பழி­வாங்­கு­வ­தற்­காக இராணுவம் வீட்டை இடித்து அழித்­தது- !!

கேப்­பா­பி­ல­வில் விடு­விக்­கப்­பட்ட காணி­யில் கடந்த 5 மாதங்­க­ளுக்கு முன்­னர் இருந்த வீடு இரா­ணு­வத்­தால் சுக்­கு­நூ­றாக் கப்­பட்­டுள்­ளது என்று குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­ கி­றது. திட்­ட­மிட்டு பழி­வாங்­கும் வகை­யில் அவர்­கள் இவ்­வாறு செய்­துள்­ள­னர் என்று தமது காணி­க­ளைத் திருப்­பும் போராட்­டத்­தைக் கடந்த 300 நாள்­க­ளுக்­கும் மேலாக முன்­னெ­டுத்­துச் செல்­லும் ஆறு­மு­கம் வேலா­யு­த­பிள்ளை தெரி­வித்­தார்.

இதே­வேளை, விடு­விக்­கப்­பட்ட பகு­தி­க­ளில் தாம் அமைத்த 28 வீடு­கள் மற்­றும் கட்­ட­டங்­க­ளைப் படை­யி­னர் மக்­க­ளி­டம் கைய­ளித்­துள்­ள­னர்.

ஒப்­ப­டைக்­கப்­பட்ட காணி­களை அள­வி­டும் பணி நேற்று நடை­பெற்­றது. அப்­போது அங்கு சென்­றி­ருந்­த◌ார் வேலா­யு­த­பிள்ளை. நில­மையை நேரில் பார்த்­த­பின்­னர் அது குறித்து உத­யன் பத்­தி­ரி­கை­யி­டம் அவர் தெரி­வித்­த­தா­வது: காணி­யின் உரி­மை­யா­ளர்­கள் மட்­டுமே படை­யி­ன­ரால் ஏற்­றிச்­செல்­லப்­பட்­டார்­கள்.

காணி­க­ளில் படை­யி­ன­ரால் அமைக்­கப்­பட்ட 28 கட்­ட­டங்­கள் உள்­ளன. சில காணி­க­ளில் காணி­க­ளில் ஒன்­றுக்கு மேற்­பட்ட கட்­ட­டங்­க­ளும் காணப்­ப­டு­கின்­றன. ஆனால், ஏற்­க­னவே காணி­க­ளில் இருந்த சில­ரது வீடு­கள் உடைக்­கப்­பட்­டுள்­ளன.

என்­னு­டைய வீடும் உடைத்­துத் தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டுள்­ளது. 5 மாதங்­க­ளுக்கு முன்­னர் கேப்­பா­பி­லவு ஆலய வழிப்­பாட்­டுக்­குச் சென்­ற­போது முழு­மை­யாக இருந்­தது. அப்­போ­தும் நாங்­கள் காணி­களை விடு­விக்­கக்­கோ­ரிப் போராட்­டம் நடத்­திக்­கொண்­டி­ருந்­தோம்.

அத­னால் என்­னைப் பழி­வாங்­கு­வ­தற்­கா­கத் திட்­ட­மிட்டு எனது வீட்டை உடைத்­துள்­ளார்­கள். காணி மீட்­புப் போராட்­டத்­துக்கு நான் தலைமை தாங்­கு­வ­தைப் பொறுக்­க­மு­டி­யா­ம­லேயே இப்­ப­டிச் செய்­துள்­ளார்­கள் – என்­றார்.

காணி­க­ளைப் பார்க்க நேரில் சென்ற வேறு சிலரோ தமது காணி­க­ளில் புதிய வீடு­கள் இருப்­பது தமக்­குக் கிடைத்த அதிர்ஸ்­டம் என்று கூறி­னார்­கள்.

‘‘இரா­ணு­வம் அமைத்­துள்­ள­வற்­றில் பல வீடு­கள் குடும்­பங்­கள் வாழ்­வ­தற்­கான வீடு­கள் அல்ல. அவை மருத்­து­வ­ம­னை­கள் அல்­லது விடு­தி­கள் நடத்­து­வ­தற்­குத்­தான் சரி­யாக இருக்­கும். அவற்­றில் சில பல அறை­க­ளைக் கொண்­டுள்­ளன. படை அதி­கா­ரி­கள் தங்கி வாழ்­வ­தற்­கா­கக் கட்­டப்­பட்­டுள்­ளன. 3 வீடு­கள் மட்­டுமே குடும்­பங்­கள் பயன்­ப­டுத்­தத்­தக்­க­ன­வா­கக் காணப்­ப­டுன்­கி­றன. இது எங்­க­ளுக்கு கிடைத்த அதிஸ்­டம் என்­று­தான் சொல்­ல­வேண்­டும்” என்­ற­னர் அவர்­க­கள்.

You might also like