133ஏக்­கர் காணி கேப்­பாபில­வில் இரா­ணு­வத்­தால் இன்று விடு­விப்பு!

முல்­லைத்­தீவு கேப்­பா­பி­லவு மக்­க­ளின் 133 ஏக்­கர் காணி இன்று இரா­ணு­வத்­தால் கைய­ளிக்­கப்­பட உள்­ளது என முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­லர் ரூப­வதி கேதீஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

அனைத்­துக் காணி­க­ளும் விடு­விக்­கப் பட்­டாலே போராட்­டம் கைவி­டப்­ப­டும் என காணி­க­ளுக்­குச் சொந்­தக்­கா­ரர்­க­ளான மக்­கள் உறு­தி­ப­டத் தெரி­வித்­த­னர்.

முல்­லைத்­தீவு கேப்­பா­பி­ல­வில் மக்­க­ளுக்­குச் சொந்­த­மான 480 ஏக்­கர் காணி, முதன்மை வீதி இரா­ணு­வத்­தி­ன­ரால் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. தமது சொந்­தக் காணி­களை விடு­விக்­கு­மாறு கடந்த 8 வரு­ட­மாக அந்த மக்­கள் கோரி­யி­ருந்­த­னர்.

கடந்த பெப்ரவரி ­மா­தம் 1ஆம் திகதி காணிக்கு சொந்­த­மான 138 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த மக்­கள் அனை­வ­ரும் ஒன்று திரண்டு ஓர் இடத்­தில் இருந்து போராட ஆரம்­பித்­த­னர். இந்த நிலை­யில் அந்த மக்­க­ளுக்­குச் சொந்­த­மான 90 ஏக்­கர் காணி இரா­ணு­வத்­தால் விடு­விக்­கப்­பட்­டது.

அனை­வ­ரு­டைய காணி­கை­ளை­யும் விடு­விக்­கு­ மாறு கோரி மக்­கள் தொடர்ச்­சி­யா­கப் போரா­டத் தீர்­மா­னித்­த­னர். இரவு பக­லாகப் போராட்­டம் தொடர்ந்­தது. நேற்று 302ஆவது நாளா­க­வும் அவர்­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். இந்த நிலை­யி­லேயே அந்த மக்­க­ளுக்­குச் சொந்­த­மான மேலும் 133 ஏக்­கர் காணி இரா­ணு­வத்­தால் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது என மாவட்­டச் செய­லா­ளர் அறி­வித்­துள்­ளார்.

‘கேப்­பா­பி­லவு மக்­க­ளின் 133 ஏக்­கர் காணி நாளை( இன்று) இரா­ணு­வத்­தால் எமக்கு கைய­ளிக்­கப்­பட உள்­ளது. காணி­க­ளுக்­குள் மக்­கள் செல்­ல­லாம். ஆனால் அவை அள­விட்டு, எல்­லை­யிடப்­பட்­ட பின்­னரே மக்­க­ளின் பாவ­னைக்கு வழங்­கப்­ப­டும் இந்த நடை­மு­றை­களை பிர­தேச செய­ல­ரு­டன் இணைந்த அணி­யி­னர் முன்­னெ­
டுப்­பர்’ என்று மாவட்­டச் செய­லா­ளர் மேலும் தெரி­வித்­தார்.
மாவட்­டச் செய­லர் இவ்­வாறு அறி­வித்த போதும் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள மக்­கள் அனைத்­துக் காணி­க­ளும் விடு­விக்­கப்­பட்­டாலே போராட்­டம் கைவி­டப்­ப­டும் எனத் தெரி­வித்­த­னர். ‘எமது மக்­கள் அனை­வ­ரும் ஒன்று திரண்டு போரா­டு­கின்­றார்­கள்.

அவர்­கள் அனை­வ­ரு­டைய காணி­க­ளும் விடு­விக்­கப்ப­ட­வேண்டும். அங்கு இரா­ணு­வத்­தால் முதன்மை வீதி­யும் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அது­வும் விடு­விக்­கப்­பட வேண்­டும்.

அப்­போது தான் எமது போராட்­டம் கைவி­டப்­ப­டும். மக்­க­ளுக்கு வாக்­கு­றுதி அளித்­த­துக்கு இணங்க நான் தொடர்ந்து அவர்­க­ளு­டன் இணைந்­தி­ருப்­பேன்’ என போராட்­டத்தை முன்­னெ­டுக்­கும் ஆறு­மு­கம் வேலா­யு­த­பிள்ளை தெரி­வித்­தார்.

You might also like