Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

அழகுக்கு ஆரஞ்சு பழம்

கண்களைச் சுண்டி இழுக்கும் வசிகரமான ஆரஞ்சு பழம், நம் தேகத்துக்கும் வசிகரத்தை அள்ளித் தரக்கூடியது. \

1. கண்கள் “ப்ளிச்” ஆக சில குறிப்புகள்

* ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள்.

*ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் “ப்ளிச்” ஆகிவிடும்.
தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது.

2. ஜொலி ஜொலிக்க…

*தலையின் வறட்டுத் தன்மையைப் போக்கி, ஜொலி ஜொலிக்க வைக்கிறது ஆரஞ்சு தோல் சிகிச்சை.

*உலர்ந்த ஆரஞ்சு தோல், * கடலை பருப்பு, பயந்தம் பருப்பு, கசகசா – இவை ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து, *அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளியுங்கள்.

இப்படி செய்துவந்தால் முடி பளபளப்பாகவும், வாசனையாகவும் இருக்கும். இதையே உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கும் வாசனை பவுடராகவும் பயன்படுத்தலாம்.