5 விபத்­துக்களில் 5 பேர் உயி­ரி­ழப்பு !

நாட்­டின் ஐந்து பகு­தி­க­ளில் ஒரே தினத்­தில் இடம்­பெற்ற 5 விபத்­து­க­ளில் பெண்­ணொ­ரு­வர் உட்­பட ஐவர் உயி­ரி­ழந்­த­னர்.இந்த விபத்­தில் உயி­ரி­ழந்த ஆண்­கள் நால்­வ­ரும் உந்­து­ரு­ளி­யில் பய­ணித்­த­வர்­க­ளா­வர்.

நேற்­று­முன்­தி­னம் எம்­பி­லிப்­பிட்­டிய, அம்­பாறை, மீரிகம, பேரா­தனை, கணே­முல்ல உள்­ளிட்ட பகு­தி­க­ளி­லேயே இந்த விபத்­து­கள் பதி­வா­கி­யுள்­ளன என்று பொலிஸ் ஊட­கப்­பி­ரிவு தெரி­வித்­துள்­ளது.

எம்­பி­லிப்­பிட்­டிய
எம்­பி­லிப்­பி­டிய – இரத்­தி­ன­புரி பிர­தான வீதி­யில் டிப்­பர், வான் மற்­றும் லொறிக்­கி­டை­யில் அகப்­பட்டு உந்­து­ருளி விபத்­துக்­குள்­ளா­னது. அதைச் செலுத்­திச்­சென்ற நபர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்தார். உயி­ரி­ழந்­த­வர் பெல்­ம­டுல்ல பகு­தி­யைச் சேர்ந்த 54 வயது மதிக்­கத்­தக்க நபர் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

சம்­ப­வம் தொடர்­பில் டிப்­பர் வாக­னத்­தின் சார­தி­யைக் கைது­செய்­துள்ள எம்­பி­லிப்­பிட்­டிய பொலி­ஸார் மேல­திக விசா­ர­ணை­க­ளை­யும் முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­ற­னர்.

அம்­பாறை
நேற்­று­முன்­தி­னம் நண்­ப­கல் 12 மணி­ய­ள­வில் அம்­பாறை, சுது­வெல்ல, சாம­புர பகு­தி­யில் வேக­மா­கச்­சென்ற உந்­து­ருளி கட்­டுப்­பாட்டை இழந்து வீதி­யி­லி­ருந்து தூக்­கி­யெ­றிப் பட்­டது. அதைச் செலுத்­திச்­சென்ற 19 வய­து­டைய இளை­ஞர் படு­கா­ய­ம­டைந்­தார்.

அவர் உட­ன­டி­யாக மருத்­து­வ­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­போ­தும் சிகிச்சை பய­னின்றி உயி­ரி­ழந்­தார் என்று தெரி­விக்­கப்பட்டது. சம்­ப­வம் தொடர்­பான விசா­ர­ணை­களை அம்­பாறை பொலி­ஸார் முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­ற­னர்.

மீரி­கம
நேற்­று­முன்­தி­னம் மாலை 4 மணி­ய­ள­வில் மீரி­க­ம­வில் லொறி­யொன்­று­டன் உந்­து­ருளி மோதி விபத்­துக்­குள்­ளா­னது. உந்­து­ரு­ளி­யைச் செலுத்­திச்­சென்ற நபர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தார். சம்­ப­வம் தொடர்­பான மேல­திக விசா­ர­ணை­களை மீரி­கம பொலி­ஸார் முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர்.

பேரா­தனை
நேற்­று­முன்­தி­னம் மாலை பேரா­தனை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கெலி­ஓ­யா­வில் அமைந்­துள்ள எரி­பொ­ருள் நிரப்பு நிலை­யத்­துக்கு முன்­பா­கப் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த பஸ் ஒன்­றின் பின்­பு­றம் உந்­து­ருளி மோதி­ய­தில் அதைச் செலுத்­திச்­சென்ற 19 வய­து­டைய இளை­ஞர் படு­கா­ய­ம­டைந்­தார்.

அவர் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­போ­தும் சிகிச்சை பய­னின்றி உயி­ரி­ழந்தார். மேல­திக விசா­ர­ணை­கள் பேரா­தனை பொலி­ஸா­ரால் முன்­னெ­டுக் கப்­பட்டு வரு­கின்­றது எனப் பொலிஸ் ஊட­கப்­பி­ரிவு தெரி­வித்­தது.

கணே­முல்ல
நேற்­று­முன்­தி­னம் மாலை 5 மணி­ய­ள­வில் ராகம, கணே­முல்ல பகு­தி­யில் பய­ணித்­து­கொண்­டி­ருந்த வான் ஒன்­றும் உந்­து­ருளி ஒன்­றும் நேருக்கு நேர் மோதின. உந்­து­ரு­ளி­யின் பின்­னி­ருக்­கை­யில் அமர்ந்து சென்ற பெண் உயி­ரி­ழந்­தார்.

22 வய­து­டைய இந்­தப் பெண் படு­கா­யங்­க­ளு­டன் ராகம மருத்­து­வ­மனை­யில் சேர்க்­கப்­பட்டு சிகிச்சை
பய­னின்றி உயி­ரி­ழந்­தார். சம்­ப­வம் தொடர்­பான மேல­திக விசா­ர­ணை­களை கணே­முல்ல பொலி­ஸார் முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர்.

You might also like