பேசி உடன் தீருங்கள்!

வவுனியா புதிய பேருந்து நிலை­யத்­தின் பயன்­பாடு தொடர்­பான மோதல் மீண்­டும் பெரு­வெ­டிப்­பாக மாறி­யி­ருக்­கி­றது. அரச பேருந்­து­கள் தமது சேவையை நிறுத்­திப் போராட்­டத்­தில் குதித்­துள்­ளன. இந்த இழு­பறி கடந்த ஒரு வரு­ட­கா­ல­மா­கவே தொடர்ந்து வரு­கின்­றது. அதனை ஆறப்­போட்டு ஆறப்­போட்டு பிரச்­சி­னை­யைத் தீர்க்­க­லாம் என்று முத­ல­மைச்­ச­ரும் முயன்று முயன்று இய­லா­மல்­போக, அதி­ர­டி­யா­கச் சில முடி­வு­களை அறி­வித்­தார். அது இப்­போது பூதா­க­ர­மாகி நிற்­கின்­றது.

வவு­னியா மத்­திய பேருந்து நிலை­யம் நக­ரின் மத்­தி­யில் அமைந்­துள்­ளது. சிறிய நெருக்­க­டி­யான வவு­னியா நக­ரி­னுள் பேருந்து நிலை­ய­மும் இருப்­ப­தால் மேலும் நெருக்­க­டி­யும் போதா­மை­க­ளும் இருக்­கின்­றன. அரச பேருந்து நிலை­யம் நக­ரின் மத்­தி­யில் இருப்­ப­தால் தனி­யார் பேருந்­து­க­ளும் நக­ரில் உள்ள குறுக்கு வீதி­க­ளில் நின்றே சேவை­க­ளில் ஈடு­ப­டு­கின்­றன.

இது நக­ரி­னுள் போக்­கு­வ­ரத்து நெரி­சலை இன்­னும் அதி­க­மாக்­கு­கின்­றது. வவு­னியா நகர விரி­வாக்­கத் திட்­டங்­க­ளின் கீழ் பேருந்து நிலை­யம் நக­ரின் மையத்­தில் இருந்து அகற்­றப்­ப­டு­வ­தன் அவ­சி­யம் வலி­யு­றுத்­தப்­பட்டு வந்­துள்­ளது. இதன் அடிப்­ப­டை­யில் புதிய பேருந்து நிலை­யம் 195 மில்­லி­யன் ரூபா செல­வில் தற்­போ­துள்ள இடத்­தி­லி­ருந்து சுமார் முக்­கால் கிலோ மீற்­றர் தூரத்­தில் சாந்­த­சோலை என்ற இடத்­தில் அமைக்­கப்­பட்­டது.

2017ஆம் ஆண்டு தை மாதத்­தில் அது திறந்து வைக்­கப்­பட்­டது. திறந்த அன்று தவிர ஒரே­யொரு நாள்­கூட கடந்த வரு­டத்­தில் அந்த நிலை­யத்­தில் இருந்து சேவை­கள் இடம்­பெற்­ற­தில்லை.

இந்­தப் பிரச்­சி­னை­யின் பின்­ன­ணி­யில் கட்சி அர­சி­யல் பல­மா­கக் காலூன்றி நிற்­கின்­றது என்­கிற குற்­றச்­சாட்­டும் உண்டு. தனி­யார் பேருந்து உரி­மை­யா­ளர்­கள் ஒரு தரப்­பி­லும் அரச போக்­கு­வ­ரத்­துச் சேவை­யி­னர் ஒரு தரப்­பி­லு­மாக இருப்­ப­தா­கச் சொல்­லப்­ப­டு­கின்­றது.

இது ஒரு­பு­ற­மி­ருக்க வவு­னியா நகர வர்த்­த­கர்­க­ளும் அரச போக்­கு­வ­ரத்­துச் சேவை­யி­னர் பக்­கமே நிற்­கின்­ற­னர். பேருந்து நிலை­யத்தை நக­ரின் மத்­தி­யில் இருந்து அகற்­றி­விட்­டால் தமது வர்த்­தக நட­வ­டிக்­கை­கள் மிக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டு­வி­டும் என்­பது அவர்­க­ளின் கரி­சனை.

வவு­னியா நக­ருக்­குள் காணப்­ப­டும் இட­நெ­ருக்­க­டியை ஒப்­பி­டும்­போது வர்த்­த­கர்­க­ளின் இந்­தக் கோரிக்கை உண்­மை­யில் நியா­ய­மா­னது அல்ல. நக­ரின் எதிர்­கால வளர்ச்சி மற்­றும் நவீ­ன­ம­ய­மாக்­க­லின் கீழ் வர்த்­தக நட­வ­டிக்­கை­கள் விரி­ வா­கும்­போது பேருந்து நிலை­யம் அங்கு அமைந்­தி­ருப்­பது வர்த்­த­கர்­க­ளுக்­குத்­தான் தலை­யி­டி­யாக அமை­யும். எனவே பேருந்து நிலை­யத்தை அங்கு தக்க வைப்­ப­தற்கு வர்த்­த­கர்­கள் எடுக்­கும் முயற்சி ஏற்­பு­டை­ய­தல்ல. தமது வர்த்­த­கம் பாதிக்­கப்­ப­டாத வகை­யில் பேருந்து சேவையை நக­ருக்­குள் ஈர்ப்­பது குறித்த மாற்று வழி­க­ளைத்­தான் அவர்­கள் உண்­மை­யில் நாட­வேண்­டும். அது­தான் அவர்­க­ளுக்­கும் நக­ருக்­கும் பய­னுள்­ள­தாக இருக்­கும்.

புதிய பேருந்து நிலை­யத்­தில் அரச பேருந்­து­க­ளும் தனி­யார் பேருந்­து­க­ளும் தனித் தனி­யாக அன்றி ஒரே இடத்­தி­லி­ருந்து சேவை­யில் ஈடு­ப­டு­வதே தற்­போ­தைய முரண்­பா­டு­க­ளுக்­குக் கார­ணம் என்று சொல்­லப்­ப­டு­கின்­றது. நிலை­யத்தை அரச மற்­றும் தனி­யார் பகு­தி­க­ளா­கப் பிரித்­து­விட்­டால் இந்­தப் பிரச்­சினை சுமு­க­மா­கத் தீர்க்­கப்­பட்­டு­வி­டும் என்று அரச போக்­கு­வ­ரத்­துச் சேவை­யி­னர் தெரி­விக்­கின்­ற­னர்.

இந்த விட­யத்­தில் தற்­கா­லி­க­மான ஓர் இணக்­கப்­பாட்டை எட்­டு­வ­தற்கு இது ஓர் சரி­யான உபா­ய­மா­க­வும் இருக்­கக்­கூ­டும் என்­ப­தால் அத­னைப் பரி­சீ­லித்­துப் பார்ப்­ப­தி­லும் தவ­றில்லை. அரச போக்­கு­வ­ரத்­துச் சேவை­யி­ன­ரி­டம் 35 பேருந்­து­களே உள்ள நிலை­யில் தனி­யா­ரி­டம் 150 பேருந்­து­கள் உள்­ளன. இத­னால் தனி­யார் சேவை­க­ளின் ஆதிக்­கத்­தில் தமது தனித்­து­வத்தை இழந்­து­வி­டப்­போ­கின்­றோம் என்­கிற அரச சேவை­யி­ன­ரின் ஆதங்­க­மும் கவ­னத்­தில் எடுக்­க­ப்ப­ட­வேண்­டிய ஒன்றே!

சம்­பந்­தப்­பட்ட தலை­வர்­க­ளும் பேருந்து சேவை பிர­தி­நி­தி­க­ளும் இணைந்து பேசி இந்­தப் பிரச்­சி­னையை முடி­வுக்­குக் கொண்டு வர­மு­டி­யும். தலை­வர்­கள் இருந்த இடத்­தில் இருந்து முடி­வு­களை எடுக்­கா­ம­லும் தொழிற் சங்­கப் பிர­தி­நி­தி­கள் விடாப்­பி­டி­யாக நிற்­கா­ம­லும் இருப்­ப­தன் மூலமே அத­னைச் சாத்­தி­ய­மாக்க முடி­யும்.

முத­லை­யும் மூர்க்­க­னும் கொண்­டது விடா என்­பது போல நிற்­கா­மல் பொது­மக்­க­ளின் நலன் கருதி இந்­தப் பிரச்­சி­னையை விரை­வில் தீர்க்க வேண்­டி­யது இந்­தத் தரப்­பி­னர் அனை­வ­ர­தும் கடமை.

You might also like