விண்வெளியில் ஆடம்பர விடுதி

சுற்றுலாப் பயணிகளைக் கவர பன்னாட்டு விண்வெளியில் 5 நட்சத்திர விடுதியைக் கட்டுவதற்கு ரஷ்யா திட்டமிட்டுள்ளது. பூமிக்கு மேல் விண்வெளியில் 400 மைல் உயரத்தில் பன்னாட்டு விண்வெளி ஆய்வகம் கட்டப்பட்டு வருகிறது.

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா மற்றும் பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, டென்மார்க், பெல்ஜியம் உள்ளிட்ட 17 ஐரோப்பிய நாடுகள் இணைந்து இந்தப் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. இந்த நிலையில் பன்னாட்டு விண்வெளி மையம் ஒன்றையும் அங்கு நிறுவ ரஷ்யா தயாராகியுள்ளது.

இந்தத் திட்டத்துக்காக இலங்கை மதிப்பில் சுமார் 10ஆயிரத்து 500 கோடி ரூபா செலவாகும் என்று கருதப்படுகிறது.

You might also like