கீர்த்தி சுரேஷின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்ததன் மூலம் எனது அம்மாவிடம் போட்ட சபதம் நிறைவேறிவிட்டது. நீண்ட நாள் கனவும் நிறைவேறியது என்றும் கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் படம் குறித்து கீர்த்தி கூறியிருப்பதாவது, ”தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நான் பிராமண பெண்ணாக நடித்துள்ளேன். விக்னேஷ் சிவன் கதை சொன்ன விதம் பிடித்திருந்தது. எனது கதாபாத்திரமும் மிகவும் பிடித்தது.நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் இருந்தே சூர்யாவின் தீவிர ரசிகை. எனது அம்மா சூர்யாவின் தந்தை சிவக்குமாருடன் 3 படங்களில் நடித்திருந்தார். ஒரு நாள் நான் சிவக்குமாரின் மகனுடன் நடிக்கிறேனா இல்லையான்னு பாருங்க என எனது அம்மாவிடம் சபதம் செய்தேன். சூர்யாவுடன் நடிக்கும் எனது கனவு நிறைவேறிவிட்டது. சூர்யா அமைதியாக இருப்பார், அதிகம் பேச மாட்டார். ஆனால் ஏதாவது ஆலோசனை கேட்டால் தயங்காமல் உதவி செய்வார்” என்றார்.

You might also like