மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் பூமிகா

தமிழ், தெலுங்கு படங்களில் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த பூமிகா, தற்போது படங்களில் எந்த வேடத்திலும் நடிப்ப்பதற்குத் தயார் என்று கூறியுள்ளார்.

பூமிகா கடந்த சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். இப்போது தெலுங்கில் நானி, சாய்பல்லவி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘எம்.சி.ஏ’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வெற்றி பெற்றது.

பூமிகாவின் பாத்திரம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. நடிப்பும் பேசப்படுகிறது. இதை தொடர்ந்து நாகசைதன்யா நடிக்கும் ‘ஷாவ்யாசச்சி’ படத்திலும் பூமிகா நடிக்கிறார்.

”‘எம்.சி.ஏ’ படம் எனக்கு திரை உலகில் மீண்டும் வலம் வர ஒரு வாய்ப்பை வழங்கி இருக்கிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். தற்போது பல இயக்குனர்கள் என்னிடம் கதை சொல்லி வருகிறார்கள். இப்படிப்பட்ட வேடத்தில் தான் நடிப்பேன் என்று நான் சொல்லமாட்டேன். எந்த வேடமாக இருந்தாலும், அது ஏதாவது ஒரு வகையில் கதையுடன் சம்பந்தப்பட்டதாக இருந்தால், நிச்சயம் அதில் நடிப்பேன். எனது வயதை மீறிய நல்ல அனுபவமான வேடங்களில் அதிகமாக நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என்னை நேசிக்கும் ரசிகர்களுக்கு நன்றி” என்று பூமிகா தெரிவித்துள்ளார்.

You might also like