கிழக்கு ஆளுநரின் மனைவி தமி­ழ­ரை மிரட்டும் காணொலி

ஆலய வழி­பாட்­டில் இருந்­த­வர்­களை கிழக்கு மாகாண ஆளு­ந­ரின் மனைவி அச்­சு­றுத்­து­வது போன்ற காட்­சி­கள் அடங்­கிய காணொலி ஒன்று சமூக வலைத்­த­ளங்­க­ளில் பரவி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்­தச் சம்­ப­வம் திரு­கோ­ண­ மலை, மூதூர் பிர­தேச செய­லர் பிரி­வுக்­குட்­பட்ட கூனித்­தீவு கிராம சேவ­கர் பிரி­வில் உள்ள மத்­த­ள­மலை ஆல­யத்­தில் நடந்­துள்­ளது என்று கூறப்­ப­டு­கின்­றது.

இந்­தக் காணொலி தொடர்­பாக முக­நூ­லில் கருத்­துப் பதிந்­துள்ள தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யா­டல் அமைச்­சர் மனோ கணே­சன் கிழக்கு மாகாண ஆளு­ந­ரின் மனைவி கால­னி­யா­திக்க ஆளு­நர் மனைவி போல் நடக்­கி­றார். தேசிய சக­வாழ்­வுக்­குக் கேடு என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

காணொ­லி­யில் கிழக்கு மாகாண ஆளு­ந­ரின் மனைவி அங்­கி­ருந்த மக்­களை கடு­மை­யா­கப் பேசும், உங்­களை அழிந்து விடு­வேன் என்று கூறும் காட்­சி­க­ளும், அங்­கி­ருந்த பொங்­கல் பானையை தாக்க முயல்­வது போன்ற காட்­சி­க­ளும் பதி­வா­கி­யுள்­ளன. பொலி­ஸா­ரும் அந்த இடத்­தில் இருந்­த­னர்.

சூடை­குடா கிரா­மத்­தில் காணப்­ப­டும் குன்­றத்­தூர் மத்­த­ள­மலை திருக்­கு­ம­ரன் ஆல­யம் மற்­றும் அதை அண்­மித்­துள்ள பாதாள வைர­வர் ஆல­யம் என்­பன 1974 ஆம் ஆண்­டுக்கு முன்­பி­ருந்தே உள்­ளன. அங்கு வழி­பா­டு­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன என்று ஆலய பரி­பா­லன சபை­யி­னர் கூறு­கின்­ற­னர்.

போர் கார­ண­மாக இந்த கோவிலை முன்­னர் பதிவு செய்­ய­வில்லை என்ற போதும் 4 வரு­டங்­க­ளுக்கு முன்­னர் இந்த கோவிலை பதி­வு­செய்து, அரச நிதி உத­வி­க­ளு­டன் கட்­டு­மா­ணப் பணி­க­ளும் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

கோவில் வளா­கம் போது­மா­ன­தாக இல்லை என்­ப­தால் கோயில் வளா­கத்தை சூழ அமைந்­துள்ள 10 மீற்­ற­ருக்கு உட்­பட்ட பகு­தி­கள் டிசெம்­பர் 6 ஆம் திகதி துப்­பு­ரவு செய்­யப்ப்டு, மூதூர் பிர­தேச சபை­யின் உத­வி­யு­டன் கோயில் இருக்­கும் இடத்­தில் இருந்து 100 மீற்­றர் தூரத்­தில் கிணறு தோண்­டப்­பட்­டது என்­றும் அவர்­கள் தெரி­வித்­த­னர்.

கடந்த வாரம் பௌத்த பிக்­கு­மார் இரு­வர் அங்கு வந்து சென்­றதை அடுத்து அன்று மாலை வந்த பொலி­ஸார் கிணறு தோண்­டு­வ­தற்­கும், ஆல­யத்தை துப்­பு­ரவு செய்­வ­தற்­குத் தடை விதித்­த­து­டன் நீதி­மன்ற உத்­த­ர­வொன்­றை­யும் காட்­டி­னர்.

இந்­தச் சம்­ப­வத்­தின் பின்­னர் கல்வி, வன­இ­லாகா, தொல்­பொ­ருள் திணைக்­க­ளம் ஆகி­ய­வற்­றின் அதி­கா­ரி­க­ளும் வந்து ஆல­யம் அமைந்­துள்ள பகுதி தங்­க­ளுக்­கு­ரி­யது என்று உரிமை கோரி­னர். இந்­தச் சம்­ப­வங்­க­ளின் பின்­னர் பிரச்­சி­னை­ கள் ஏற்­பட்­டன என்று கிராம மக்­கள் குறிப்­பிட்­ட­னர்.

You might also like