பிறந்­தி­ருக்­கும் ஆண்­டில் தீர்­வுக்­காக உழைப்­போம்

புதி­தாக மீண்­டும் ஒரு ஆண்டு பிறந்­துள்­ளது. மகிழ்ச்­சி­யோ­டும் எதிர்­பார்ப்­போ­டும் இந்த ஆண்டை வர­வேற்­றுக் கொண்­டா­டு­வோம். கடந்­து­போன ஆண்­டு­க­ளைப் போலல்­லா­மல் இந்த ஆண்டு எல்­லோ­ரு­டைய எதிர்­பார்ப்­பு­க­ளை­யும் நிவர்த்தி செய்­வ­தாக, எல்­லோ­ருக்­கும் சுபீட்­சத்­தைக் கொடுப்­ப­தாக அமை­ய­வேண்­டும் என்று பிரார்த்­திப்­போம்.

ஒவ்­வொரு ஆண்­டும் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்­கள் மிகுந்த எதிர்­பார்ப்­போ­டு­தான் புதிய வரு­டங்­களை எதிர்­கொள்­கி­றார்­கள். அர­சி­யல், பொரு­ளா­தார, சமூக முன்­னேற்­றம் ஏற்­பட்­டு­வி­டாதா என்­கிற ஏக்­கத்­தோ­டு­தான் புத்­தாண்டை வர­வேற்­கி­றார்­கள். தை பிறந்­தால் வழி பிறக்­கும் என்­கிற அவர்­க­ளின் நம்­பிக்கை இதற்­கொரு முக்­கிய கார­ணம்.

இந்த ஆண்­டும் அத்­த­கைய எதிர்­பார்ப்­போ­டு­தான் புத்­தாண்டை வர­வேற்­கி­றார்­கள். அர­சி­யல் தீர்வு ஒன்று இந்த ஆண்டு கிடைத்­து­வி­ட­வேண்­டும் என்­பது அவர்­க­ளின் வேணவா. அதி­லும் தாம் திருப்­திப்­ப­டும் விதத்­தி­லான தீர்­வாக அது அமைந்­து­வி­ட­வேண்­டும் என்ற பேரா­சை­யும் அவர்­க­ளுக்கு இல்­லா­மல் இல்லை.

புதிய அர­சான மைத்­திரி – –ரணில் கூட்டு அரசு பத­வி­யேற்ற 2015ஆம் ஆண்­டில் இந்த எதிர்­பார்ப்பு உச்­ச­ம­டைந்­தி­ருந்­தது. வர­லாற்­றில் இல்­லாத வாய்ப்பு இது என்று எல்­லோ­ரும் புகழ்ந்­து­ரைத்­த­னர். தமிழ் பேசும் மக்­க­ளும் பெரும் எதிர்­பார்ப்­போடு இருந்­த­னர். 2016, 2017 என்று அடுத்­த­டுத்த வரு­டங்­க­ளில் தீர்வு வந்­து­வி­டும் என்று ஒவ்­வொரு புத்­தாண்­டை­யும் அதே எதிர்­பார்ப்­போடு எதிர்­கொண்­ட­னர். ஆனால் போகப் போக அந்த எதிர்­பார்ப்­பு­கள் காற்­றில் கரை­யத்­தொ­டங்­கி­விட்­டன என்­ப­தை­யும் ஏற்­றுத்­தான் ஆக­வேண்­டும்.

இதோ, 2018ஆம் ஆண்டு வந்­து­விட்­டது. இந்த ஆண்­டி­லா­வது தீர்வு வந்­து­வி­டாதா, விடிவு கிட்­டி­வி­டாதா என்­கிற எதிர்­பார்ப்­பு­டன் மீண்­டும் ஒரு புத்­தாண்டை வர­வேற்­கின்­ற­னர் மக்­கள்.

எதிர்­பார்ப்­பு­கள், தேவை­கள் அதி­க­ரித்­துச் செல்­லும் உல­கில் நாம் மட்­டும் ஒரே புள்­ளி­யில் நின்­று­கொண்­டி­ ருக்­கின்­றோமே என்­கிற அச்­சம் ஏற்­ப­டு­கின்­றது. இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு தீர்வு ஏற்­பட்­டு­விட்­டால் சமூக, பொரு­ளா­தா­ரப் பிரச்­சி­னை­க­ளுக்­கும் தீர்வு கண்­டு­வி­ட­லாம் என்­கிற நம்­பிக்­கை­யில் தீர்­வுக்­காக மீண்­டும் மீண்­டும் மக்­கள் காத்­தி­ருக்­கி­றார்­கள் என்­பதை அர­சி­யல்­வா­தி­கள் புரிந்­து­கொள்­ள­ வேண்­டும்.

பிறந்­தி­ருக்­கும் புத்­தாண்­டி­லா­வது இந்த விட­யம் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு உறைத்து அர­சி­யல் தீர்வு ஒன்றை ஏற்­ப­டுத்­தும் விதத்­தில் அவர்­கள் நடந்­து­கொள்­ளக் காலம் கனிய வேண்­டும் என்று மன்­றா­டு­வோம்.

உள்­நாட்­டுப் போர் முடி­வ­டைந்து 8 வரு­டங்­க­ளுக்­கும் மேலான காலம் கடந்­து­விட்ட நிலை­யி­லும் தீர்வு ஒன்­றைக் காண்­ப­தற்­கான முயற்­சி­கள் தேங்­கிக்­கி­டப்­பது அர­சி­யல்­வா­தி­க­ளின் மனச்­சாட்­சி­களை உறுத்­தட்­டும் என்­றும் வேண்­டிக்­கொள்­வோம்.
தேர்­தல்­க­ளில் வென்று தாம் மட்­டும் பதவி, பவுசு என்று வளர்ந்து செல்­வ­தோடு மட்­டும் நின்­று­வி­டாது ஒவ்­வொரு குடி­ம­க­னுக்­கும் வளர்ச்சி கிட்­டட்­டும் என்­கிற விட­யம் அர­சி­யல்­வா­தி­க­ளின் புத்­தி­யில் உறைக்­கட்­டும் என்று இறைஞ்­சு­வோம்.

இந்த ஆண்டை அத்­த­கை­ய­தோர் ஆண்­டாக மாற்­றி­ய­மைப்­போம் என்­ப­து­டன் அதற்­காக அர­சி­யல்­வா­தி­க­ளை­யும் நிர்ப்­பந்­திப்­போம் என்று இன்­றைய நாளில் நாம் ஒவ்­வொ­ரு­வ­ரும் உறு­தி­பூ­ணு­வோம். உறு­தி­யெ­டுப்­போம். தீர்­வுக்­காக ஒவ்­வொ­ரு­வ­ரும் உழைப்­போம் என்று திட­சங்கற்பம் கொள்­வோம்.

You might also like