கொள்­கை­யோடு இணங்­கு­வோரை எதிர் காலத்­தில் இணைப்­போம்!!

தமிழ் தேசிய விடு­த­லைக்­கூட்­ட­மைப்­பா­னது எதிர் காலத்­தில் கொள்­கை­க­ளு­டன் ஒத்­துப்­போ­கக்­கூ­டிய ஈழ விடு­த­லைப்­போ­ராட்ட அமைப்­புக்­களை ஒன்­றி­ணைத்து பல வேலைத்­திட்­டங்­களை முன்­ன­கர்த்த இருப்­ப­தாக ஈழ மக்­கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி­யின் மன்­னார் மாவட்ட அமைப்­பா­ள­ரான எஸ்.ஆர் கும­ரேஸ் தெரி­வித்­தார்.

மன்­னா­ரில் உள்ள அலு­வ­ல­கத்­தில் நேற்று தேர்­தல் தொடர்­பில் ஊட­கங்­க­ளுக்­குக் கருத்து தெரி­விக்­கும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரிவித்­த­தா­வது;

ஒற்­று­மைக்­கா­க­வும், ஜன­நா­ய­கத்தை பேணு­வ­தற்­கா­க­வும் பல்­வேறு வழி­க­ளில் உட்­கட்சி ஜன­நா­ய­கத்தை முன் நிறுத்தி பல போராட்­டங்­களை உள்­ளுக்­குள் நடத்தி வந்­தி­ருக்­கின்­றது. அந்­தப் போராட்­டங்க­ளுக்­கான எந்­தப் பயனும் இன்­று­வரை கிடைக்­காத நிலை­யில் எதிர் காலத்­தில் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பில் பங்­கா­ளிக்­கட்­சி­க­ளாக இருந்த தமி­ழீழ விடு­தலை இயக்­கம் மற்­றும் தமி­ழீழ விடு­த­லை­க்­க­ழ­கம் போன்ற அமைப்­புக்­க­ளும் எதிர்­கா­லத்­தில் எம்­மோடு இணை­வார்­கள் என்­பது எமது நம்­பிக்கை.

வடக்­கில் இருக்­கின்ற முத­ல­மைச்­சர் வர இருக்­கின்ற மாகாண சபை தேர்­த­லில் உதய சூரி­யன் சின்­னத்­தி­லான தமிழ் தேசிய விடு­த­லைக்­கூட்­ட­மைப்­பில் இணைந்து போட்­டி­யி­டு­வார் என்­பது எங்­க­ளு­டைய நம்­பிக்கை மாத்­தி­ர­மின்றி வட கிழக்கு வாழ் தமிழ் மக்­க­ளின் நம்­பிக்­கை­யா­க­வும் உள்­ளது.

-எதிர் காலத்­தில் தமிழ் தேசிய விடு­த­லைக்­கூட்­ட­மைப்­பா­னது மக்­கள் சக்­தி­யாக உரு­வெ­டுப்­பது மட்­டு­மின்றி உண்­மை­யி­லேயே மக்­க­ளு­டைய அடிப்­படை உரி­மை­களை வென்­றெ­டுக்­கின்ற ஒரு சக்­தி­யாக உரு­வா­கும் என்­ப­தில் ஐயம் இல்லை. எனவே மக்­கள் இயக்­க­மாக கட்டி எழுப்புவ­தற்கு எதிர்­வ­ரும் தேர்­தல்­க­ளில் மக்­கள் இந்த சக்­தியை பலப்­ப­டுத்த வேண்­டும்– என்­றார்.

You might also like