அறிக்கை வெளி­யா­ன­தும் உண்மை அம்­ப­ல­மா­கும் என்­கி­றார் ரவி

சர்ச்­சைக்­கு­ரிய பிணை­முறி மோசடி விவ­கா­ரம் குறித்து விசா­ரணை மேற்­கொண்­டு­வ­ரும் அரச தலை­வர் ஆணைக்­குழு, நாளை மறு­தி­னம் ஞாயிற்­றுக் கிழமை அதன் அறிக்­கையை அரச தலை­வ­ரி­டம் கைய­ளிக்­கும்­போதே உண்­மை­கள் அம்­ப­ல­மா­கும் என­வும், நான் நிர­ப­ரா­தி­யா­வேன் என­வும் முன்­னாள் நிதி அமைச்­சர் ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்­தார்.

பிணை­முறி மோசடி தொடர்­பில் விசா­ரணை மேற்­கொண்­டு­வ­ரும் அரச தலை­வர் ஆணைக்­குழு நாளை மறு­தி­னம் ஞாயிற்­றுக்­கி­ழமை தமது விசா­ரணை அறிக்­கையை அரச தலை­வ­ரி­டம் சமர்ப்­பிக்­க­வுள்­ளது.

இந்த அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்ட பின்­னர் அதி­ர­டி­யான அர­சி­யல் மாற்­றங்­கள் ஏற்­ப­டு­மெனத் தக­வல்­கள் கசிந்­து­வ­ரும் நிலை­யில் இது குறித்துக் கருத்து வெளி­யிட்ட ரவி கரு­ணா­நா­யக்க, கடந்த காலத்­தில் ஊட­கங்­கள் என்னை வித்­தைக்­கா­ர­னா­கப் பயன்­ப­டுத்­தி­யி­ருந்­தன.

பிணை­முறி விவ ­கா­ரம் குறித்த அறிக்கை அரச தலை­வ­ரி­டம் கைய­ளிக்­கப்­பட்ட பின்­னர் உண்­மை­கள் அம்­ப­ல­மா­கும் என்­ப­து­டன் சத்­தி­யம் வெல்­லும். புதிய அர­சி­யற் கலா­சா­ர­மொன்றை உரு­வாக்­கவே நான் அமைச்­சுப் பத­வி­யொன்­றைத் துறந்­தி ­ருந்­தேன் -– என்­றார்.

You might also like