ராஜ தந்திர அணுகுமுறை தோல்விக்கு முகம் கொடுக்க நேர்ந்த அவலம்

அஸ்­பெஸ்­டஸ் கூரைத்­த­க­டு­கள் உற்­பத்தி தொடர்­பான நோய்­க­ளால் உல­க­ளா­விய ரீதி­யில் வரு­டாந்­தம் உயி­ரி­ழக்­கும் தொழி­லா­ளர்­க­ளது எண்­ணிக்கை ஒரு இலட்­சத்து 7 ஆயி­ரம் வரை­யி­லா­கும் என பன்­னாட்டு தொழி­லா­ளர் அமைப்பு (ILO ) தெரி­வித்­துள்­ளது.  அது மட்­டு­மன்றி ‘அஸ்­பெஸ்­டஸ்’ பாவனை கார­ண­மாக வரு­ட­மொன்­றுக்கு மேலும் ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்­கள் புற்று நோய்ப்­பா­திப்­பா­லும் மற்­றும் பல்­வேறு நோய்­க­ளா­லும் உயிரிழக்க நேர்­வ­தாக உலக சுகா­தார அமைப்பு ( WHO ) தெரி­வித்­துள்­ளது.

இத­னா­லேயே சகல வகை­க­ளி­லு­மான அஸ்­பெஸ்­டஸ் தயா­ரிப்பு, ஏற்­று­மதி, இறக்­கு­மதி மற்­றும் பயன்­ப­டுத்­து­தல் என்­ப­வற்­றைத் தடை­செய்ய வேண்­டு­மென இவ்­விரு அமைப்­புக்­க­ளும் கடந்த பல ஆண்­டு­கா­ல­மாக வலி­யு­றுத்தி வரு­கின்­றன.

புகை­யி­லைப் பாவனை மனித உட­லுக்­குத் தீங்கு விளை­விப்­ப­தாக பலர் பல்­லாண்­டு­கள் கால­மாக நம்பி வந்­துள்­ள­னர். ஆயி­னும் அது உடல் நலத்­துக்கு எந்த அள­வுக்­கப் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­கி­றது என்­பது தொடர்­பாக விஞ்­ஞான ஆய்­வு ­க­ளு­டாக நிரூ­பிக்­கப்­பட்­ட­தை­ ய­டுத்து, புகைத்­த­லுக்கு எதி­ரான கருத்து, குறிப்­பாக அபி­வி­ருத்தி அடைந்த பல நாடு­கள் மத்­தி­யில் உரு­வா­கி­யது.

அத்­த­கைய நாடு­கள் புகைத்­த­லுக்கு எதி­ரான பல்­வேறு தடுப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­தை­ய­டுத்து, புகைப் பொருள்­களை உற்­பத்தி செய்­யும் நிறு­வ­னங்­கள் இலங்­கை­யைப் போன்ற மூன்­றாம் உலக நாடு­கள் மத்­தி­யில் புகைத்­தல் பொருள்­கள் தொடர்­பான தமது வர்த்­த­கச் சந்­தை­களை உரு­வாக்­கும் செயற்­பா­டு­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கிச் செயற்பட்­டன.

அஸ்­பெஸ்­டஸ் மனித பாவ­னைக்கு கேடு விளை­விக்­கு­மென
பன்­னாட்டு பொது நிறு­வ­னங்­கள் உறு­திப்­ப­டுத்­தின

‘அஸ்­பெஸ்­டஸ்’ கூரைத் தக­டு­கள் உற்­பத்தி தொடர்­பான விட­ய­மும் இதனை ஒத்­த­தென்றே. அது மனித ஆரோக்­கி­யத்­துக்­குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வ­தாக உலக சுகா­தார நிறு­வ­னம் முதன் முத­லில் 1987 ஆம் ஆண்­டில் தான் உல­குக்கு தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. ‘அஸ்­பெஸ்­டஸ்’ உற்­பத்­தி­கள் புற்­று­நோய்க் குக் கார­ண­மாக அமை­வ­தாக புற்­று­நோய் ஆராய்ச்சி தொடர்­பான பன்­னாட்டு நிறு­வ­னம் (I.A.R.C) தனது ஆராய்ச்சி மூலம் கண்­ட­றிந்­தது.

மனித உட­லுக்­குத் தீங்கு பயக்­கும் இர­சா­ய­னப் பொருள்­கள் மற்­றும் விஷத்­தன்மை கொண்ட பொருள்­க­ளது பயன்­பாட்­டைத் தடை செய்­யும் முத­லா­வது நட­வ­ட­டிக்­கை­யெ­னக் கொள்­ளப்­ப­டும்’ றொட்­டர்­டாம் தீர்­மா­னத்­தில் அஸ்­பெஸ்­டஸ் தயா­ரிப்­பை­யும் உள்­ள­டக்­கும் முயற்சி இற்­றைக்­குப் பல ஆண்­டு­கள் காலத்­துக்கு முன்­னரே ஆரம்­பிக்­கப்­பட்­ட­தொன்று.

அது மனித ஆரோக்­கி­யத்­துக்­குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் ஒன்­றென இவ்­வாண்டு மே மாதத்­தில் ஜெனி­ வா­வில் இடம்­பெற்ற மாநா­டொன்­றில் மீண்­டும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. வௌ்ளை நிற அஸ்­பெஸ்­டஸ் எனக் குறிப்­பி­டப்­ப­டும் கிறி­சோட்­டைல் (Chrys otile) என்ற வர்க்க அஸ்­பெஸ்­டஸ், மனித ஆரோக்­கி­யத்­துக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­தாது என அஸ்­பெஸ்­டஸ் உற்­பத்­தி­யில் ஈடு­ப­டும் நாடு­கள் மற்­றும் நிறு­வ­னங்­கள் முன்­வைத்த கருத்தை உலக சுகா­தார நிறு­வ­னம் நிரா­க­ரித்­தி­ருந்­தது.

ஆயி­னும் ‘அஸ்­பெஸ்­டஸ் உற்­பத்­தியை ‘றொட்­டர்­டாம்’ தீர்­மா­னத்­துக்­குள் உட்­பு­குத்தி தடை­செய்­யும் முயற்சி இந்த முறை­ யும் தோல்­வி­யில் முடி­வ­டைந்­தது. ‘அஸ்­பெஸ்­டஸ்’ உற்­பத்­தி­யில் ஈடு­ப­டும் நாடு­க­ளில் ஆறு நாடு­கள் மேற்­கு­றிப்­பிட்ட  முயற்­சிக்கு எதிர்ப்­புத் தெரி­வித்­தி­ருந்­தன. ரஷ்யா, கச­கஸ்­தான், இந்­தியா, சிம்­பாப்வே, கிஸ்­கிஸ்­தான் மற்­றும் பெலா­ரஸ் ஆகி­ய­வையே அந்த ஆறு நாடு­க­ளு­மா­கும்.

அஸ்­பெஸ்­டஸ் உற்­பத்­தி­கள் தடை செய்­யப்­பட வேண்­டு­மென பல ஆபி­ரிக்க நாடு­கள் முன்­வைத்த பிரே­ர­ணையை 2019 ஆம் ஆண்­டில் இடம்­பெ­ற­வுள்ள அடுத்த மாநாட்­டி­லேயே பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொள்­ளத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.
றொட்­டர்­டாம் தீர்­மா­னத்­தில் அஸ்­பெஸ்­டஸ் உற்­பத்­தி­யை­யும் உள்­ள­டக்­கும் முயற்சி வெற்றி பெற்­றி­ருந்­த­தால், அது இலங்­கை­யி­லும் அஸ்­பெஸ்­டஸ் உற்­பத்­தி­க­ளுக்­குத் தடை­வி­திக்­கும் திட்­டத்­துக்கு உத­வி­யாக அமைந்­தி­ருக்­கும். அந்த வகை­யில் அந்த முயற்­சிக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­து­வ­தில் முக்­கிய பங்­காற்­றி­யது உல­க­லா­விய ரீதி­யில் அஸ்­பெஸ்­டஸ் உற்­பத்­தி­யில் முன்­னணி வகித்த ரஷ்ய நாடே­யா­கும்.

வாலற்ற மாடு போன்­ற­தான நிலை

தற்­போது உலக நாடு­க­ளில், 55 நாடு­கள் அஸ்­பெஸ்­டஸ் உற்­பத்தி, ஏற்­று­மதி இறக்­கு­மதி, மற்­றும் பாவனை ஆகிய செயற்­பா­டு­களை முற்­று­மு­ழு­ தா­கத் தடை செய்­துள்­ளன. ஐரோப்­பிய ஒன்­றி­யம், ஜப்­பான், மற்­றும் ஆஸ்­தி­ரே­லியா போன்ற அபி­வி­ருத்­தி­ய­டைந்த நாடு­கள் போன்று, மூன்­றாம் உலக நாடு­கள் பல­வும் இதில் அடங்­கு­கின்­றன.

2018 ஆம் ஆண்­டில் அஸ்­பெஸ்­டஸ் உற்­பத்­தி­யில் முன்­னிலை வகிக்­கும் கனடா மற்­றும் அதன் இறக்­கு­மதி மற்­றும் பாவ­னை­யில் கணி­ச­மான பங்­க­ளிப்பு வழங்­கும் இலங்கை ஆகிய இரு நாடு­க­ளும் அஸ்­பெஸ்­டஸ் பாவ­னையை  தடை­செய்­யத் தீர்­மா­னித்­தி­ருந்­தன.

அந்த வகை­யில் கனடா தனது தீர்­மா­னத்தை திட்­ட­மிட்­ட­படி நடை­மு­றைப்­ப­டுத்­தக்­கூ­டும். ஆனால் இலங்கை அத்­த­கைய தனது முடி­வைக் கை விட்­டுள்­ளது. உல­கின் முன்­னணி அஸ்­பெஸ்­டஸ் உற்­பத்தி மற்­றும் ஏற்­று­மதி செய்­யும் நாடொன்­றான ரஷ்­யா­வி­னால் மேற்­கொள்­ளப்­பட்ட கடும் அழுத்­தமே இலங்­கை­யின் அந்­தத் தீர்­மா­னத்­துக்கு முக்­கிய கார­ண­மா­கும்.

அந்த வகை­யில் இலங்­கை­யி­ல் இ­ருந்து ரஷ்­யா­வுக்கு ஏற்­று­மதி செய்­யப்­பட்ட தேயி­லைக்­குள் ஒரு வித வண்டு இனம் காணப்­பட்­டது என்ற குற்­றச்­சாட்­டின் அடிப்­படை நோக்­கம் என்ன என்­பது தற்­போது பர­க­சி­ய­மாகி உள்­ளது. தான் இலங்­கை­யில் இருந்து இறக்­கு­மதி செய்­யும் தேயிலை மீது மட்­டு­மென்­றல்­லாது, வேறு சில பொருள்­கள் மீதும் ரஷ்யா இறக்­கு­ம­தித்­தடை விதித்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

அதே வேளை இது குறித்­துக் கருத்து வௌியிட்­டி­ருந்த அமைச்­சர் நவீன் திச­நா­ய­கவே, வௌ்ளை நிற அஸ்­பெஸ்­டஸ் தக­டு­கள் மனித உட­லுக்­குத் தீங்கு விளை­விக்கா எனத் தெரி­வித்­த­தும், இந்­தப் பிரச்­சி­னை­யில் அரசு எத்­த­கைய தீர்வை எட்­டும் என்­பதை அனு­மா­னிக்க வழி செய்­தது. இதன் மூலம் குறித்த வௌ்ளை நிற அஸ்­பெஸ்­டஸ் வகைக்­கான இறக்­கு­ம­திக்கு அனு­மதி வழங்க இலங்கை அரசு தீர்­மா­னித்­தமை உறு­தி­யா­கி­யது.

அந்த வகை­யில் ரஷ்­யா­வுக்கு தேவைப்­பட்ட விதத்­தில், ரஷ்­யப் பொரு­ளா­தா­ரத்­துக்­குப் பாதிப்பு ஏற்­ப­டாத வகை­யில், ரஷ்­யா­வின் அழுத்­தத்­துக்­குப் பணிந்து செயற்­ப­டும் வகை­யில் இலங்கை அரசு அஸ்­பெஸ்­டஸ் இறக்­கு­ம­திக்­கான தனது தடை உத்­த­ரவை நீக்­கிக்­கொண்­டது.

வௌ்ளை நிற அஸ்­பெஸ்­டஸ் ‘மெசொ­போ­லி­யோ­மிஸ்’ வகை புற்­று­நோய் பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்­தும்­வரை, அதன் தாக்­கத்­தால் உயி­ரி­ழப்­புக்­கள் ஏற்­ப­டும் வரை வெள்ளை அஸ்­பெஸ்­டஸ் பாதிப்பை ஏற்­ப­டுத்­தாது என்ற நிலைப்­பாட்டை அரசு முன்­னெ­டுக்­கும் என்­ப­தில் சந்­தே­கம் இல்லை.

சுற்­றுச்­சூ­ழல் பாதிப்பை பேணு­வ­தாக உறு­தி­ய­ளித்தே கூட்டு அரசு
அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றி­யது

சுற்­றுச்­சூ­ழல் பாதிப்­பால் நாட்டு மக்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டாது பாது­காப்­ப­தாக உறுதி வழங்­கியே இன்­றைய கூட்டு  அரசு அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றி­யி­ருந்­தது. ஆயி­னும் சுற்­றுச்­சூ­ழல் பாதிப்­பால் பல்­வேறு பேர­ழி­வுச் சம்­ப­வங்­கள் இடம்­பெற்ற பின்­னரே அரசு விழித்­துக் கொண்டு ஒப்­புக்­குச் சில நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­மைக்கு மீதோட்­ட­முல்ல குப்பை மேட்­டுச் சரிவு, காட்டு யானை­க­ளைத் தந்­தத்­துக்­கா­கக் கொன்­றமை போன்­றவை உதா­ர­ணங்­க­ளா­கின்­றன.

மனித உட­லுக்­குத் தீ்ங்கு விளை­விக்­கும் பொருள்­கள் சில­வற்­றுக்­கான இறக்­கு­ம­திக்கு இன்­றைய அரசு தடை­வி­தித்ததென்­னமோ உண்­மை­தான். ஆனால் அஸ்­பெஸ்­டஸ் இறக்­கு­மதி விட­யத்­தில் அர­சால் அத­னைத் தடை­செய்ய இய­லாத அள­வுக்கு அது அழுத்­தங்­க­ளுக்கு அடி­ப­ணிய நேர்ந்­து­விட்­டுள்­ளது.

தமது நாட்­டின் பொரு­ளா­தார மேம்­பாட்­டுக்கு சாத­க­மாக வகை­யில் தமது நாட்­டின் வௌிநாட்­டுக் கொள்­கை­க­ளைத் தீர்­மா­னிப்­பது இன்று சகல நாடு­க­ள­தும் வழக்­க­மாக ஆகி­யுள்­ளது. அவை அவ்­வி­தம்  செயற்­பட்­டுத் தானாக வேண்­டும். ஆனால் ஜன­நா­யக ரீதி­யி­லாக நிர்­வாக நடை­முறை நில­வும் வளர்ச்­சி­ய­டைந்த நாடு­க­ளது அரச தலை­வர்­கள் தாம் நினைத்­த­ வாறு தமது நாட்டு வௌியு­ற­வுத் தீர்­மா­னங்­களை மேற்­கொள்­வ­தற்கு பல்­வேறு அர­சி­யல் மற்­றும் சட்ட ரீதி­யான முட்­டுக்­கட்­டை­கள் உள்­ளன.

உல­கின் சக்தி வாய்ந்த வல்­ல­ர­சான அமெ­ரிக்­கா­வின் அரச தலைவர் டொனால்ட் ட்ரம்ப், இஸ்­ரேல் நாட்­டின் தலை­ந­க­ராக ஜெரு­ச­லேமை ஏற்­றுக்­கொள்­வ­தென, அண்­மை­யில் மேற்­கொண்ட தீர்­மா­னம் பன்­னாட்டு மக்­க­ளின் எதிர்ப்­புக்கு உள்­ளா­ன­தோடு ஐ.நா. சபை­யின் கண்­ட­னத் தீர்­மா­னங்­க­ளுக்­கும் உள்­ளாக நேர்ந்­தமை மேற்­கு­றிப்­பிட்ட கருத்தை உறு­திப்­ப­டுத்­தப் போது­மான உதா­ர­ண­மொன்­றா­கும்.

அமெ­ரிக்க அதி­ப­ரது குறிப்­பிட்ட அந்த முடி­வைக் கண்­டித்து ஐ.நா.பொதுச்­சபை அண்­மை­யில் பெரும்­பான்மை ஆத­ர­வு­டன் தீர்­மா­னம் நிறை­ வேற்­றி­யமை சக­ல­ரும் அறிந்­த­தொன்றே. குறித்த அந்­தத் தீர்­மா­னத்தை ஆத­ரிக்க வேண்­டாம் என அமெ­ரிக்கா, ஏனைய உலக நாடு­க­ளுக்கு பகி­ரங்­க­மாக அச்­சு­றுத்­தல் விடுத்­தி­ருந்­தது. தீர்­மா­னத்தை ஆத­ரி்த்து வாக்­க­ளிக்­கும் நாடு­க­ளுக்­கான அமெ­ரிக்க அர­சின் உத­வி­கள் முற்­றாக நிறுத்­தப்­ப­டு ­மென அமெ­ரிக்க அரச அதி­பர் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ ருந்­தார்.

ஆயி­னும் இலங்கை உட்­பட உலக நாடு­க­ளில் பெரும்­பா­லா­னவை ஐ.நா.பொதுச்­ச­பை­யின் அமெ­ரிக்­கா­வின் முடி­வுக்கு எதி­ரான கண்­ட­னத் தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வா­கவே வாக்­க­ளித்­தன. அமெ­ரிக்க அதி­ப­ரது தன்­னிச்­சைப் போக்­கான தீர்­மா­னத்­தக்கு ஆத­ர­வ­ளிக்­காமை கார­ண­மாக  தன்­னிச்­சைப் போக்­கான தீர்­மா­னத்­துக்கு ஜன­நா­யக நடை­மு­றை­யில் இட­மில்லை என்­பது, உலக நாடு­ கள் அமெ­ரிக்க அதி­ப­ரது மிரட்­ட­லுக்கு மசி­யாது தீர்­மா­னத்­துக்கு ஆத­ரவு வழங்­கி­யமை மூலம் உறு­தி­யா­கி­றது.

ரஷ்ய நாட்டு ஆட்­சி­முறை முத­லா­ளித் துவ நடை­மு­றைக்கு மிக
நெருக்­க­மான விதத்­தி­லான தொன்று

ரஷ்யா நாட்­டில் முத­லா­ளித்­து­வத் துக்கு நெருக்­க­மான விதத்­தி­லான ஆட்சி முறையே நடை­மு­றை­யில் இருந்து வரு­கி­றது அந்­நாட்டு  அதி­பர் மற்­றும் அவ­ரது உத­வி­யா­ளர்­க­ளது விருப்­பத்­துக்கு ஏற்­ற­வா­றான முடி­வு­களே அங்கு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

அஸ்­பெஸ்­டஸ் இறக்­கு­மதி மீதான தடை குறித்து இன்­றைய கூட்டு அரசு தீர்­மா­னம் மேற்­கொண்­ட­வேளை, ரஷ்­யா­வில் நில­வும் நிர்­வாக நடை­முறை குறித்த யதார்த்­தத்­தைக் கருத்­தில் எடுத்­துச் செயற்­பட்­டி­ருந்­தால் இத்­த­கைய சிக்­க­லுக்கு முகம் கொடுக்க நேர்ந்­தி­ருக்­காது.

அஸ்­பெஸ்­டஸ் இறக்­கு­ம­திக்­கான தடையை மேற்­கொண்­ட­தன் பின்­னர் அதன் பாவ­னை­யால் ஏற்­ப­டத்­தக்க பாதிப்­புக்­கள் தொடர்­பா­கவோ, வௌ்ளை அஸ்­பெஸ்­டஸ் ரகம் மனித உட­லுக்­குத் தீங்கு விளை­விக்­காது என்ற கருத்தை விஞ்­ஞான பூர்­வ­மாக நிரூ­பிக்­கும் விதத்­தில் நாட்டு மக்­க­ளுக்கு உறு­திப்­ப­டுத்­தவோ, அல்­லது அதற்கு மாற்­றீ­டான உற்­பத்தி குறித்து யோசனை எத­னை­யும் முன்­வைக்­கவோ இன்­றைய கூட்டு அரசு எது வித நட­வ­டிக்­கை­யை­யும் மேற்­கொள்­ள­வில்லை. அத்­தோடு குறித்த தனது தடை கார­ண­மாக ரஷ்ய அர­சால் மேற்­கொள்­ளப்­ப­டும் அச்­சு­றுத்­தல் மற்­றும் அழுத்­தங்­க­ளுக்கு எவ்­வாறு முகம் கொடுப்­பது என்­பது குறித்த முன்­னேற்­பாட்­டுத் திட்­ட­மெ­து­வும் இலங்கை அர­சி­டம் இருந்­தி­ருக்­க­வி்ல்லை.

இத­னா­லேயே தான் மேற்­கொண்ட சரி­யான முடி­வி­லி­ருந்து பின்­வாங்கி, தான் மேற்­கொண்ட இறக்­கு­ம­திக்­கான தடை உத்­த­ரவை மீளப்­பெற்­றுக் கொள்­ளும் பரி­தா­ப­க­ர­மான நிலை இலங்கை அர­சுக்கு ஏற்­பட்­டி­ருந்­தது.

குறித்த பிரச்­சி­னை­யில் ரஷ்­யா­வுக்­குச் சாதக பயன்­கள் கிட்­டும் வகை­யி­லான முடிவை இலங்கை அரசு மேற்­கொண்­டி­ருக்­கத் தேவை­யில்லை. ஆனால் ரஷ்யா இலங்­கைத்­தே­யி­லை­யைக் கொள்­வ­னவு செய்­வதை நிறுத்­திக் கொண்­டால் அத­னால் இலங்­கை­யின் தேயிலை உற்­பத்­தித்­து­றைக்­கும், நாட்­டின் பொரு­ளா­தா­ரத்­துக்­கும் பலத்த பாதிப்பு ஏற்­ப­டும் என்­ப­தில் இரு­வேறு கருத்­துக்­க­ளுக்கு இட­மில்லை.

ஆனால் அஸ்­பெஸ்­டஸ் இறக்­கு­ம­திக்­குத் தடை விதிக்­கா­ம­லேயே அதன் பாவ­னையை நாட்­டில் இயன்­ற­வரை குறைப்­ப­தற்­கும் அத­னூ­டாக இறக்­கு­மதி செயற்­பா­டு­களை நலி­வு­ப­டுத்­த­வும் பல வழி­மு­றை­கள் உள்­ளன. அவற்­றைக் கையாண்டு படி­மு­றை­யில் அஸ்­பெஸ்­டஸ் பாவ­னையை நாட்­டில் குறை­வ­டை­யச் செய்­வ­தற்­கான வழி­மு­றை­களை திட்­ட­மிட்டு முன்­னெ­டுக்க அரு­சுக்கு வாய்ப்­பி­ருந்­தும், அது குறித்து அரசு கவ­னம் செலுத்­தா­மையே, இன்று இந்த விட­யத்­தில் இலங்கை அரசு, ராஜ­தந்­திர அணு­கு­மு­றைத்­தோல்­விக்கு முகம் கொடுக்­கக் கார­ண­மாக ஆகி விட்­டுள்­ளது.

You might also like