தட்சணாமரு­த­மடு மக்­களின் கோரிக்கை நிரா­க­ரிப்­பு

மன்­னார், தட்­ச­ணா­ம­ரு­த­மடு வைத்­தி­ய­சாலை கர்ப்­பி­ணித் தாய்­மார்­க­ளுக்­காக கட்­டப்­பட்ட பிரத்­தி­யேக கிளி­னிக் நிலை­ய­மா­கும் என்­றார் வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சர் குண­சீ­லன்.

இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
அங்கு கர்ப்­பிணி தாய்­மார்­க­ளுக்­கான சிகிச்­சை­கள், ஆலோ­ச­னை­கள் என்­பன வழங்­கப்­பட்டு வரு­கின்­றன. அது கர்ப்­பிணித் தாய்­மார்­க­ளுக்­கான சிகிச்சை நிலை­யமே தவிர ஆரம்ப வைத்­தி­ய­சாலை அல்ல. அங்கு கர்ப்­பி­ணி­க­ளுக்­கான சிகிச்சை வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் மட்டுமே செய்­யப்­பட்­டுள்­ளன –- என்­றார்.

தட்­ச­ணா­ம­ரு­த­மடு கிரா­மத்­தில் உள்­நாட்டுப் போருக்கு பின்­னர் புதி­தாக கட்­டப்­பட்ட வைத்­தி­ய­சா­லை­யில் மாதத்­தில் ஒரு முறை கர்ப்­பி­ணித் தாய்­மா­ருக்­கான கிளி­னிக் மாத்­தி­ரமே நடை­பெ­று­கின்­றது. ஏனைய நாள்­க­ளில் பூட்­டிய நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றது.

பாலம்­பிட்டி கிராம சேவை­யா­ளர் பிரி­வில் 350 க்கு மேற்­பட்ட குடும்­பங்­கள் வசிக்­கின்­றன. அவர்­க­ளின் நல­னைக் கருத்­திற் கொண்டு குறித்த வைத்­தி­ய­ சா­லை­யில் மாதத்­தில் இரு­மு­றை­யா­வது ஏனைய கிளி­னிக்­கு­ க­ளை­யும் நடத்த வடக்கு மாகாண சுகா­தார அமைச்சு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என மக்­கள் கோரிக்கை விடுத்­திருந்­தனர். அதற்கே சுகா­தார அமைச்சர் இப்­படிப் பதி­ல­ளித்­தி­ருக்­கிறார்.

You might also like