மகத்­தா­னது. ஐ.தே.கட்­சி­யின் தலை­வ­ரான ரணில் விக்­கி­ர­ம­ சிங்க வகுத்த அர­சி­யல் வியூ­கம் அரசியலில் அசைக்க முடி­யா­ த­வ­ரென வர்­ணிக்­கப்­பட்ட மகிந்­தவை அரச தலை­வர் தேர்­த­லில் அசைத்­துக் கீழே தள்­ளி­விட்­டது. மைத்­திரி எவ­ருமே எதிர்­பார்க்­காத வகை­யில் அரச தலை­வ­ரா­னார்.

கூட்­டாட்­சி­யின் ஆரம்­ப­கால நிலை­யில் இன்று தலை­கீழ் மாற்­றம்

இதன் பய­னாக ரணில் விக்­கி­ர­ம­ சிங்க தலைமை அமைச்­ச­ரா­னார். ஆரம்­பத்­தில் எல்­லாமே நன்­றா­கத்­தான் நடந்­தன. அரச தலை­வ­ரும் தலைமை அமைச் சரும் பிரிக்க முடி­யாத சக்­தி­க­ளாக வலம் வந்­த­னர். ஐக்­கிய தேசி­யக் கட்சி முழுக்க முழுக்க ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வின் கட்­டுப்­பாட்­டி­னுள் கொண்டு வரப்­பட்­டது. கட்­சிக்­குள் அவரை மீறி எவ­ரா­லும் எது­வுமே செய்ய முடி­ய­வில்லை. கட்­சிக்­குள் அவர் வைத்ததே சட்டம் எனக் கொள்­ளப்­பட்­டது.

ஆனால் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யில் அவ்­வா­றா­ன­தொரு நிலை காணப்­ப­ட­வில்லை. அந்­தக் கட்சி இரண்­டா­கப் பிள­வ­டைந்து காணப்­ப­டு­கின்­றது. இதில் ஒரு பகு­தியை மகிந்த தனது கட்­டுப்­பாட்­டி­னுள் கொண்டு வந்­து­விட்­டார். மற்­றைய பிரி­வுக்கு மைத்­திரி தலை­ வ­ரா­க­வுள்­ளார்.

ஆனால் மகிந்த தலை­மை­யி­லான பிரி­வி­னர் வேறு கட்­சி­க­ளு­டன் இணைந்து கூட்டு எதி­ரணி என்ற பெய­ரில் அரசை எதிர்த்து வரு­கின்­ற­னர். இந்த இரண்டு அணி­க­ளை­யும் ஒன்று சேர்ப்­ப­தற்­கான முயற்­சி­கள் யாவும் தோல்­வி­யி­லேயே முடி­வ­ டைந்­துள்­ளன.

உள்­ளூ­ராட்சி தேர்­த­லின் போதா­வது மைத்­தி­ரி­யும் மகிந்­த­வும் இணைந்து கொள்­வார்­க­ளென்ற எதிர்­பார்ப்­புக் காணப்­பட்­டது.அதற்­கான முயற்­சி­க­ளும் முழு வீச்­சில் இடம் பெற்­றன. ஆனால் அது­வும்­கூட வெற்­றி­ய­ளிக்­க­வில்லை.இந்த நிலை­யில் அரச தலை­வ­ருக்­கும் தலைமை அமைச்­ச­ருக்­கு­மி­டையே கருத்து வேறு­பாடு தோன்­றி­யுள்­ள­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லின் பின்­னர் இது பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­த­லா­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. சிறி­லங்கா சுதந்­தி­ ரக்­கட்சி ஒன்­று­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யம் அந்த வேளை­யில் ஏற்ப­டக் கூடு­மெ­னக் கருத வேண்­டி­யுள்­ளது.

ஐ.தே.கட்சி நலி­வு­ப­டு­மா­னால் அதன் ஆட்­சிக்­கும் ஆபத்து ஏற்­ப­ட­லாம்

அரச தலை­வர் தமது பத­விக்­கா­லம் முடி­வ­டை­யும் வரை­யில் தமது பத­வி­யில் அமர்ந்­தி­ருக்க முடி­யும். ஆனால் தலைமை அமைச்­ச­ரின் நிலை அவ்­வா­றில்லை. அவர் தமது பத­வி­யில் நீடிக்க வேண்­டு­மா­னால், நாடா­ளு­மன்­றத்­தில் ஐ.தே.கட்­சிக்கு பெரும்­பான்­மைப் பலம் இருந்­தாக வேண்­டும். ஆனால், இன்­றைய நிலை­யில் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யால் தனித்து நின்று இதைச் சாதிக்க முடி­யாது.

வேறு கட்­சி­க­ளின் உத­வி­யு­ட­னேயே ஐ.தே.கட்­சி­யில் இதைச் சாதிக்க முடி­யும். இதற்குக் கூட்­ட­மைப்­பின் ஆத­ரவு கோரப்­ப­டு­மெ­னத் தெரி­கின்­றது. ஆனால் கூட்­ட­மைப்பு அதற்கு உடன் படுமா? என்ற சந்­தே­கம் தற்­போது தோன்­றி­யுள்­ளது.

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் களம் கூட்­ட­மைப்­பின் அடித்­த­ளத்­தையே ஆட்­டிப் பார்த்­து­விட்­டது. ஆச­னப்பங்­கீடு விடயம் பங்­கா­ளிக் கட்­சி­க­ளி­டையே பெரும் விரி ­சலை ஏற்­ப­டுத்­தி­விட்­டது. ஏற்­க­னவே ஒரு கட்சி வில­கிய நிலை­யில் எஞ்­சி­யுள்ள மூன்று கட்­சி­க­ளா­வது நிலைத்து நிற்­குமா என்­ப­தில் பலத்த சந்­தே­கங்­கள் தோன்­றி­யுள்­ளன.

புலி­கள் இருக்­கும் வரை­யில் வாய்­மூடி மெள­னம் காத்­த­வர்­கள் தற்­போது சிறு விட­யத்துக்­குக் கூட வீறு­கொண்டு எழு­கின்­ற­னர். கூட்­ட­மைப்பை அசைத்­துப் பார்க்­கின்­ற­னர். மக்­கள் மாற்று வழி­யில்­லா­த­தால் கூட்­ட­மைப் பைத் தொடர்ந்து ஆத­ரித்து வரு­கின்­ற­னர். ஆனால் எதிர்­கா­லத்­தில் கூட்­ட­மைப்பு என்ற கட்­டுக்­கோப்பு நிலைத்து நிற்­குமா? என்ற சந்­தே­கம் தற்­போது எழுந்­துள்­ளது.

தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளது போக்­கில் பெரும் வேறு­பா­டு­கள்

தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் மக்­க­ளின் கருத்தை அறிந்து செயற்­ப­டு­கின்ற தன்மை தற்­போது வெகு­வா­கக் குறைந்து விட்­டது. தமது கொள்கைகளை மக்­க­ளி­டம் திணிக்­கின்ற போக்­குத்­தான் அதி­க­ரித்­துக் காணப்­ப­டு­கின்றது.அவர்­கள் சலர தரப்பினரையும் மதித்து நடந்­தி­ருந்­தால், கூட்­ட­மைப்பு பிள­வு­ப­டு­வ­தற்கு வழி யேற்பட்டிருக்கமாட்டாது. தமிழ் அர­சி­யல் வா­தி­க­ளின் சுய­ந­லத் தால் தமிழ் மக்­கள் குழம்­பிய நிலை­யில் காணப்­ப­டு­கின்­ற­னர்.

கூட்­ட­மைப்பு என்ற தோப்பு அழிந்து போக நேரு­மா­னால், அதன் பாதிப்பை எந்த வகை­யி­லும் ஈடு­செய்ய முடி­யாது. தமி­ழர்­க­ளின் குர­லாக ஒலித்­துக்­கொண்­டி­ருக்­கின்ற கூட்­ட­மைப்பு ஒரு தோப்­பாக இருந்த நிலை மாறி, தனி மரங்­கள் என்ற நிலை உரு­வா­கு­மே­யா­னால், அவற்றை ஒவ்­வொன்­றா­கத் தறித்து அழித்து விடு­வது பேரி­ன­வா­தத் தரப்­பு க­ளுக்கு இல­கு­வான காரி­ய­மா­கி­வி­டும்.

ஏற்­க­னவே தோற்­றுப்­போ­ன­வர்­கள் என்ற இழி­வான பெய­ரைத் தமி­ழர்­கள் தாங்கி நிற்­கின்­ற­னர். இதைப் போக்­கிக்கொள்ள வேண்­டு­ மா­னால், சில வெற்­றி­க­ளை­யா­வது அவர்­கள் ஈட்­டிக்­கொள்ள வேண்­டும். அர­சி­யல் ரீதி­யான வெற்­றி­க­ளைத் தனித்து நின்று தமி­ழர்­க­ளால் ஈட்­டிக்­கொள்ள முடி­யாது. கடந்த காலத் தில் ஏற்­பட்ட கசப்­பான அனு­ப­வங்­கள் இதற்­குச் சாட்சி பகர்­கின் றன.

மக்­கள் தமது அமை­தி­யைக் கலைத்து கிளர்ந்து எழு­வார்­க­ளா­யின் தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் பல­ரது தான்­தோன்­றித் தன­மான செயற்­பா­டு­கள் அவர்­க­ளுக்­குப் பெரும் பின்­ன­டை­வு­ க­ளையே ஏற்­ப­டுத்­தும். கூட்­ட­மைப்பு பலம் வாய்ந்த, ஒற்­று­மை­மிக்­க­தொரு அமைப்­பாகத் திகழ்ந்து தமிழ் மக்­க­ளுக்­கா­கக் குரல் கொடுக்க வைப்­பிக்க வேண்­டிய பொறுப்பு தமிழ் மக்­க­ளது கரங்­க­ளிலே தான் தங்­கி­யுள்­ளது.

You might also like