கணவன் இறந்து 16 நாள்களில் – மனைவியும் காய்ச்சலால் சாவு!!

முல்­லைத்­தீ­வில் பர­வி­வ­ரும் மர்­மக் காய்ச்­ச­லால் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 10 ஆக அதி­க­ரித்­துள்­ளது. காய்ச்சலால் பீடிக்­கப்­பட்டு யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­னை­யில் சேர்க்­கப்­பட்­டி­ருந்த பெண் ஒரு­வர் நேற்­று­முன்­தி­னம் உயி­ரி­ழந்­தார். இவ­ரது கண­வர் காய்ச்­சல் கார­ண­மாக 16 நாள்­க­ளுக்கு முன்­னர் உயி­ரி­ழந்தார்.

தண்­ணீ­ரூற்று, கணுக்­கே­ணி­யைச் சேர்ந்த முரு­கா­னந்­தம் மலர்­விழி எனும் இரு பிள்­ளை­க­ளின் தாயே உயி­ரி­ழந்­துள்­ளார்.

இவ­ரின் கண­வ­ரான ப.முரு­கா­னந்­தம் (வயது-53) காய்ச்­சல் கார­ண­மாக கடந்த 11ஆம் திகதி உயி­ரி­ழந்­தார். அன்று காய்ச்­ச­லால் பீடிக்­கப்­பட்ட மலர்­விழி முல்­லைத்­தீவு மாவட்ட மருத்­து­வ­னை­யில் சேர்க்­கப்­பட்­டார். மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் அவர் சேர்க்­கப்­பட்­டார். சிகிச்சை பய­னின்றி நேற்­று­முன்­தி­னம் இரவு அவர் உயி­ரி­ழந்­தார்.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் பர­வும் இனந்­தெ­ரி­யாத காய்ச்­ச­லால் குறு­கிய காலத்­துக்­குள் 9 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். இது தொடர்­பான விசா­ர­ணை­கள் நடத்­தப்­பட்­டி­ருந்­தன. இன்­பு­ளு­வன்சா தொற்­றுக் கார­ண­மா­கவே அவர்­கள் உயி­ரி­ழந்­துள்­ள­னர் என்று வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சர் தெரி­வித்­தி­ருந்­தார்.

You might also like