தின­க­ர­னின் ஆத­ர­வா­ளர்­கள் 46 பேர் அ.தி.மு.கவி­லி­ருந்து நீக்­கம்

அ.தி.மு. கழ­கத்­தில் இருந்து தின­க­ர­னின் அத­ர­வா­ளர்­கள் 46 பேரை நீக்கி நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

தமி­ழ­கத்­தின் முன்­னாள் முத­ல­மைச்­சர் ஜெய­ல­லிதா மறை­வின் பின்­னர் அவர் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்ற சென்னை ஆர்.கே. நக­ருக்கு கடந்த மாதம் 21ஆம் திகதி இடைத் தேர்­தல் நடத்­தப்­பட்­டது. எவ­ரும் எதிர்­பார்க்­காத வகை­யில் தின­க­ரன் வெற்­றி­பெற்­றார்.

அ.தி.மு. கழ­கத்­தை­யும், தி.மு. கழ­கத்­தை­யும் வீழ்த்தி சுயேட்­சை­யா­கப் போட்­டி­யிட்டு தின­க­ரன் வெற்­றி­பெற்­றி­ருந்­தார். இது அ.தி.மு. கழ­கத்­துக்­குள் பெரும் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யது.

இந்த நிலை­யில் தின­க­ர­னுக்கு ஆத­ர­வா­கச் செயற்­பட்­டு­வ­ரும் 46 பேரை கட்­சி­யின் அடிப்­படை உறுப்­பி­னர் பொறுப்பு உள்­ளிட்ட அத்­தனை பொறுப்­புக்­க­ளில் இருந்­தும் விடு­வித்து உத்­த­ர­விட்­டார் அ.தி.மு. கழ­கத்­தின் ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஓ.பன்­னீர்­செல்­வம்.

You might also like