மினி சூறா­வ­ளி­யில் சேத­ம­டைந்த வீடு­கள் படை­யி­ன­ரால் சீர­மைப்பு

மல்­லாவிப் பிர­தே­சத்­தில் மினி­சூ­றா­வ­ளி­யால் சேத­ம­டைந்த வீடு­கள் இரா­ணு­வத்­தி­ன­ரால் சீர­மைக்­கப்­பட்­டன. 651 ஆவது படைத் தலை­மை­ய­கத்­திற்கு கீழ் இயங்­கும் 15ஆவது சிங்கப் படை­ய­ணி­யால் வீடு­கள் திருத்­தப்­பட்­டுள்­ளன.

பிர­தே­சத்­தில் அண்­மை­யில் வீசிய சூறா­வ­ளி­யால் 15க்கும் மேற்­பட்ட வீடு­க­ளின் கூரை­கள் சேத­ம­டைந்­தன. 74 பேருக்கு மேல் பாதிக்­கப்­பட்­ட­னர்.

ஓடு­கள் மற்­றும் தக­டு­க­ளைப் பயன்­ப­டுத்தி சேத­ம­டைந்த வீடு­கள் திருத்­தி­ய­மைக்­கும் பணி­கள் இடம்­பெற்­றன. அத்­து­டன், அக்­க­ர­ா­யன்­கு­ளம் – கோணா­வில் நீர்ப்­பா­ச­னக் கால்­வா­யில் இரு பக்­கங்­க­ளும் படை­யி­ன­ரின் சிர­ம­தா­னத்­தின் மூலம் துப்­பு­ரவு செய்­யப்­பட்­டது.

You might also like