அரசியல் நிலைப்பாட்டை ஞாயிறன்று அறிவிப்பேன்- ரஜினி

நான் அர­சி­ய­லுக்கு வரு­வது தொடர்­பில் வருடத்­தின் இறு­தி ­நா­ளான எதிர்­வ­ரும் ஞாயி­றன்று தான் அறி­விக்­க­வுள்ளேன் என்று தெரி­வித்­தார் ரஜினி.

தனது ரசி­கர்­களை ரஜினி தற்­போது சந்­தித்து வரு­கி­றார். இந்­தச் சந்­திப்­பின்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

‘‘அர­சி­யல் குறித்து என்ன சொல்­லப்­போ­கி­றேன் என்­பது குறித்து மக்­க­ளுக்கு ஆர்­வம் இருக்­கி­றதோ இல்­லையோ, ஊட­கங்­க­ளுக்கு பெரும் ஆர்­வம் உள்­ளது. அர­சி­ய­லில் இருக்­கும் கஷ்ட – நஷ்­டங்­கள் எனக்­குத் தெரி­யும். போருக்­குச் சென்­றால் வெற்­றி­பெற வேண்­டும். அதற்கு வீரம் மட்­டும் போதாது என்­றும் வியூ­கம் தேவை. எதிர்­வ­ரும் 31ஆம் திகதி அர­சி­யல் குறித்து எனது நிலைப்­பாட்டை அறி­விப்­பேன்’’ என்று அவர் மேலும் தெரி­வித்­தார்.

கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்­ன­ரும் ரஜினி, ரசி­கர்­கள் சந்­திப்பை நடத்­தி­யி­ருந்­தார். இந்­தச் சந்­திப்­பின்­போது ‘‘போருக்­குத் தயா­ராக இருங்­கள்’’ என்று தெரி­வித்து தனது அர­சி­யல் வருகை குறித்து மறை­மு­க­மாக அவர் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தார்.

You might also like