அனுமதியின்றி வீதிப்பணிகள் மேற்கொள்ளப்படின் நிறுத்தப்படும்!

மட்டக்களப்பு, ஏறாவூர் நகர சபைக்குட்பட்ட பகுதிகளில், ஏறாவூர் நகர சபையின் அனுமதியின்றி வீதித்திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படின், அவை தடுத்து நிறுத்தப்படும் என்று சபையின் செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவித்தல்கள் பொது இடங்களில் ஒட்டப்படும். அவற்றை மீறி வீதித் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படின் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like