16 தடவை புத்தாண்டு கொண்டாடும் விண்வெளி வீரர்கள்!

பன்னாட்டு விண்வெளி ஆய்வு மையத்தில் பணியில் இருக்கும் 6 விண்வெளி வீரர்கள் இன்று ஒரே நாளில் 16 முறை புத்தாண்டுத் தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.

விண்ணில் பன்னாட்டு விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. அங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ரஷியா, அமெரிக்கா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த 6 வீரர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பு அங்கு சென்றனர். விண்வெளிப் பயணத்திற்கு பின்பு இவர்களது உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி அவர்கள் விண்வெளியில் உடற்பயிற்சி செய்வார்கள். அதன்மூலம் விண்வெளியில் எப்படி எல்லாம் உடல் மாற்றம் ஏற்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.

மேலும் இந்த 6 விண்வெளி வீரர்களும் இன்று காலையில் இருந்து பூமியை முன்னும் பின்னுமாக 90 நிமிடத்துக்கு ஒருமுறை சுற்றுவார்கள். அதன் காரணமாக இன்றில் இருந்து நாளை வரை இவர்களுக்கு 16 தடவை சூரிய உதயம் ஏற்படும்.

எனவே கணக்குபடி அவர்களுக்கு இன்று 16 தடவை புத்தாண்டு பிறக்கும். உலகிலேயே இதுபோன்ற சாதனையை இதுவரை யாரும் நிகழ்த்தவில்லை.

You might also like