பௌத்த சின்­னம் என்ற பெய­ரில் சம்­பூ­ரில் முரு­கன் ஆல­யம் ஆக்­கி­ர­மிப்பு

திரு­கோ­ண­மலை – சம்­பூர், சூடைக்­குடாப் பகு­தி­யில் புரா­தன பௌத்த எச்­சங்­கள் இருப்­ப­தாகக் கூறி, முரு­கன் ஆல­யம் அமைந்­துள்ள பகு­தியை தொல்­பொ­ருள் திணைக்­க­ளம் விரை­வில் சுவீ­க­ரிக்­க­ வுள்­ளது. தொல் பொ­ருட் திணைக்­க­ளத்­தின் பணிப்­பா­ளர் பேரா­சி­ரி­யர் மந்­த­வெல, இத­னைத் தெரி­வித்தார்.

சம்­பூர் சூடைக்­குடா செதிய அமைந்­துள்ள பகு­தியை பாது­காப்­ப­தற்­காக அந்­தப் பகுதி விரை­வில் தொல்­பொ­ருள் திணைக்­க­ளத்­தி­னால் சுவீ­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது. கிழக்­கில் மத மற்­றும் தொல்­பொ­ருள் சின்­னங்­களை அடை­யா­ளம் காணும் நட­வ­டிக்­கை­யின் போதே, பழை­மை­யான பௌத்த வழி­பாட்டு சின்­னம் சம்­பூ­ரில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

இந்­தப் பிர­தே­சம் தொல்­பொ­ருள் மற்­றும் வர­லாற்று முக்­கியத்­து­ வம் வாய்ந்த பகுதி என்று திணைக்­க­ளம் பிர­க­ட­னம் செய்­வ­தற்கு முன்­னரே, பௌத்த வழி­பாட்டுச் சின்­னம் (செதிய) மற்­றும் அதன் சுற்­றுப் பகு­தி­கள் அழிக்­கப்­பட்டு விட்­டன.

இந்­தப் பகு­தியைத் தொல்­பொ­ருள் திணைக்­க­ளம் பொறுப்­பேற்ற பின்­னர், வர­லாற்று முக்­கி­யத்­து­வம் வாய்ந்த பழை­மை­யான சம்­பூர் செதிய தொடர்­பாக மேல­திக அகழ்­வாய்வு மற்­றும் அள­வீ­டு­கள் நடத்­தப்­ப­டும். இலங்­கை­யில் எல்லா சமூ­கங்­கள் மற்­றும் மதங்­கள் தொடர்­பாக இரண்­டரை இலட்­சம் வரை­யான மத, கலா­சார, தொல்­பொ­ருள் முக்­கி­யத்­த­வம் வாய்ந்த இடங்­கள் உள்­ளன. இவற்­றைப் பாது­காப்­பது தொல்­பொ­ருள் திணைக்­க­ளத்­தின் கட­மை­யா­கும். அடுத்த தலை­மு­றைக்­காக இவற்றைப் பேணிப் பாது­காக்க வேண்­டும் –என்­றும் அவர் குறிப்­பிட்டார்.

சூடைக்­கு­டா­வில் உள்ள மத்­த­ள­ம­லை­யில் அமைந்­துள்ள முரு­கன் கோவில் பகு­தி­யையே தற்­போது, பழை­மை­யான பௌத்த சின்­னம் அமைந்­துள்­ள­தாகத் தொல்­பொ­ருள் திணைக்­க­ள­மும், பௌத்த பிக்­கு­க­ளும் உரிமை கோரத் தொடங்­கி­யுள்­ள­னர் என்று தமிழ் மக்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.

இந்த ஆல­யத்­தில் பொங்­க­லிட்டு வழி­பாடு செய்து கொண்­டி­ருந்த மக்­களைச் சில வாரங்­க­ளுக்கு முன்­னர் கிழக்கு மாகாண ஆளு­நர் றோகித போகொல்­லா­க­ம­வு­டன் சென்ற அவ­ரது மனைவி தீப்தி போகொல்­லா­கம அச்­சு­றுத்­தல் விடுத்­தி­ருந்­தார்.

ஆலய மர­பு­களை அவ­ம­திக்­கும் வகை­யில் நடந்துகொண்ட அவ­ருக்கு எதிர்ப்­புத் தெரி­வித்த பொது­மக்­களை அவர் கோபத்­து­டன், உங்­களை அழித்து விடு­வேன் என்று எச்­ச­ரித்­தி­ருந்­தார்.அத்­து­டன், ஆல­யத்­தின் கட்­டு­மா­னப் பணி­க­ளை­யும் இடை­நி­றுத்த ஆளு­நர் றோகித போகொல்­லா­கம உத்­த­ர­விட்டார்.

நூறு ஆண்­டு­க­ளுக்கு மேலாக பரா­ம­ரிக்­கப் ப­டும் இந்த முரு­கன் ஆல­யத்­தில், ஏழு தலை­மு­றை­க­ளாகத் தமது முன்­னோர்­க­ளால் பூசை வழி­பா­டு­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக அங்கு பூசை நடத்தி வரும் குருக்­கள் தெரி­வித் தார். இந்த ஆல­யம் 2014ஆம் ஆண்டு அர­சில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தும் குறிப்­பி ­டத்­தக்­கது.

You might also like