தமிழ்நாட்டு அர­சி­ய­லில் சினி­மா­வின் ஆதிக்­கம்

தமிழ் நாட்­டைப் பொறுத்த வரை­யில் அர­சி­ய­லும், சினி­மா­வும் இரண்­ட­றக் கலந்து வெகு கால­மா­கி­விட்­டது. சினிமா இல்­லாத அர­சி­ய­லும், அர­சி­யல் இல்­லாத சினி­மா­வும் இல்­லை­யென்று கூறு­ம­ள­வுக்கு இவை­யி­ரண்­டும் பிரிக்­க­மு­டி­யாத நிலை­யில் ஒன்­றி­ணைந்து காணப்­ப­டு­கின்­றன. இதற்­குக் கார­ணம் தமிழ்­நாட்டு மக்­க­ளின் அளவு கடந்த சினிமா மோகமே என்­ப­தைச் சொல்­லத் தேவை­யில்லை.

சினிமா நடிக, நடி­கை­க­ளுக்­குக் கோயில் கட்­டிக் கும்­பி­டு­கின்ற அள­வுக்கு தமிழ்­நாட்டு மக்­கள் சினிமா மோகத்­தில் மூழ்­கிக்­கி­டக்­கின்­ற­னர். ஒரு­வேளை உண­வுக்கு வழி­யில்­லாது விட்­டா­லும் சினிமா பார்ப்­பதை இவர்­க­ளால் கைவிட முடி­ய­வில்லை. பெரிய நடி­கர்­க­ளுக்கு மன்­றங்­களை அமைத்­துச் செயற்­ப­டு­வ­தில் இவர்­கள் தமது நேரத்­தைச் செல­விட்டு வரு­கின்­ற­னர். தமது ஆத்­மார்த்த நடி­கர்­க­ளின் திரைப்­ப­டங் கள் வௌியா­கும்­போது அதை­யொரு விழா­வா­கவே இவர்­கள் கொண்­டா­டு­கின்­ற­னர். மக்­க­ளின் மன­ம­றிந்து அர­சி­யல்­வா­தி­க­ளும் சினி­மா­வுக்கு முக்­கி­ யத்­து­வம் கொடுத்­துச் செயற்­ப­டு­வ­தைக் காண­மு­டி­கின்­றது.

சினிமா நடி­கர்­கள் கம­ல­ஹா­ச­ன், ரஜ­னி­காந்த் ஆகியோரது
அர­சி­யல் பிர­வே­சம்

தற்­போது தமிழ்­நாட்­டின் புகழ்பெற்ற நடி­கர்­க­ளாக விளங்­கும் கம­ல­ஹா­சன், ரஜி­னி­காந்த் ஆகி­யோ­ரும் அர­சி­ய­லில் நுழை­வ­தற்கு முயற்சி செய்­வ­தைக்­காண முடி­கின்­றது. தமது ரசி­கர்­கள் தம்­மைக் கைவிட மாட்­டார்­கள் என்ற நம்­பிக்­கையே இவர்­களை அர­சி­ய­லின் பக்­கம் இழுத்­து­விட்­ட­தெ­னக் கூற முடி­யும்.

1967 ஆம் ஆண்டு தமிழ்­நாட்டு முத­ல­மைச்­சர் பொறுப்பை ஏற்­றுக்­கொண்ட அறி­ஞர் சி.என். அண்­ணாத்­துரை சினி­மாப்­ப­டங்­க­ளுக்கு கதை, வச­னம் எழு­திய வகை­யில் சினி­மா­வு­டன் தொடர்­பு­க­ளைக் கொண்­டி­ருந்­தார். கலை­ஞர் மு.கருணைநிதி­யும் சினி­மாத் துறை­யு­டன் நீண்ட தொடர்­பு­க­ளைக் கொண்­டி­ருந்­தார். 1952 இல் வௌியான பரா­சக்தி என்ற பெய­ரி­லான திரைப்­ப­டத் துக்கு கரு­ணா­நி­தியே கதை.வச­னம் எழு­தி­னார்.

அதில் நாத்­தி­க­வா­தக் கருத்­துக்­கள் நிறை­யவே காணப்­பட்­டன. அப்­போது தி.மு.க.வின் கொள்கை நாத்­தி­க­வா­தத்தை முன்­னி­லைப்­ப­டுத்­தி­யி­ ருந்­தது. அந்­தக் கட்­சி­யில் முக்­கிய பொறுப்­புக்­களை வகித்­த­வர் என்ற வகை­யில் கரு­ணா­நி­தி­யின் கதை வச­னத்­தில் உரு­வான பரா­சக்தி திரைப்­ப­டத்­தில் நாத்­தி­வா­தக் கருத்­துக்­கள் நிறை­யவே காணப்­பட்­டன. ஆத்­மீக வாதி­கள் நிறைந்த தமிழ்­நாட்­டில் பரா­சக்தி திரைப்­ப­டம் மிகப்­பெ­ரிய வெற்­றி­யைப் பெற்­றது.

மறைந்த நடி­கர் தில­கம் சிவாஜி கணே­ச­னின் முத­லா­வது படம் இது­வென்­பது இங்கு குறிப்­பி­டத்­தக்­கது. இந்­தப் படத்­தின் மூல­மாக அவ­ரும் நட்­சத்­திர அந்­தஸ்­தைப் பெற்­றுக் கொண்­டார். இவ­ரும் ஆரம்­பத்­தில் தி.மு. கவில் இணைந்து பணி­யாற்­றி­னார். பின்­னர் காங்­கி­ரஸ் கட்­சி­யில் சேர்ந்து கொண்­டார். எம்.ஜி.ஆரின் மறை­வுக்­குப் பின்­னர் சிவாஜி கணே­சன் தனிக்­கட்சி ஒன்றை ஆரம்­பித்த போதி­லும் அத­னால் தமிழ் மக்­க­ளது ஆத­ர­வைப் முடி­ய­வில்லை.

சினிமா பிர­பல்­யத்­தால் அர­சி­ய­லில் பிர­கா­சித்­த­வர்­க­ளில்
எம்.ஜி.ஆருக்கு முதன்மை இட­முண்டு

அர­சி­ய­லில் ஈடு­பட்ட சினிமா நடி­கர்­க­ளில் மறைந்த எம்.ஜி.இரா­மச்­சந்­தி­ரன் அள­வுக்கு எவ­ரா­லும் பிர­கா­சிக்க முடி­ய­வில்லை என்­பதை ஏற்­றுக்­கொள்­ளத்­தான் வேண்­டும். தி.மு.க.வில் ஒரு தொண்­ட­னா­கச் சேர்ந்து பணி­யாற்­றிய அவர், .தி.மு.க. தலை­வ­ரான அறி­ஞர் அண்­ணா­வின் அபி­மா­னத்தை வெகு­வாக ஈர்த்­துக்­கொண்­டார். இத­னால் கட்­சிக்­குள் அதிக செல்­வாக்­கை­யும் பெற்றுக் கொண்­டார். அண்­ணா­வின் மறை­வுக்­குப் பின்­னர் முத­ல­மைச்­சர் பத­விக்­குக் கடும் போட்டி நில­வியது.

நாவ­லர் நெடுஞ்­செ­ழி­யனே அந்­தப்­ப­த­விக்­குத் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வார் என்ற நிலை­யில் எம்.ஜி.ஆர் கட்­சிக்­குள் தமக்­கி­ருந்த செல்­வாக்­கைப்­ப­யன்­ப­டுத்தி கரு­ணா­நி­தியை முத­ல­மைச்­சர் பத­வி­யில் அம­ரச் செய்­தார். ஆனால் அதே கரு­ணா­நிதி எம்.ஜி. ஆரைக்­கட்­சி­யி­லி­ருந்து நீக்­கி­னார்.
அதன்­பின்­னர் அ.தி.மு.க என்ற கட்­சி­யைப் புதி­தாக ஆரம்­பித்து எவ­ரா­லும் அசைக்க முடி­யா­த­தொரு அர­சி­யல் வாதி­யாக எம்.ஜி.ஆர் விளங்­கி­னார். அவ­ரால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­ தான் மறைந்த முன்­னாள் முத­ல­மைச்­ச­ரான ஜெய­ல­லிதா என்­பது அனை­வ­ருக்­கும் தெரிந்த விட­யமே. ஒரு சினிமா நடி­கை­யாக வலம் வந்த அவர் தமிழ் நாட்டை ஆளக்­கூ­டிய அள­வுக்கு அர­சி­ய­லில் உயர்ந்த இடத்­தைப் பிடித்­துக் கொண்­டார்.

சினிமாவின் மூலம் அரசியலில் பிரவேசித்த அனைவராலும் அரசியலில் தலைதூக்க முடியவில்லை

மேலே குறிப்­பி­டப்­பட்­ட­வர்­க­ளைத் தவிர சினி­மா­வு­டன் தொடர்­பு­டை­ய­ வேறு சிலரும் தமிழ் நாட்டு அர­சி­ய­லில் தம்மை இணைத்துக் கொண்­டுள்­ள­னர். ஆனால் இவர்­க­ளால் அர­சி­ய­லில் பிர­கா­சிக்க முடி­ய­வில்லை. இந்த நிலை­யில்­தான் கம­ல­ஹா­ச­னும், ரஜி­னி­காந்­தும் அர­சி­யல் பிர­வே­சம் செய்­வ­தற்­கான முன் முயற்­சி­க­ளில் இறங்­கி­யுள்­ள­னர். சில­வேளை தமிழ்­நாட்­டின் தற்­போ­தைய அர­சி­யல் சூழ்­நிலை அவர்­களை இதற்­குத் தூண்­டி­யி­ருக்­க­லாம் என்­பதை மறு­த­லிக்க முடி­யாது. சினி­மா­வில் இவர்­கள் சாத­னை­கள் ப­டைத்­தி­ருக்­கக் கூடும். ஆனால் சினிமா வேறு, அர­சி­யல் வேறு என்­பதை இவர்­கள் முத­லில் புரிந்து கொள்ள வேண்­டும்.

குறிப்­பிட்ட அளவு ரசி­கர்­களை மட்­டுமே நம்பி அர­சி­ய­லில் இயங்­கு­வது புத்­தி­சா­லித்­த­ன­மா­ன­தல்ல. எம்.ஜி.ஆர் தமிழ்­நாட்டு மக்­க­ளது அமோக ஆத­ர­வைப் பெற்­ற­தன் கார­ண­மா­கவே அர­சி­ய­லில் சிறந்து விளங்க முடிந்­தது. ரஜ­னி­யும், கம­லும் எந்­தக் கட்­சி­யு­ட­னும் இணைந்து பணி­யாற்­றாது தமது தனிப்­பட்ட செல்­வாக்கை மட்­டுமே நம்பி அர­சி­ய­லில் இறங்­கி­யி­ருப்­பது ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல.

இதே வேளை சினிமா நடி­கர்­கள் தமது தொழி­லு­டன் தம்மை மட்­டுப்­ப­டுத்­திக் கொள்­வதே புத்­தி­சா­லினமா­னது. இதை­வி­டுத்து அர­சி­ய­லில் இறங்­கித் தம்மை மட்­டு­மல்­லாது மக்­க­ளை­யும் குழப்­பு­ வ­தற்கு முயல்­வதை நல்­ல­தொரு செயற்­பா­டா­கக் கொள்ள முடி­ய­வில்லை.

You might also like