விடுவிக்கப்பட்ட கேப்­பாப்­பி­ல­வுக் காணியில் அளவீடுகள் முன்னெடுப்பு

கேப்­பா­பி­ல­வில் இரா­ணு­வத்­தால் நேற்­று­முன்­தி­னம் விடு­விக்­கப்­பட்ட மக்­க­ளின் காணி­களை அள­வி­டும் பணி­கள் நேற்று முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

கேப்­பா­பி­லவு கிராம அலு­வ­ல­கர் மற்­றும் கரை­து­றைப்­பற்று பிர­தேச செய­ல­கக் காணி உத்­தி­யோ­கத்­தர் ஆகி­யோ­ரால் பணி­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. விடு­விக்­கப்­பட்ட காணி­யின் உரி­மை­யா­ளர்­கள் இரா­ணு­வத்­தால் காணி­க­ளுக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­ட­னர். மக்­கள் தங்­க­ளு­டைய காணி­களை அடை­யா­ளப்­ப­டுத்­தி­னர். அதன் பின்­னர் அள­வி­டும் பணி­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

இரா­ணு­வத்­தி­ன­ரால் அப­க­ரிக்­கப்­பட்­டி­ருந்த முல்­லைத்­தீவு மாவட்ட மக்­க­ளுக்­குச் சொந்­த­மான 133.34 ஏக்­கர் காணி நேற்­று­முன்­தி­னம் இரா­ணு­வத்­தால் விடு­விக்­கப்­பட்­டது. அதில் 111.5 ஏக்­கர் காணி கேப்­பா­பி­லவு மக்­க­ளுக்­குச் சொந்­த­மா­னது. அந்­தக் காணியை முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­லர் உத்­தி­யோக பூர்­வ­மா­கப் பெற்­றுக்­கொண்­டார்.

குறித்த காணி­கள் விரை­வில் அள­வி­டப்­பட்டு மக்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­ப­டும் என்று அவர் தெரி­வித்­தி­ருந்­தார். இந்த நிலை­யி­லேயே நேற்று காணி­கள் அள­வி­டும் பணி­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

காணி­கள் அள­வி­டும் பணி­கள் முன்­னெ­டுக்­கப்­பட்ட போதும் அனைத்து காணி­க­ளை­யும் விடு­விக்க வேண்­டும் என்று தெரி­வித்து மக்­கள் அனை­வ­ரும் தொடர் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

You might also like