சிம்புவுடன் இணைந்து பாடினார் ஓவியா!

நடிகை ஓவியா புதிய வருடத்தை வரவேற்கும் பாடலொன்றை பாடியுள்ளார். ஓவியா பாட, சிம்பு இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

2018 புத்தாண்டை வரவேற்கும் விதத்தில் ‘மரண மட்ட’ என்ற பாடலை வெளியிட்டுள்ளார்கள். இந்தப் பாடலை ஓவியா பாட சிம்பு இசைமைத்துள்ளார். சிம்பு, ஹரிஷ் ஆகியோரும் ஓவியாவுடன் இணைந்து பாடியுள்ளனர்.

இந்தப் பாடல் ஓவியாவின் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படுகிறது. சிம்பு இசையமைக்கும் படம் மேலும் இந்த பாடலின் வரிகளைச் சிம்புவும், மிர்ச்சி விஜய்யும் இணைந்து எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பாடல் அனிதா உதீப் இயக்கும் இன்னும் பெயர் சூட்டப்படாத படத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஓவியா ஆர்மி ஹேப்பி ‘நியூ இயரு நைட்டு… ஆகலாமா டைட்டு…’ என ஓவியாவின் குரலில் தெறிக்கும் இந்தப் பாடல் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

You might also like