ஒற்றுமையை இழந்ததால் தமிழர்கள் தொடர்ந்தும் தோற்றுப்போனவர்கள் தான்

தமி­ழர்­கள் ஒற்­று­மை­யா­க­வும் பலத்­து­ட­னும் இல்­லா­விட்­டால் அவர்­கள் ஒட்­டு­மொத்­த­மாக அழியும் நிலையே உரு­வா­கும். இவ்­வாறு தெரி­வித்­தி­ருக்­கின்­றார், அமைச்­சர் மனோ­க­ணே­சன். அவர் யதார்த்த நிலை­யைப் புரிந்து கொண்­டு­தான் இத­னைத் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

இந்த அழ­கிய சிறிய நாட்­டில் சுமார் எழு­பது வீத­மா­ன­வர்­கள் சிங்­கள மொழி பேசு­கின்ற மக்­க­ளா­வர். சிறு­பான்மை இனத்­த­வர்­கள் அனை­வ­ரும் எஞ்­சிய முப்­பது வீதத்­தி­னுள் அடங்­கு­கின்­ற­னர். இவர்­க­ளில் இலங்­கைத் தமி­ழர்­கள், இந்­திய வம்­சா­வ­ழித் தமி­ழர்­கள், முஸ்­லிம் மக்­கள், மலா­யர், பறங்­கி­யர் எனப் பல இனத்­த­வர்­கள் அடங்­கு­கின்­ற­னர்.

இலங்­கைத்­த­மி­ழர்­கள் நாட்­டின் வடக்­கை­யும், கிழக்­கை­யும் தமது தாயக பூமி­யெ­னக் கூறு­கின்­ற­னர். திட்­ட­மிட்ட குடி­யேற்­றங்­க­ளால்
கிழக்கு மாகாணம் தமி­ழர்­க­ளின் கைக­ளி­லி­ருந்து நழு­வி­விட்­டதை ஒப்­புக்­கொள்­ளத்­தான் வேண்­டும். வடக்கு மட்­டுமே தமி­ழர்­க­ளின் முழு ஆதிக்­கத்­தின் கீழ் காணப்­ப­டு­கின்­றது. இதற்­கும் இடை­யூறு ஏற்­ப­டுத்­து­கின்ற செயற்­பா­டு­கள் இடம்­பெ­றா­ம­லில்லை. தலை நக­ரான கொழும்­பி­லும் பெரு­ம­ளவு இலங்­கைத் தமி­ழர்­கள் செறிந்து வாழ்­கின்­ற­னர்.

பல்­வேறு வேறு­பா­டு­க­ளைக் கொண்­ட­வர்­களாக
இலங்­கைத் தமி­ழர்­க­ளும் இந்­திய வம்­சா­வ­ளித் தமி­ழர்­களும்

இந்­திய வம்­சா­வ­ளித் தமி­ழர்­கள் மலை­ய­கத்­தைத் தமது வாழ்­வி­ட­மா­கக் கொண்­ட­வர்­கள். தலை­ந­க­ரான கொழும்பு உட்­பட நாட்­டின் ஏனைய பிர­தே­சங்­க­ளி­லும் பர­வ­லாக வாழ்­கின்­ற­னர். இனத்­தா­லும் மொழி­யா­லும் ஒன்­று­பட்­டுள்­ள­போ­தி­லும், இலங்­கைத் தமி­ழர்­க­ளும் இந்­திய வம்­சா­வ­ழித்­த­மி­ழர்­க­ளும் கலா­சா­ரம் மற்­றும் பழக்க வழக்­கங்­க­ளில் வேறு­பட்­டுக்­கா­ணப்­ப­டு­கின்­ற­னர்.

மொழி­யைப் பேசு­வ­தி­லும் கூட வேறு ­பாடு காணப்­ப­டு­கின்­றது. மலை­ய­கத் தமி­ழர்­கள் பல ஆண்­டு­க­ளாக இலங்­கை­யில் வாழ்­கின்­ற­போ­தி­லும், இந்­தி­யக் கலா­சா­ரத்தை மறந்து விட­வில்லை. அதை ஒட்­டி­ய­தா­கவே தமது வாழ்்க்கை முறை­களை அவர்கள் அமைத்­துக் கொண்­டுள்­ள­னர். ஏதோ­வொரு பல­மான சுவர் இலங்­கைத் தமி­ழர்­க­ளுக்­கும், இந்­திய வம்­சா­வ­ளித்­த­மி­ழர்­க­ளுக்கு மிடையே எழுந்து நிற்­ப­தைக் காண முடி­கின்­றது. இதன் கார­ண­மா­கவே இந்த இரண்டு இனத்­த­வர்­க­ளும் ஒன்­றாக இணைந்து வாழ்­வ­தைக் காண முடி­ய­வில்லை.

இவர்­க­ளது அர­சி­யல் செயற்­பா­டு­க­ளும் வேறு­பட்ட கோணங்­களை மைய­மா­கக் கொண்­டுள்­ளன. அத்­து­டன் ஏரா­ள­மான தொழிற் சங்­கங்­கள் மலை­ய­கத்­தில் முளைத்து மக்­க­ளைப் பிள­வு­ப­டுத்தி வரு­கின்­றன.

இந்­திய மக்­க­ளது ஒற்­று­மையே
அவர்­கள் சுதந்­தி­ரம் பெற உத­வி­யது

இனக் கல­வ­ரங்­கள் ஏற்­ப­டும் வேளை­ க­ளில் மலை­ய­கத்­தில் வாழ்­கி்ன்ற இந்­திய வம்­சா­வ­ளித் தமி­ழர்­கள், இலங்­கைத்­த­மி­ழர்­கள் என்ற வேறு­பாடு காட்­டப்­ப­டு­வ­தில்லை. தமி­ழர்­கள் என்ற வகை­யில் இந்த இரண்டு இனத்­த­வர்­க­ளும் பாதிப்பை எதிர்­கொள்­கின்­ற­னர். வடக்­குக் கிழக்­கில் வாழ்­கின்ற தமி­ழர்­க­ளும் ஒற்­று­மை­யாக இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. அர­சி­யல் ரீதி­யாக மட்­டு­மல்­லாது பிர­தேச மற்­றும் சமூக ரீதி­யா­க­வும் அவர்­க­ளி­டையே பிள­வு­கள் காணப்­ப­டு­கின்­றன.

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் நெருங்­கும் வேளை­யில் பிள­வு­கள் மேலும் அதி­க­ரித்­துக் காணப்­ப­டு­கின்­றன. ஆச­னப்­பங்­கீட்­டில் குழப்­பம், வேட்­பா­ளர் தெரி­வில் இழு­ப­றி­நிலை, ஒரே கட்­சிக்­குள் மோதல்­கள் என வெவ்­வேறு பரி­ணா­மங்­க­ளில் தமி­ழர்­கள் தமக்­குள் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் எதிரி­க­ளாக மாறி நிற்­கின்­ற­னர். பதவி மோகம் இவர்­க­ளது கண்­களை மறைத்து நிற்­கின் றது. இன உணர்வு மழுங்கி வேத­னை­யைத் தரு­கின்­றது. ஒர் இனத்­தின் அழி­வுக்கு அந்த இனத்­தின் மத்­தி­யில் நில­வும் ஒற்­று­மை­யீ­னம் ஒன்றே போது­மா­னது. அண்­ணல் மகாத்­மா­காந்தி தலை­மை­யி­லான இந்­தி­யச் சுதந்­தி­ரப்­போர் வெற்­றி­ய­டைந்­த­மைக்கு அன்று இந்­திய மக்­க­ளிடம் இருந்த ஒற்­று­மையே கார­ண­மாக அமைந்­தது.

இன,மத மொழி வேறு­பா­டின்றி அனைத்து இந்­தி­யர்­க­ளும் அண்­ணல் காந்தி தலை­மை­யில் ஒன்று திரண்டு போரா­டி­ய­தால் அந்­நி­யர்­கள் இந்­தி­யாவை விட்டு வில­கிச் சென்­ற­னர். இந்­திய மக்­கள் சுதந்­தி­ரக் காற்­றைச்­சு­வா­சித்­த­னர். இந்த நாட்­டி­லும் தமி­ழர்­கள் தமது உரி­மை­க­ளுக்­காக ஆயு­த­மேந்­திப் போரா­டி­னார் கள். மிக நீண்­ட­கா­லம் இவர்­க­ளது போராட்­டம் நீடித்­தது. ஆனா­லும் இறு­தி­ யில் தோல்­வியே மிஞ்­சி­யது. தமி­ழர்­கள் ஒற்­று­மை­யாக ஒரே­ய­ணி­யில் இணைந்து போரா­டி­யி­ருந்­தால் இந்த நிலை ஏற்­பட்­டி­ருக்க மாட்­டாது.

தென்­னா­பி­ரிக்­கா­வில் தமது இன­மக்­க­ளின் ஆத­ரவு இல்­லாது நெல்­சன் மண்­டே­லா­வி­னால் தமது நாட்­டுக்­குச் சுதந்­தி­ரத்­தைப் பெற்­றுக்­கொ­டுத்­தி­ருக்க முடி­யாது. ஒற்­று­மையே பலம் என்­பதை மேற்­கு­றிப்­பிட்ட சம்­ப­வங்­கள் எமக்கு எடுத்­துக்­காட்­டு­கின்­றன.

இலங்­கைத் தமிழ் மக்­கள்
வேறு­பா­டு­களை மறந்து
ஒன்­றி­ணை­தல் வேண்­டும்

ஆகவே இலங்­கை­யில் வாழ்­கின்ற தமி­ழர்­க­ளா­கிய நாம் இனி­யா­வது எமக்­குள் நில­வும் வேறு­பா­டு­களை ஒதுக்கி வைத்­து­விட்டு ஒற்­று­மை­யு­டன் வாழப்­ப­ழ­கிக் கொள்ள வேண்­டும். அடம்­பன் கொடி­யும் திரண்­டால் மிடுக்கு என்­பார்­கள். இதற்கு ஏற்­றாற்­போன்று தமி­ழர்­கள் ஒன்­று­
தி­ரண்டு எமது உரி­மை­க­ளுக்­கா­கப் போரா­டும்­போது வெற்றி நிச்­ச­ய­மா­ கக்­கிட்­டவே செய்­யும். இதை­வி­டுத்து ஒற்­றுமை இழந்­த­ நிலை காணப்­பட்­டால் முழு இன­முமே அழிவை நோக்­கிச் செல்ல நேரி­டும். தமி­ழர்­கள் பலம்­பெற்று விளங்­கி­னால் இன­வா­தி­கள் அடங்­கி­யி­ருக்­கவே செய்­வார்­கள்.

ஆனால் தமிழ் மக்களின் பல­வீ­னத்தை அவர்­கள் நன்­றா­கவே பயன்­ப­டுத்­திக் கொள்­கின்­ற­னர். கேட்­ப­தற்கு எவ­ரு­மே­யில்­லாத நாதி­யற்ற இனம் தமிழ் இனம் என அவர்­கள் நினைப்­ப­தால், அவர்களது இன­வா­தச் செயற்­பா­டு­க­ள் தடை­யின்­றித் தொடர்­கின்­றன.

தமி­ழர்­க­ளா­கிய நாம் இனி­யா­வது விழித்­துக்­கொள்ள வேண்­டும். எங்­க­ளைச் சுற்­றி­யுள்ள பகை­யைக் களைந்து எறி­வ­தற்கு ஒற்­று­மை­யு­டன் செயற்­பட வேண்­டும். இது வொன்றே எமது இனத்தை மீ்ட்சிப்­பா­தைக்கு இட்டுச்­செல்­லும்.

You might also like