முதலாவது  ஆட்டத்தில்  சிகர் தவான்  சந்தேகம் 

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் ஆட்டத்தில், இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தவான் களமிறங்குவது சந்தேகம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்திய அணி தென்னாபிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஆட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்தத் தொடருக்கான இந்திய அணி தென்னாபிரிக்காவுக்குச் சென்றுள்ளது. தவானின் கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் முதலாவது ஆட்டத்தில் தவான் களமிறங்குவது தொடர்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.

எனினும் இது தொடர்பில் இறுதி அறிவிப்பு நாளை அல்லது நாளை மறுதினம் வெளிவரும் என்றும் தெரிவிக்கப் பட்டது.

You might also like